எனது அன்புக்குரிய ஹிஸ்புல்லா சேருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
நான் உங்களுடைய மிக தீவிர ஆதரவாளர் ஒருவரின் மகள் என்னுடைய தந்தை அடிக்கடி சொல்வார் அவருடைய மௌத்துக்கு பின் அல்லது உங்களுடைய மௌத்துக்குப் பிறகுதான் எந்த அரசியல்வாதிக்கும் நான் வாக்களிப்பேன் என்று.

அந்தளவு உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்னுடைய மூத்த நாநாவிற்கும் வாப்பாவிற்கும் அடிக்கடி உங்கள் சம்பந்தமாக உரையாடும்போது கருத்து முரன்பாடுகள் ஏற்படும் சில நாட்களில் இரவு நேரத்தில் நானாவை வெளியில் துரத்தி கதவை அடைத்திருக்கிறார் அந்தளவு நீங்கள் என்றால் அவர் சொந்தப்பிள்ளை என்றுகூட பார்க்காதவர்.

எந்த தேர்தல் வந்தாலும் ஊண், உறக்கமின்றி இரவு பகலாக கஷ்டப்படுவார் தேர்தல் காலங்களில் எத்தனையோ நாட்கள் அவரை நாங்கள் விளித்திருக்கும்போது சந்திக்காமல் இருந்திருக்கிறோம் வீட்டுக்கு எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்று வீட்டில் யாருக்கும் தெரியாது அப்படி தன்னை வருத்திக்கொள்வார்.

இத்தனை கடந்து சென்ற தேர்தல்களிலும் நீங்கள் எந்தக்கட்சியல் போட்டியிட்டாலும் உங்களுக்காக பாடுபடுவார் நீங்கள் யாரைகாட்டி வாக்களிக்கச்சொன்னாலும் அதற்கு ஏன் என்ற கேள்வியில்லாமல் தானும் வாக்களித்து என்னுடைய தாய், எங்களையும் வாக்களிக்கச்சொல்வார். இப்படியானவர் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் உங்களுடைய ஒட்டகச் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கச் சொன்னார் அவ்வாறே நாங்கள் எல்லோரும் செய்தோம்.

ஆனால் நேற்றய முன்தினம் இரத்தினபுரிக்கு தன்னுடைய தொழில் விடயமாக சென்று வீடு திரும்பியவர் மிக மன உழைச்சலுடன் அவருடைய வாழ்வில் முதல்முறையாக உங்களது பெயரை கூறி இவர் மிகப்பெரிய சமூகத்துரோகி என்ற வசணத்தை பாவித்தார். சமையலறையில் நின்ற உம்மா ஏதோ கைதவறவிட்டதுபோன்ற சத்தம் கேட்டது. என்ன? என்ன பிரச்சினை என்று பதறியபடி கேட்டார்.
வாப்பாவின் மௌனம் கலைந்தது, அவர் பேச ஆரம்பித்தார் நான் இவருக்காக எவ்வளவோ பாடுபட்டுள்ளேன் அதற்கான கூலியாக அவருடைய காரியாலயத்தில் டீ குடித்திருப்பேன் என்னுடைய எத்தனையோ ஆயிரங்களை எனக்கு தேவைகள் அதிகம் இருந்தபோதும் அவருக்காக செலவு செய்துள்ளேன் அதற்கெல்லாம் அவரிடம் எதிர்பார்த்தது அவர் இந்த சமூகத்திற்காக சேவை செய்ய வேண்டும் நல்ல வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதே அன்றி வேறு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது ஒரு நாள்கூட என்னுடைய பிரச்சினைகளை இவரிடம் சொல்லி எந்த உதவியும் கேட்டது கிடையாது.

இவர் எனக்கு செய்யாவிட்டாலும் இந்த மக்களுக்காக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரோடு இருக்கும்போது அவர் செய்கின்ற எல்லாமே சரி என்று எனக்குத் தோன்றியது.

தேர்தல் நாள் அன்றை, இன்று நமது புனிதப்போருடைய நாள் என்று சொல்வார் அன்று நாம் நமது சமூகத்தின் பிரதிநிதியை காப்பாற்றிக்கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்பார் அவைகளெல்லாம் எனக்கு சரியாகவேபடும் எத்தனையோ பேரை அடித்து, காயப்படுத்தி, மிரட்டி எல்லாம் இருக்கிறார்கள் அவை எல்லாம் எனக்கு அப்போது சரி என்றே விளங்கும்.

