My Udhayam TV Interview on Rohingya Crisis


9 11 attackமுஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கை நிலைகுலைய வைக்கவும் அந்த நாடுகளின் செல்வங்களை சூறையாடவும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவால் விடுக்க முடியாத வல்லரசாக இஸ்ரேலை மாற்றி அமைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமே உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல்.

2001 செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தக் குற்றத்தை முஸ்லிம்கள் தான் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டோடும் குறிப்போடும் மேலைத்தேச ஊடகங்களும் இலங்கையில் உள்ள இரண்டு மேலைத்தேச சார்பு ஊடகங்களும் நினைவு கூர்ந்துள்ளன.

மேலைத்தேச யுத்த இயந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமான மேலைத்தேச ஊடகங்கள் உலக வர்த்தக மையத்தை முஸ்லிம்கள் தான் தாக்கி அழித்தார்கள் என்ற பிரசாரத்தை கட்விழ்த்துவிட்டன. அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தத்தையும் அவை நியாயப்படுத்தின.

எவ்வாறாயினும் இந்த அழிவுக்கு உண்மையில் முஸ்லிம்கள் தான் காரணமா என்று சில சுதந்திர ஊடகங்கள் தேடத் தொடங்கின. இது ஒரு உள்வீட்டு வேலையாக இருக்கலாம் என்ற பரவலான சந்தேகம் தான் இந்தத் தேடலுக்கு காரணம். இந்த தாக்குதலின் தொடராகத் தான் முழு மத்திய கிழக்கையும் யுத்த களமாக மாற்றிய பல யுத்தங்களும் மோதல்களும் தொடங்கப்பட்டன.

இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு சில மாதங்களில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மோர்னிங் ஹெலால்டில் ஒரு விளம்பரம் வெளியானது. விமானங்கள் தாக்கியதால் இரட்டைக் கோபுரங்கள் சாயவில்லை. மாறாக அதனுள்ளே ஏற்படுத்தப்பட்ட ஒரு இலத்திரனியல் வெடிப்பே இதற்கு காரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜிம்மி வோல்டர் என்பவர் இந்த விளம்பரத்தை பதிவு செய்திருந்தார். உலக வர்த்தக மையத்தை தகர்ப்பதில் வெடிமருந்துகள் பாவிக்கப்படவில்லை என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அவர் அதில் சவால் விடுத்திருந்தார். செப்டம்பர் 11 தாக்குதல் பற்றிய விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்து அந்தச் சம்பவம் பற்றி விடை காணாத பல வினாக்களுக்கு விடையை தேடுங்கள் என்றும் அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தத் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட எந்தவொரு புகைப்படத்திலும் தாக்குதல் நடத்தி சிதைவுற்ற விமானங்கள் பற்றிய எந்த தடயங்களும் இல்லை. அவ்வாறான ஒரு பாரிய சம்பவத்தின் பின் அதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமானங்களின் பாகங்கள் எதுவும் சம்பவ இடத்தில் இருந்து மீற்கப்படவில்லை என்ற முக்கியமாக விடயத்தை Nவுhல்டர் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு எவரும் சவால் விடுக்கவில்லை.

அதன் பிறகு பல ஆய்வாளர்கள், இணையத்தலங்கள், சஞ்சிகைகள் என பல்வேறு பிரிவினர் இது போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தனர். அமெரிக்க விமானப் படை என்பது உலகிலேயே மிகலும் பலம் பொருந்திய விமானப் படை. மிகவும் பலம் வாய்ந்த தாக்குதல் வல்லமை கொண்டது என வர்ணிக்கப்படுகின்றது. அப்பேற்பட்ட ஒரு விமானப் படையியடம் இருந்து எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நாக்னு இராட்த விமானங்களும் எவ்வாறு பல மைல் தூரம் பறந்து பல மாநிலங்களைக் கடந்து தமது இலக்கை அடைந்தன? என்பதும் இந்த விடயத்தில் எழுப்பப்பட்ட ஆனால் இன்னும் விடை காணப்படாத முக்கிய கேள்வியாகும்.

