ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் சோவியத் துருப்புக்கள் வெளியேற்றம்

syria 3

2300 வருடங்களுக்கு முன் மாவீரன் அலெக்ஸாண்டர் சொன்னது நிரூபனம்

அவர் சொன்னார் : “ஆப்கானிஸ்தானுக்குள் நீங்கள் செல்வது சுலபம். ஆனால் அங்கிருந்து வெளியேறுவது கடினம்”
லத்தீப் பாரூக்


2018 டிசம்பர் 19 புதன்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தான் உத்தரவிட்டுள்ளதாக திடீர் அறிவிப்பை விடுத்தார். ISIS ஐ தோல்வியுறச் செய்யும் பணிகள் பூர்த்தி அடைந்து விட்டதாக இதற்கான காரணத்தை அவர் முன்வைத்தார்.

சுதந்திரமான மேலைத்தேச பத்தி எழுத்தாளர்களின் கருத்துப் படி அல்குவைதா மற்றும் தலிபான்களைப் பேலவே ISIS என்பதும் அமெரிக்காவாலும் மற்றும் இஸ்ரேலினாலும் உருவாக்கப்பட்ட ஒன்றே. இஸ்லாத்தை சிதைத்து சிரியாவை சின்னாபின்னப்படுத்தும் நோக்கில் அந்த நாட்டுக்குள்; தங்களது இராணுவ ரீதியான செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய நாசகார சக்தியே ISIS . சில தகவல்களின் படி காயம் அடைந்த ISIS ஆயுதபாணிகளுக்கு இன்னமும் இஸ்ரேலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிரியாவில் ISIS நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் பொறுப்பாக உள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் இஸ்ரேல் யுத்த வெறியர்களின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகத் திகழும் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேலைத்தேச ஊடகங்கள் இஸ்லாமிய கிலாபத் (ஆட்சிமுறை) மற்றும் இஸ்லாமிய சலாசாரம் என்பனவற்றை ஸ்தாபிப்தற்கான ஒரு தீவிரவாத இயக்கமாக ISIS ஐ சித்தரித்துக் காட்டுவதில் தீவிர பங்காற்றின. இது உலகை தவறாக வழிநடத்த அவர்கள் மேற்கொண்ட தந்திரமாகும்.

ஏவ்வாறேனும் மத்திய கிழக்கை ஆட்டம்காண வைக்கும் வகையில் சிரியாவை சீர்குலைத்து அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் இலக்கு ஓரளவு எட்டப்பட்டுள்ளது. யூத கிறிஸ்தவர்களின் ஆணைகளுக்கு அடிபணிந்து சேவகம் புரியும் புதிய மத்திய கிழக்கை உருவாக்கி அதில் மேலாதிக்க சக்தியாக இஸ்ரேலை நிலைநிறுத்தும் முயற்சியும் பலித்துள்ளது.

சிரியாவில் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு அமுல் செய்யப்பட்ட இன ஒழிப்பு படுகொலைகளின் இரத்தினச் சுறுக்கம் இதுதான்.

சிரியாவின் செழுமை மிக்க வரலாறும் கலாசாரமும் சுமார் எண்ணாயிரம் வருடங்கள் பழமையானவை. மத்திய கிழக்கில் மிக வேகமாக வளர்ச்சிகண்டு வந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்த நாடு. கீழ்மட்ட மற்றும் நடுத்தர பொருளாதார அடிப்படையை அந்த நாடு கொண்டிருந்தது. விவசாயம், கைத் தொழில்துறை, எண்ணெய்வளம், சுற்றுலா என பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய கூறுகளை அந்த நாடு கொண்டிருந்தது. அந்த மக்களுக்கு சுகாதார வசதி இரண்டாம் நிலை வரையான கல்வி என்பன அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டன.