ஆனால் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது முக்கியமான பிரமுகர்கள் என்று அடையாளப்படுத்தியவர்களோடு ஒர் கலந்துரையாடலை நடாத்தினார். அதில் எங்களுக்கும் அரசியல் இருக்கின்றது எமக்கும் அதிகாரங்கள் வேண்டும் நாங்களும் எங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் நமது பல்கலைக்கழகம் முக்கியம் என்ன விலைகொடுத்தாவது அதை பாதுகாக்கவேண்டும் இதனால் நாம் தனித்து ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளராக கழமிறங்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதின் தாட்பரியம் முந்தயநாள்வரை எனக்கு விழங்கவில்லை.

ஆனால் என்னுடைய சிங்கள நன்பர் ஒருவர் அவருடைய தொலைபேசியில் ஓர் வீடியோவை காட்டினார். அதில் ஹிஸ்புல்லா சேர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவைகள் மக்கள்மத்தியில் போட்டுக்காட்டப்படுகின்றது அதில் ஒருவர் கேட்கின்றார் பௌத்த தலைவரை எப்படி ஹிஸ்புல்லா தீர்மாணிப்பது என்று கேட்கின்றார். என்னுடைய சிங்கள நன்பர் சொன்னானார் இந்த திட்டம் ஏற்கனவே நன்கு தயாரிக்கப்பட்டு ஹிஸ்புல்லாவிற்கு எப்படி பேசவேண்டும் என சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு புரிந்தது இவர் எத்தனை மோசமான சமூகத் துரோகி என்று.

இன்னும் உங்களைப்பற்றி எத்தனையோ நூறுவிடயங்களை சொன்னார் அவற்றை எல்லாம் என்னால் ஒர் பகிரங்க கடிதத்தில் எழுத மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அவர் பேச்சின் சாராம்சம் இவ்வளவுகாலமும் உங்களை இந்த சமூகம் கண்மூடித்தனமாக நம்பி ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதுமாத்திரம் எனக்கு மிகத்தெளிவாக விழங்கியது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எப்படி ஹிஸ்புல்லா சேர் செலவு செய்தார் என்பதை வாப்பா சொன்னபோது எத்தனை என்போண்ற ஏழைகளுக்கு இந்தப்பணத்தால் உதவியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது

ஆறுஇலட்சம் விஞ்ஞாபனம்
தயாரித்த செலவு
600,000 X 22.50 13,500,000.00
அதற்கான தபால் செலவு
600,000 X 10.00. 6,000,000.00
பொதி செய்வதற்கான செலவு
600,000 X 1.00 600,000.00

மற்றும் 19 மாவட்டத்திற்குமான பிரச்சார மற்றும் தேர்தல் செலவீனங்கள். 146,570,000.00

மொத்த செலவீனம் 166,670,000.00

பதினாறு கோடி ஆறு இலட்சத்து எழுபதாயிரம் இவ்வளவு தொகையையும் எப்படி சம்பாதித்தீர்கள் என்பதற்கெல்லாம் அப்பால் இந்த தொகையை செலவு செய்து முஸ்லிம் சமூகம் முஸ்லிம் ஒருவருக்கு வாக்களித்து இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றப்போகின்றார்கள் என்றும் முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு எதிரானவர்கள் என்ற உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் சேர்.

இந்த நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த சமூகத்திற்கு எந்த பிரயோசனத்தையும் தராத ஒரு காரியத்திற்கு இத்தனை பெரிய தொகையை செலவு செய்துள்ளீர்கள் சேர் ஏன் இந்தப்பெரும் நிதியை வறுமையின் அகோரப்பிடியில் இருக்கும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தாலும் உங்களுக்கு ஈருலகிலும் அது ஈடேற்றத்தை தந்திருக்குமே சேர்.

இந்தப்பணம் உங்களுடையது நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் யாரும் கேட்கமுடியாது ஆனால் நீங்கள் எனது வாப்பா அடிக்கடி சொல்வார் ஹிஸ்புல்லா சேர் ஓடுவதற்கு சைக்கிள் கூட இல்லாமல் இருந்தவர் என்று அப்படி இருந்த உங்களை இந்த சமூகம்தானே சேர் இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவந்தது அப்படியாயின் உங்களுக்கு இந்த சமூகத்திற்கான பொறுப்பு இல்லையா சேர்?