பின்னர்தான் பல விவரங்கள் வெளிவரத் தொடங்கின. இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாட்டும் அமெரிக்க புலனாய்வு வலையமைப்புக்களும் இணைந்து திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் தான் இவை என்ற ரீதியில் கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. முஸ்லிம்கள் மீது பழியை போட்டு மத்திய கிழக்கில் தமது நாசகாரத் திட்டத்தை நியாயாப்படுத்தும் ஒரு நடவடிக்கையே இதுவாகும். முஸ்லிம்களை பாரிய அளவில் கொலை செய்து அந்த நாடுகளின் சொத்தக்களையும் வளங்களையும் சூறையாடி அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலை சவால்களுக்கு அப்பால் பட்ட ஒரு வல்லரசாக ஸ்தாபிப்பது தான் இதன் இறுதி நோக்கம்.

இது தொடர்பான பல விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கின. பத்தி எழுத்தாளர் பெக்ஸ்டர் டிமிட்றி 2017 ஜுலை 13ல் “நாங்கள் தான் செப்டம்பர் 11ல் உலக வர்த்தக மையத்தை தகர்த்தோம்-- ஒரு உளவுத்துறை ஏஜன்ட்டின் மரணப் படுக்கை வாக்கு மூலம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அமெரிக்க புலனாய்வு செவையான சிஐஏ ளைச் சேர்ந்த மல்கம் ஹாவார்ட் என்ற 79 வயதான ஓய்வு பெற்ற ஒரு புலனாய்வு முகவரின் வாக்கு மூலம் தான் அது. நியு ஜேர்ஸி பிராந்தியத்தைச் சேர்ந்த அவர் தனது சொந்த ஊரில் ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தவாறு பல தகவல்களை வெளியிட்டிருந்தார். செப்டம்பர் 11ல் நிர்மூலமாக்கப்பட்ட உலக வர்த்தக மையக் கட்டிடத்தை நாங்கள் தான் தகர்த்தோம். அந்த தகர்ப்புக்கான பிரதான கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு உறுப்பினராக நானும் பணியாற்றினேன். இந்த நடவடிக்கைக்கு நியு சென்சுரி (புதிய நூற்றாண்டு) என்று பெயரிடப்பட்டிருந்தது. 1997 மே மாதம் முதல் செப்டம்பர் 2001 வரை அந்த நடவடிக்கை பிரிவில் நான் பணியாற்றினேன். சிஐஏ க்கு அந்தக் காலப்பகுதியில் அதி உயர் மட்டத்தில் இருந்து தான் உத்தரவுகள் வழங்கப்பட்டு வந்தன. கட்டிடத்தை தகர்க்கும் இலக்கு நான்கு பேர் கொண்ட ஒரு அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதில் நானும் ஒருவன் என்று மல்கம் ஹாவார்ட் தெரிவித்துள்ளார்.9 11 malcom

இந்த நடவடிக்கையானர் செயற்பாட்டு ரீதியில் மிகவும் பிரத்தியேகமானது. மிகவும் உன்னதமான பிரத்தியேக முறையில் அது தகர்க்கப்பட்டது. அந்த கட்டிடம் தகர்க்கப்பட வேண்டும் ஆனால் அதை நாம் தகர்த்தது போல் இருக்கவே கூடாது. அந்த காலத்தில் இந்த ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுவது எனக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை. காரணம் நான் ஒரு தேசப்பற்று மிக்க உளவாளியாக இருந்தேன். அவ்வாறான நிலையில் சிஐஏ யின் நிலைப்பாடு குறித்தோ அல்லது வெள்ளை மாளிகையின் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தோ நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஒரு பாரிய பணியை செய்து முடிப்பதுதான் எமக்கு தரப்பட்ட இலக்கு. அதற்காக அவர்கள் மிகவும் விசுவாசமானவர்களையும் திறமையானவர்களையும் தான் தெரிவு செய்வார்கள். அந்நிலையில் நாம் எதையும் கேள்விக்கு உற்படுத்த முடியாது. வீண் விவாதங்களுக்கும் அங்கு இடமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இனி அந்தப் பாரிய கட்டிடம் எவ்வாறு தகர்க்கப்பட்டது என்று அவர் கூறுகையில் அது வெடிபொருள்களோடு மேற்கொள்ளப்பட்ட மிகவும் கட்டுப்பாடான ஒரு தகர்ப்பு. இராணுவ தரம் கொண்ட சுபர் பைன் நெனோதேர்மைட் கொம்போஸட் வெடிமருந்துகளை இதற்காகப் பாவித்தோம். ஆயிரக்கணக்கான இறாத்தல்கள் எடைகொண்ட வெடிமருந்துகளையும் அதற்கு தேவையான பியூஸ்கள் மற்றும வெடிக்க வைக்கும் பொறிமுறை கருவிகள் என்பனவற்றை யாருடைய கவனமும் ஈர்க்கப்படாமல் இந்த இடத்துக்கு கொண்டு வருவதுதான் மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இதற்காக அங்கிருந்த பெரும்பாலான அலுவலகங்களை சிஐஏ அல்லது இராணுவப் பிரிவுகள் வாடகைக்கு பெற்றிருந்தன. இது எமது காரியத்தை ஓரளவு இலகுவாக்கியது.