வட ஆபிரிக்காவில் தொடங்கிய அரபு வசந்த எழுச்சிப்; புயல் எகிப்தின் சர்வாதிகாரியாக இருந்த ஹொஸ்னி முபாரக் போன்ற சிலரை சாய்த்து விட்டு சிரியாவின் பக்கம் வீசத் தொடங்கியது. சிரியாவின் ஜனாதிபதியாக இருந்து இப்போது கசாப்புக் கடைக்காரனாக மாறியிருக்கும் பஷர் அல் ஆஸாத்தின் அடக்கு முறையிலும் கொடுங்கோல் ஆட்சியிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சிரியா மக்கள் இந்த அரபு வசந்தத்தை தழுவி தாங்களும் சுதந்திரம் பெறலாம் என்ற நம்பிக்கையோடு அரசுக்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சிரியாவில் அன்றைய நிலையில் அரச படைகளால் ஆள்கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக இருந்தது. அவ்வாறு தமது குடுமபத்தில் யாராவது ஒருவர் படையினராலோ அல்லது புலனாய்வு பிரிவினராலோ அழைத்துச் செல்லப்பட்டால் அவர்கள் எங்கே கூட்டிச் செல்லப்படுகின்றார்கள்? எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பன போன்ற நியாயமான கேள்விகளுக்கு தங்களுக்கு பதில் கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்த மக்களின் குறைந்த பட்ச கோரிக்கையாக இருந்தது.

2011ல் சிரியாவின் வட பகுதியில் ஏற்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது அஸாத்தின் படைகள் வன்முறைகளை ஏவி விட்டனர். அடாவடித் தனங்களை கட்டவிழத்து விட்டனர். தனது மக்களின் மனிதாபிமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அஸாத் மறுத்தார். மாறாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதை செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதுமாக கொடூரங்கள் நீடித்தன. இவற்றுக்கு மேலதிகமாக அப்பாவி மக்களின் வதிவிட பகுதிகள் மீது குண்டுகள் விசப்பட்டு ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

அரசை எதிர்த்து நின்ற குழுக்களிடையே ஒற்றுமை ஏற்படத் தவறியது. இதனால் அரபு வசந்த சீர்திருத்தங்களை எதிர்ப்பார்த்த மக்கள் ஆயுதங்களை ஏந்தும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மத்திய கிழக்கை அடிப்படையாகக் கொண்டு தனக்கென தனியானதோர் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்த ரஷ்யா மற்றும் தமது ஷீஆ அணியைச் சேர்ந்த கொடுங்கோல் ஆட்சியாளரான ஆஸாத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஈரான் என்பன அவசர அவசமாக இந்தப் பிரசசினையில் மூக்கை நுழைத்தன. பதிலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் என்பனவும் தமது அரபு உலக கைக்கூலிகளான சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவற்றை துணைக்கு அழைத்துக் கொண்டு களத்தில் இறங்கின. கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கள், வயது பால் வித்தியாசங்கள் இன்றி கொடூரமான கொலைகள், உட்கட்டமைப்பு வசதிகளை சிதைத்தல் என எல்லா தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக சிரியாவை பதம் பார்த்தன.

ஏழு வருடங்களாக அங்கு நீடிக்கும் யுத்தம், மோதல், தாக்குதல், பல்லாயிரம் வருட பாரம்பரியம் மிக்க கராசார நிலையங்கள் மற்றும் சின்னங்களின் அழிவுகள், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்கள் என்பனவற்றின் தொடராக பண்டைய பாரம்பரியமும் பெருமையும் மிக்க ஒரு நாடு இன்று வெறும் வெற்றுப் பூமி ஆக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா என்பனவற்றின் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்கள் சிரியாவில் மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களையும் இந்தத் தாக்குதல்கள் காவு கொண்டுள்ளன.

ஒரு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு தமது சொந்த வீடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த சிரியா மக்களில் சுமார் 55 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இன்று அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 65 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அழிவுகளின் எச்சங்கள்தான் இப்போது அந்த நாட்டில் எஞ்சி உள்ளன. அந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்கட்டமைப்பும் இன்று சிதைந்து போயுள்ளது.