சேர், இந்த ஊரில் எத்தனை ஏழை குமருகள் ஒர் ஒழுங்கான மலசலகூடம் இல்லாமல் ராத்தாவினுடைய மச்சான் எப்போது வெளியே போவார் நான் கொஞ்சம் பாத்றூம் போகவேண்டும் என்று தனது இயற்கை தேவையை நாள்கணக்கில் அடக்கி கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா சேர்?

இரவு பத்து மணி தாண்டி பக்கத்து வீட்டு முன்கதவு மூடப்பட்டுவிடும் தமது 12 அடி X 15 அடி அறைக்குள் தமது இயற்கை தேவைக்காக பொலித்தீன் பைகளை பாவிக்கும் எத்தனை குமருகள் எமதூரில் உள்ளது உங்களுக்கு தெரியுமா சேர்?

மூன்று சகோதரிகள் மூத்த சகோதரி திருமணமானபின் அவவின் வீட்டு பின் புறச்சுவரில் ஓர் தாவரத்தை இறக்கி நாங்கள் இந்த வெள்ள காலத்தில் செங்கல்லை அடுக்கி அதன்மேல் ராத்தாவின் வீட்டுக்கு பாவித்த சப்பு பலகையை பரப்பி ஒரு நேர சாப்பாட்டிற்காக காத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா சேர்?

என்னுடைய வாப்பா எவ்ளவு கஷ்டப்பட்டு எனது ராத்தாவிற்கு ஒரு குசினி, ஒரு படுக்கை அறை, ஒரு வறாந்தையினை அமைத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா சேர்? சில நாட்கள் ஒரு நேரம் பனிசும் தேயிலையும் தின்டு குடித்து பல முழு நாட்களையும் கடத்தியிருக்கிறோம் சேர்.

எங்களது பக்கத்து வீட்டு சாச்சி கணவனை இழந்து இரண்டு சிறிய பெண் பிள்ளைகளுடன் எங்களுக்கே சாப்பாடில்லாத கட்டத்தில் நாங்கள் சாப்பிட்டு மிஞ்சியதை அவர்களுக்கு தருவோம் என்ற நம்பிக்கையில் இரவு பிந்தியும் இப்போது சாப்பாடுவரும் என்று வாசலில் இரண்டு பிள்ளைகளையும் பராக்குக்காட்டி காத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா சேர்?

எனது வகுப்புத்தோளி மிகத்திறமையாக சாதாரணதரம் சித்தியடைந்தும் உயர்தரம் படிக்க வசதியின்மையால் அவவைவிட 17 வருடம் முதிய ஏற்கனவே திருமணமானவரை தனது வறுமைகாரணமாக ஏதோ ஒருவகையில் திருமணம் முடித்து அந்த போதைக்கு அடிமைப்படவர் செய்யும் சித்திரவதைகளை தாங்கிக்கொண்டு ஒரு கைப்பிள்ளையும் மற்றய ஒன்றரை வயது பிள்ளையையும் தோழிலும் மடியிலும் சுமந்து ஓர் நிரந்தர குடிசைகூட இல்லாமல் கஷ்டப்படுவது உங்களுக்கு தெரியுமா சேர்?

எனது மாமா அங்காடிவியாபாரி ஏப்ரல் பிரச்சினைக்கு பிறகு தமிழ் பிரதேசங்களில் சாமான்களை கொண்டு சென்று விற்கமுடியாமல் இன்னுமொரு தொழிலை தொடங்க வசதி இல்லாமல் படும் அவஸ்தை உங்களுக்கு தெரியுமா சேர்? அவருடைய குடும்பம் மொத்தமாக அவருடைய மருமகன் அவரது மூத்த மகள் அவவின் குழந்தை, உயர்தரத்திலும், மற்றயது 10 ஆம் ஆண்டிலும் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் 6ஆம் ஆண்டில் பயிலும் ஆண் பிள்ளை மாமி என்று இரண்டு அறை வீட்டில் 8 பேர் வாழ்கின்றார்கள் ஒரு மலசலகூடம் ஒரு குளியலறை கற்பனைபன்னி பார்க்க முடிகிறதா சேர்?

பத்து நாட்களாக பேயும் கடும் மழையால் எத்தனை அன்றாட கூலித்தொழிலாலிகள் தமது குடும்பத்திற்கு ஒரு வேளைசாப்பாட்டிற்காக போராடுகிறார்கள் தெரியுமா சேர்?

படிக்கின்ற வயதில் என்னுடைய நாநா போன்று உங்களுடைய போஸ்டர் ஒட்டுவதற்காக 1,500 ரூபாய் நாட்கூலியை நம்பி தமது கல்வியை பாதியில் விட்டுவிட்டு போதைக்குளிசைகளுக்கு அடிமையான எத்தனை இளைஞர்கள் என்று உங்களுக்கு தெரியுமா சேர்?