இந்தத் தாக்குதல் அதற்கான திட்டமிடல் என்பனவற்றில் நெரடியாகப் பங்கேற்ற ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் அளித்த பின்னரும் கூட தொடர்ந்து இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மீதே குற்றக்கணைகள் தொடுக்கப்பட்டன. ஆப்பொதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர்து டொனி பிளாயர் ஆகியோர் முன்னின்று இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மிக மோசமான தீவிர பிரசாரங்களையும் தாக்குதவ்களையும் தொடுததனர். புயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் அவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக யுத்த தீயை மூட்டிவிட்டனர். இந்த நடவடிக்கைகள் உலகம் முழவதம் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார,கலாசார, இராணுவ, நிதி, சமூக, சமய கலாசார போக்குகளை மாற்றி அமைத்ததோடு அவர்களின் அடிப்படைவ hழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்து முஸ்லிம்களுக்கு அவர்களின் சொந்த நாட்டில் அவர்களின் சுய இருப்பையே கேள்விக்குரியாக்கியது.

புல வாரங்கள் கழித்து பெப்ரவரி 2006இல் அமெரிக்க காங்கிரஸ் கூட்டம் ஒன்றின் போது இஸ்லாமிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவத என்ற போர்வையில் அமெரிக்க இராணுவ தலைமைபீடம் தன்னால் தயாரிக்கப்பட்ட நான்காண்டு வேலைத்திடட்டம் ஒன்றை காங்கிரஸின் பார்வைக்கு சமர்ப்பித்தது. அதேநேரம் அமெரிக்காவின் இராணுவ கல்லூரியொன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் யுத்தத்தையும் மோதல்களையும் ஊக்குவிக்க வேண்டிய தேவைகளை வலியுறுத்தி இன்னொரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கைகள் ஜோர்ஜ் புஷ்ஷ{ம் அவரது நவ காலணித்துவ பிரிவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க கங்கணம் கட்டி செயற்படுவதை புலப்படுத்துவதாக அமைந்தது. ஆனால் மேற்குலக ஊடகங்கள் இவற்றை மூடி மறைத்து விட்டன. ஆனால் பிற்காலத்தில் அவற்றை மீறி இந்தத் திட்டங்கள் வெளிப்பட்டன.

ஆப்பாவி முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டமையானது பயங்கரவாதம் என்றால் என்ன என்று புது வரைவிலக்கணம் வகுக்குமாறு அன்றைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கேட்டுக் கொள்ளும் அளவக்கு நிலைமைகளை மோசமாக்கியது. புயங்கரவாத் என்பதற்கு உலகளாவி வரைவிலக்கணத்தை வகுத்து அதில் இணக்கம் காணுமாறு அவர் உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