லெபனானிலும், துருக்கியிலும் ஜோர்தானிலும் பெருமளவு சிரியா மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுள் பலர் ஐரோப்பாவில் சிறப்பாக வாழலாம் என்ற எதிர்காலக் கனவுகளோடு நாட்டை விட்டு வெளியேறியவர்கள். ஆனால் அங்கு அவர்கள் பராமரிக்கப்படும் விதம் இந்த மக்களை இடை நடுவில் நிறுத்தி உள்ளது.

இன்று அஸாத் சிரியாவில் தனது நிழலை தான் ஆட்சி செய்து வருகின்றார் என்று தான் கூற வேண்டி உள்ளது. அஸாத்தின் யுத்தக் குற்றங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு புனர்வாழ்வளிக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் முனைந்து வருகின்றார். புடினின் பிரதிநிதியாக அண்மையில் சூடானின் சர்வாதிகாரி ஒமர் அல் பஷீர் சிரியா சென்று அஸாத்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பஷீர் ரஷ்ய விமானம் ஒன்றில் தான் சிரியா சென்றுள்ளார். இது பஷீருக்கு ரஷ்ய ஜனாதிபதி அளித்த லஞ்சமா?

ஒரு காலத்தில் செழிப்போடு வாழ்ந்த சிரியா மக்கள் தங்களுக்கான உணவு நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள நிலையம் ஒன்றுக்கு அருகில் கூடி நிற்கும் காட்சி

டிரம்ப் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்தும் தனது படைகளில் கிட்டத்தட்ட அரைவாசியை அதாவது சுமார் ஏழாயிரம் பேரை திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. கடந்த 17 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கொண்டிருந்த யுத்த நிலைப்பாட்டில் இது திடீர் மாற்றம். ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை இது ஆச்சரியத்தில் ஆழத்தி உள்ளது.

அமெரிக்கா ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளும் ஆப்கானிஸ்தானில் தமது இராணுவ சாகசத்தில் மண்ணைக் கவ்வி உள்ளன.

இஸ்லாத்தினால் வலுவூட்டப்பட்ட பண்டைய பாரம்பரிய முறைமைகளைக் கொண்ட ஒழுங்கமைப்பு அதன் மூலமான தமது சுதந்திரம் மற்றும் பாரம்பரிய மரபுரிமை என்பனவற்றுக்கு பெயர்போன மக்கள் தான் ஆப்கானிஸ்தானியர்கள்.

ஆப்கானிஸ்தானின் நவீன கால வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் சரி அவர்களின் பண்டைய வரலாற்றை நோக்கினாலும் சரி அந்தப் பகுதியைக் கடந்து உலகின் சக்தி மிக்க பல இராணுவங்கள் சென்றுள்ளன. அவற்றுள் சில அங்கு தற்காலிக கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தான் மக்களின் வீர பாரம்பரிய பெருமைகளைப் பேசும் பல பாடல்களையும் கவிதைகளையும் கதைகளையும் அவர்களின் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீதான பண்டைய படை எடுப்புக்கள் மற்றும் அண்மைக்கால ரஷ்யா மற்றும் அதனைத் தொடர்ந்த அமெரிக்க படையெடுப்புக்கள் என்பனவற்றின் போதும் ஆப்கானிஸ்தானியர்கள் தாங்கள் மிகவும் சக்தியும் வளமும் மிக்க போர் வீரர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அதன் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த சக்தி மிக்க பிரிட்டிஷ் ஊடுறுவல்காரர்களை விரட்டி அடித்த பெருமை ஆப்கானிஸ்தான் மக்களைச் சாரும். அதேபோல் தான் அண்மைக் காலத்தில் உலக வல்லரசுகளுள் ஒன்றாகத் திகழ்ந்த சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானின் வீரம் மிக்க போராளிகளிடம் புறமுதுகு காட்டி ஓடும் நிலை ஏற்பட்டது. அதன் கடினமான, கரடு முரடான, ஏற்றத் தாழ்வான நிலப்பாங்கின் முன்னால் அந்த மக்களை எதிர்த்தப் போராடும் சக்தி உலகின் வல்லமை மிக்க எந்த இராணுவத்துக்கும் கிடையாது என்பதை அவர்களின் வீர காவியங்கள் பறைசாற்றி நிற்கின்றன. 1979 டிசம்பர் குளிர் காலத்தில் அன்றைய ரஷ்ய அதிபர் லியொனிட் பிரஷ்நேவ் ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை அனுப்பி தனது கம்யூனிஸ கைப்பொம்மையான பர்பராக் கர்மால் தலைமையில் அங்கு ஒரு ஆட்சியை நிறுவினார்.