ஒரு நிமிடம் தனிமையில் உட்கார்ந்து உங்களது மனசாட்சியுடன் உறவாடுங்கள் இத்தனைகாலமும் உங்களுக்கு வாக்களிக்கும் இந்த ஏழைகளுக்கு நீங்கள் எதுவும்செய்யாததை அந்த மனசாட்சி உங்களுக்கு சொல்லும் அப்போது உங்களுக்கு எம்போன்ற ஏழைகளின் வலியை உணர முடியும் எனநம்புகிறேன்.

உங்களுக்காகவே பாடுபட்டு, உங்களுக்காகவே எல்லோரோடும் முரன்பட்டு, பல குடும்ப உறவுகளை வெறுத்து, உங்களுக்காக மாத்திரமே நீங்கள் அரசியலுக்கு வந்த காலம்தொட்டு வாக்களித்த வாக்களிக்க தூண்டிய எங்களது வாப்பா எங்களுக்கு சொன்ன வசீயத் என்ன தெரியுமா சேர்?

“இனிமேல் எனது மௌத்துவரை ஹிஸ்புல்லாவிற்கு வாக்களிக்கமாட்டேன் நீங்களும் அப்படி செய்துவிடாதீர்கள். நான் எனது வாழ்நாளில் இந்த சமூகத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஹிஸ்புல்லா என்பவரை பற்றி அறியாமல் அவருடைய உண்மை முகம் தெரியாமல் அளவுகடந்து அவரை நம்பி அவருக்காக பாடுபட்டது. உங்களுடைய எந்தக்கட்டத்திலும் நீங்கள் நான் ஹிஸ்புல்லாவை ஆதரித்தது போன்ற அனியாயத்தை இந்த சமூகத்திற்கு செய்துவிடாதீர்கள், தனது சுயநலநிற்காக எதையும் செய்ய துணிபவர் இதை நான் நன்கு உணர்ந்துகொண்டேன்” என்று வாப்பா சொன்னார்.

சேர் இன்ஷா அல்லாஹ் எங்களது வாழ்நாளில் எங்களை சார்ந்த எவரும் உங்களை ஆதரிப்பதோ அல்லது உங்களிடம் உதவிதேடியோ வரமாட்டோம் இறைவன் பாதுகாக்கவேண்டும்.

முடிந்தால் உங்களையே நம்பி உங்களுக்காக வாக்களிக்கும் எம்போன்ற ஏனைய ஏழைகளுக்கும், என்னையும்விட ஏழையான குடும்பங்களுக்கு நீங்கள் அனாவசியமாக வீண்விரயமாக்கும் உங்களது நிதிகளையாகுதல் செலவு செய்யுங்கள் அதில் உங்களுக்கு பறக்கத் உண்டாகும்.

நான்கு முறை உங்களை சந்திக்க உங்களது காரியாலயத்திற்கு வந்திருக்கிறேன் இருமுறை நீங்கள் முன் ஆசணத்தில் அமர்ந்திருக்கும்போதே நீங்கள் கூட்டம் ஒன்றில் இருப்பதாக சொல்லி திருப்பி அனுப்பப்பட்டேன் இறுதியாக இரண்டு தடவைகள் உங்களிடம் நான் எழுதியதுற்கும் அதிகமாக பேசியிருக்கிறேன் ஆனால் அவை எல்லாம் எந்தப்பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்தபின்பு இந்த மடலை எழுதுகிறேன் சேர்.

இறுதியாக ஒரு வேண்டுகோள் இவ்வாறு எழுதியது உங்களை சஞ்சலப்படுத்துமாக இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள் எனக்கு இந்த ஏழை மக்களுடைய கஷ்டங்களை உங்களுக்கு சொல்ல வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை சேர்.

ஜசாக்குமுள்ளாஹுஹைறன்

வஸ்ஸலாம்.

குறிப்பு: இந்த முகப்புத்தகம் என்னுடையதல்ல எனது நன்பியினுடையது எனக்கு முகப்புத்தக கணக்கு இல்லாததால் அவரினூடாக பிரசுரிக்கின்றேன்

Laments of a daughter from Kattankudy- An Open Letter to Hisbulla the “Camel Candidate”
By a daughter of hisbulla’s former die-hard supporter (Circulated via Whatsapp)
Courtesy: ThinkWorth