முஸ்லிம்கள் தான் செப்டம்பர் 11 தாக்குதலை நடத்தினார்கள் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் கூட முஸ்லிம் மற்றும் அரபு உலகத்தின் மீதான அமெரிக்க கொள்கைகளின் பிரதிபிலிப்பு தான் இந்தத் தாக்குதல் என்ற கருத்தை கூட வெளியே சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆவ்வாறு யாராவது சொன்னால் அது தேசத்துரோகம், நாட்டுப்பற்றற்ற நிலை, அல்லது பயங்கரவாதத்துக்கான ஆதரவு என அவர்களுக்கு எதிராக கதை கட்டப்பட்டது. முஸ்லிம் நாடுகளை எவ்வாறு துவம்சம் செய்ய வேண்டும், முஸ்லிம்களின் அமைதிக்கும் நிம்மதிக்கும் எவ்வாறு குழி பறிப்பது, முஸ்லிம் நாடுகளில் தங்களுக்குப் பிடிக்காத ஆட்சிகளை எப்படி கவிழ்த்துவது, தங்கள் சொல்லுகின்ற படி தலையாட்டும் பொம்மைகளை எப்படி மத்திய கிழக்கு நாடுகளின் ஆட்சி பீடத்தில் அமர்த்துவது என்று புஷ்ஷ{ம் பிளாயரும் இணைந்து முன் கூட்டியே தீட்டிய திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அரங்கேற்றப்பட்டன. இது அண்மைக்கால வரலாறு நிரூபித்துள்ள விடயங்கள்.

உலகை ஆளுவதாக சொல்லிக் கொள்ளும் இந்த வல்லரசு நாடுகளின் வெறுப்புணர்வு காரணமாக சகல முஸ்லிம் நாடுகளும், தனிநபர்களும,; இஸ்லாமிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும், அமைப்புக்களும் குறிப்பாக சமய ரீதியான தொண்டு நிறுவனங்களும், முஸ்லிம்களோடு தொடர்புடைய எல்லோரும் மற்றும் சகலதும் பயங்கரவாத சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை உருவானது. இவை எல்லாவற்றையும் அழித்து விட வேண்டும் என புஷ்ஷ{க்கு அடிமைச் சேவகம் புரிந்த மேற்குகலக ஊடகங்களும் கூக்குரல் எழுப்பின. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இஸ்லாத்தின் வேகமான பரவலைத் தடுக்கும் புஷ்ஷின் கிறிஸ்தவ அடிப்படைவாத கொள்கைகளுக்கு அவை துணை நின்றன.

ஆன்று முதல் உலகின் பல நாடுகளில் குறிப்பாக மேற்கு நாடுகளில் முஸ்லிம் ஆண் மற்றும் பெண்கள் தமக்கெ உரிய பிரத்தியேகமான கலாசார அடையாளஙடகளொட நடமாடப் பயப்படும் நிலை ஏற்பட்டது. ஏதோ ஒரு வகையில் எல்லா முஸ்லிம்களுக்கும் அடிப்படை வாதிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டது. அவர்கள் ஒன்றில் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாதத்துக்கு சாதகமான இயல்பு கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டனர். ஏந்த விதமான நியாயமம் இன்றி அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரங்களும் சூறையாடப்பட்டன.

முஸ்லிம் நாடுகள் மீதும் அரசுகள் மீதும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவர்கள் மிரட்டப்பட்டனர். ஓவ்வொரு நாட்டிலும் அல் குவைதா அமைப்புடனான தொடர்புகள் பற்றி விசாரணை என்ற போர்வையில் அந்த நாடுகளின் நிதி நிலைமைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் ஏனைய நாடுகளுக்கும் உலகின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் அந்த நாடுகள் செய்துவரும் உதவிகள் பற்றிய தகவல்கள் திருடப்பட்டன.