ஆப்கானிஸ்தானின் பிரத்தியேகமான அரசியல் ஒழுங்கமைப்பு இதனால் சிதைக்கப்பட்டு அங்கு பெரும் அரசியல் சர்ச்சையையும் போராட்ட எழுச்சியையும் இது உருவாக்கியது. பொருளாதார உற்கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டு ஏற்கனவே வறுமையில் இருந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்தியது. ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் ரஷ்யா அதன் இராணுவக் கொடூரத்தை அங்கு கட்டவிழ்த்து விடத் தொடங்கியது. ஆயி;ரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர். காலாகாலமாக அந்த மக்கள் கட்டிக்காத்து வந்த சமய ரீதியான சமூக கட்;டமைப்புக்களும் மரபுகளும் சிதைக்கப்பட்டன.

1979ல் ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் ரஷ்யா ஊடுறுவிய ஒரு தசாப்த காலத்தில் 15 லட்சம் ஆப்கானிய மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பத்து லட்சம் பேர் காயமாக்கப்பட்டு முடமாக்கப்பட்டனர். 62லட்சம் பேர் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் உலகின் ஏனைய பல நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தனர். 22 லட்சம் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தனர். இந்தக் காலப் பகுதியில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு கிட்டத்தட்ட 644.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் உள்ள சர்வதேச உறவுகள் நிலையத்தின் கிரில் கொக்டிஷ் என்பவர் தனது நூலில் இந்த யுத்தம் ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமே அழிவுகளை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது. ஆப்கானிஸ்தானின் விவசாய வளத்தில் பாதி துடைத்தெறியப்பட்டது. அதன் வீதிக் கட்டமைப்பில் 70 வீதம் நாமாக்கப்பட்டது. அந்த நாட்டின் சுமார் 15 ஆயிரம் கிராமங்களில் சுமார் ஐயாயிரம் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. அல்லது வீதிகளும் கிணறுகளும் நாசமாக்கப்பட்டதால் பொருளாதார ரீதியாக சிதைக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில் 1989ல் ரஷ்யா அதன் துருப்புக்களைவ வாபஸ் பெற்றது. அதன் அடுத்த கட்டமாகவே சோவியத் யூனியனின் ஒட்டு மொத்த கட்டமைப்பும் சிதைவடைந்தது. ஆப்கானிஸ்தான் போராட்டத்துக்கு அnமிக்கா, சீனா, சவூதி அரேபியா போன்ற நாடுகள் வெவ்வேறு காரணங்களுக்காக ஆதரவளித்தன.

சோவியத் படைகள் வெளியேறியதும், அந்த நாட்டின் கட்டுப்பாட்டை தம்வசம் கொண்டு வர ஆப்கானிஸ்தானின் பல குழுக்களும் தமக்கிடையே சண்டையிடத் தொடங்கின. கடைசியில் 1994ல் தலிபான் ஆயுத பாணிகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தினர்.