இந்தப் பிரசாரத்தின் கீழ் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முஸ்லிம் சமயப் பாடசாலைகளும் மேற்குலக நாடுகளின் கழுகுப் பார்iவின் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆவற்றின் மீது வேண்டத்தகாத நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. இந்த நெருக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உற்பட பல நாடுகளின் சமயப் பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டன. இந்தப் பாடசாலைகளுள் பல வளைகுடா நாடுகளின் செல்வந்தர்களாலும் ஏனைய நலன் விரும்பிகளாலும் அமைப்புக்களாலும் போஷிக்கப்பட்டு வந்தவை. அவர்களுக்கு அவர்களது நாடுகளின் அரசுகள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக அவர்கள் வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இது இஸ்லாமி சமூகத்தின் அடிப்படை மூலவேர்களைச் சாய்க்கும் ஒரு நடவடிக்கையாகவே அமைந்தது. இதன் மூலம் இஸ்லாமிய போதனைகள் நசுக்கப்பட்டன. குhலாகாலமாக இஸ்லாத்தின் செய்தியை பரப்பி வந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் உருவாக்கத்துக்கு இதன் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டது. புயங்கரவாதம் என்ற துஷடனை வெளியே காட்டி உள்ளுக்குள் தூய்மையான இஸ்லாத்தின் போதனைகள் நசுக்கப்பட்டன.

மேலைத்தேச யுத்த இயந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாக மேலைததேச ஊடகங்களும் மாறிவிட்டமை தான் மிகவும் கவலைக்குரியது. ஊலகத்தை பொய்யால் போஷிக்கும் பிரிவாக இவை மாறிவிட்டன. முழுக்க முழுக்க பொய் பொய் பொய் பொய்யைத் தவிர வேறு எதையும் இவர்கள் கூறவில்லை. குண்ணுக்குப் பலப்படாத ஆனால் அழிவை ஏற்படுத்தும் சக்திகளின் நிகழ்ச்சி நிரலை இந்த ஊடகங்கள் நியாயப்படுத்தின.

திட்டமிட்ட இந்தப் பிரசாரங்களின் இன்று முழ உலழைகயும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி விட்டது. முஸ்லிம்களுடைய சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டங்கள் கூட இன்று மழுங்கடிக்கப்பட்டு விட்டன. தமது நியாயமான அடிப்படை சுதந்திரத்துக்காக குரல் கொடப்பவர்கள் கூட இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டு விட்டனர். சுமாதானம் என்ற தூய்மையான பொருள் கொண்ட நியாயமான வார்த்தையான இஸ்லாம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் மேலைத்தேச ஊடகங்களால் சிதைக்கப்பட்டு விட்டது. இப்போது அது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய தவிர்க்க முடியாத ஒரு சொல்லாக மாற்றப்பட்டு விட்டது.

இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட சதி பல நாடுகளில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதும், அந்த நாடுகளின் முஸ்லிம்கள் தமது சொந்த நாடுகளில் வாழ முடியாமல் அகதிகளாக ஓட்டம் பிடித்தனர். அது கூட அவர்களது ஊடகங்களில் அன்றாட காட்சியாக்கப்பட்டது. இவற்றில் மிகவும் பிந்திய செயற்பாடுகளாக சவூதி அரேபியா யெமனில் ஏற்படுத்தி வரும் அழிவுகளும், மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்ட்டு வரும் கொடுமைகளும் அமைந்துள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, சொமாலியா உற்பட பல நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்ஸ்,ரஷ்யா இஸ்ரேல் என்பன ஏற்படுத்தி வரும் பாரிய நாசங்கள், அப்பாவி முஸ்லிம் மக்களின் அர்த்தமற்ற கொலைகள், அவர்களை அகதி மகாம்களுக்குள் முடக்கி பட்டினியால் வாட விட்டுள்ளமை என எல்லாமே இந்த நாசகார சதித் திட்டத்தின் வெளிப்பாடுகள் தான்.

முpயன்மார் இராணுவமும் ஆயுதம் தாங்கிய அவர்களுக்கு ஆதரவான குழுக்களும் றோஹிங்யா முஸ்லிம்கள் மீது இழைத்து வரும் கொடுமைகளை இன்று உலகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. முஸ்லிம் நாடுகள் எதுவும் இந்த கொடுமைகளுக்கு எதிராக காத்திரமான எந்த நடவடிக்கையையும் எடுக்க முயலவில்லை. தமது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எஜமானர்களை திருப்திப்படுத்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் கடமை பட்டள்ளதால் அவர்களால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.