தனது தந்தை புஷ்ஷின் வழியைப் பின்பற்றி அவரது மகன் புஷ்ஷ{ம் சதாம் ஹுஸைனை தூண்டிவிட்டு குவைத் மீது படையெடுப்பு நடத்தி வளைகுடா யுத்தத்துக்கு தூபமிட்டார். ஈராக்கியர்களைக் கொன்று குவித்து அந்த நாட்டை துவம்சம் செய்வதுதான் இந்த யுத்தத்தின் ஒரே நோக்கம். இதன் மூலம் வளைகுடா பிராந்தியம் முழுவதையும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுவருவதே பிரதான திட்டமாகும். அதன் பிறகு மகன் ஜோர்ஜ் புஷ் செப்டம்பர் 11 தாக்குதலை நடத்தி அதன் மூலம் தனக்கு சாதகமான கூட்டணி ஒன்றை உருவாக்கி செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்ட 27 நாற்களுக்குள் ஆப்கானிஜஸ்தான் மீது படையெடுப்பு நடத்தி தலிபான்களின் அரசை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அவரும் அந்த நாட்டு மக்களை படுகொலை புரிந்து அங்கு மேலும் அழிவுகளை உருவாக்கினார். சோவியத் யூனியன் பூர்த்தி செய்ய மறந்துவிட்டுச் சென்ற அழிவுகளை புஷ் பூரணப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பு தான் அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய மோதலாகப் பதிவாகி உள்ளது. மேலும் இது தான் அடிமெரிக்காவுக்கு மிகவும் செலவு மிக்க அதிக மனித உயிர் பலியை ஏற்படுத்திய மோதலாகவும் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்கு அமெரிக்கா மட்டும் 700 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா இந்த மோதலில் அதிக உயிர் இழப்புக்களைச் சந்தித்திருந்தாலும் அவர்கள் அதுபற்றி குறைவான தரவுகளை வெளியிட்டு உலகை ஏமாற்றி உள்ளனர்.

வீக்லி ஸ்டேண்டட் சஞ்சிகையின் பத்தி எழுத்தாளர் ஹோமஸ் ஜோஸலின் 2018 அக்டோபர் 18ல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் “அமெரிக்கா ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டது. அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம். இந்த மோதல் ஒரு இக்கட்டான நிலை என்று அமெரிக்க இராணுவம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் தவறிழைக்கப் போவதில்லை என்றும் செப்டம்பர் 11 அசல் யுத்தமும் தோல்வி அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ஏழாயிரம் அமெரிக்கத் துருப்புக்களை வாபஸ் பெறப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மாவீரன் அலக்ஸாண்டர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தான் ஆப்கானிஸ்தான் நீங்கள் இலகுவாகப் பிரவேசிக்க முடியுமான ஒரு நாடு. ஆனால் ஒருபோதும் அங்கிருந்து வெளியேறவே முடியாது என்று. அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அங்கு சந்தித்துள்ள தோல்விகள் மூலம் தற்போது இது நிரூபணமாகி உள்ளது.

அன்றைய சோவியத் யூனியன் அல்லது இன்றைய ரஷ்யாவுக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெறுமா? ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்தி கடந்த 40 வருடங்களாக அந்த மக்களைத் தவிக்க விட்ட குற்றத்துக்காக அமெரிக்காவும் ரஷ்யாவும் சாவதேச சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுமா?. இது நடக்கும் என்று ஒரு போதும் எண்ணிப்பார்க்கக் கூட முடியாது. காரணம் உலக வல்லரசுகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த அழிவுகளாலும் இன ஒழிப்பு செயற்பாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்கள் ஆவர் (முற்றும்)

Avatar

About லதீப் பாரூக்

View all posts by லதீப் பாரூக் →

One Comment on “ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் சோவியத் துருப்புக்கள் வெளியேற்றம்”

  1. ஈரான் அசாத் அரசுக்கு ஆதரவாக களமிரங்கியது சீயா நன்பர் என்பதற்காக என்றால் அதே ஈரான் பாளஸ்தீன சுன்னி போராட்ட குழுக்களான இஸ்ரேளுக்கு எதிராக போராடும் ஹமாஸ் , ஜிஹாத் இயக்கங்களுக்கு ஆயுதபொருளாதார அரசியல் ஆதரவு வழங்குவதை எவ்வாரு வர்னிக்களாம். சீயா சுன்னி என்ற வட்டத்தில் இருந்து வெழயே வந்தாள் உண்மை என்ன என்பதை புரியலாம்.

Comments are closed.