பௌத்த பேராதிக்கமும் முல்லைத்தீவு ஆர்ப்பாட்டமும் முஸ்லிம்களின் மௌனமும்

gnasara thugr

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திடலில் பௌத்ததுறவி யொருவரின் சிதையைநீதிமன்றத்தின் தடையு த்தரவையும் மீறித்தகனம் செய்தமை இந்துமக்களின் மதவழிபாட்டுஆசாரங்களுக்கு இழைக்கப்பட்டமிகப்பெரும் அவமானம்என்பதையும், இந்துத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னுமோர் அநீதி என்பதையும் ;மனிதாபிமானமுள்ள எந்தமத வழிபாட்டாளரும் ஜனநாயகவாதிகளும் ஏற்றுக்கொள்வர்.

மேலும், அச்செயலை முன்நின்றுநடத்தியவர்கள் பௌத்த துறவிகளென்பதையும் அவர்களுள் ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமானப்படுத்தியதற்காகச் சிறைசென்று ஜனாதிபதியின் மன்னிப்பால் வெளிவந்தவர் என்பதையும் நோக்கும்போது இவர்களைஅஹிம்சா மூர்த்தியும் கருணைக் கடலுமானகௌத்தமரின் பக்தகோடிகளென்பதா காவியுடைக்குள் மறைந்து நின்று அரசியல் இலாபம் தேடும் போலித் துறவிகளென்பதா என்று தெரியவில்லை.

எப்படியிருப்பினும், அங்கே நடந்தேறிய தகனக் கிரியையும் அதனைச் சுற்றிய ஆர்ப்பாட்டத்தையும் இரு மதத்தினரிடையே சம்பந்தப்பட்ட ஒருவிடயமெனமட்டும் கருதுவது அதன் அந்தரங்க அரசியல் தந்திரங்களை உணரத் தவறுவதாகும். இலங்கையிலே இன்று மிகவேகமாகவும் அதி ஆக்ரோஷத்துடனும் பெரும்பான்மை இனத்தினரிடையே பரப்பப்படும்ஓர் இலட்சியம் பௌத்தபேராதிக்கம். அதாவது, பௌத்தமதமே இந்நாட்டின் “முதன்மையானமதம்”என்றஅரசியல் யாப்பின் சரத்துக்கு அப்பாலே சென்று பௌத்தர்களே இந்த நாட்டின் சகல துறைகளிலும் முதன்மையான இடத்தை வகிக்கவேண்டும் என்பதே இவ்வாதிக்கவாதத்தின் அந்தரங்கக் குறிக்கோள். இந்தக் குறிக்கோள் 1972ஆம் ஆண்டின் கொல்வின் குடியரசுயாப்பின் அடியாகப் பிறந்ததெனினும் அதன் துரிதவெளிப்பாடு 2009ஆம் ஆண்டின் உண்ணாட்டுப் போரின் முடிவிலிருந்தே ஆரம்பமாகிற்று. இதை விளங்குதல் அவசியம்.

பௌத்தர்களையே பெரும்பான்மையாகக் கொண்டஓர் இராணுவத்தினாலும், கடற்படை, ஆகாயப்படைவீரர்களினாலும் ஈட்டப்பட்ட அந்தப் போர்வெற்றி இரண்டு எதிரிடையான தாக்கங்களை ஒரேசமயத்தில் பௌத்தர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. முதலாவது,அண்டைநாட்டிலிருந்து ஒருதமிழ்ப்படை உண்ணாட்டுத் தமிழரின் சார்பாக இலங்கையை முற்றுகையிட்டுநாட்டைக் கூறுபோடும்
என்ற ஒருபீதி காலாதிகாலமாக பௌத்தமக்களிடையே குடிகொண்டிருந்தது.

அந்தப் பீதியை அரசியல்வாதிகளும் இனவாத வரலாற்றாசிரியர்களும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களும் அரசியல் இலாபம் கருதி உரம்போட்டு வளர்த்து வந்தனர். அந்தப் பயம் இந்த வெற்றியுடன் ஒரேநொடியில் பறந்துவிட்டது. உண்ணாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் அண்டைநாட்டுத் தமிழ்த் தலைமைத்துவம் புலிகளைநட்டாற்றில் கைவிட்டதுடன் இது வரைவாட்டிய அந்தப் பயம் ஒருமாயைதான் என்பதை பௌத்த இனம் உணர்ந்தது. அதேசமயத்தில் அந்தப்பயம் ஓர் எதிரிடையான நம்பிக்கையையும் பௌத்தர்களின் மனதில் பதித்துவிட்டது. அதாவது, இனிமேல் இலங்கைபௌத்தர்களுக்கே சொந்தமானநாடு, அவர்களின் தயவிலேதான் ஏனைய இனங்கள் இங்கேவாழலாம் என்ற அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கையை அப்போரின் வெற்றி விதைத்துவிட்டது. இதனையே கடந்த ஆனிமாதம் ஏழாம் திகதிகண்டிநகரில் நடந்தஒருபகிரங்கக் கூட்டத்தில் ஞானசாரதேரர் “இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானவீடு” என்று மறுவாசிப்புச் செய்தார். இதனைச் சிறுபான்மை இனங்களால் எளிதில் மறந்துவிடமுடியுமா? மறைந்த ஒருபீதியும் புகுந்த ஒரு நம்பிக்கையும் ஒன்று சேர்ந்து வளர்த்துவிட்டதே பௌத்தபேராதிக்கவாதம்.அது இன்றுஅnசிறுபான்மையினரிடையேஅ பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009க்குப் பின்னர் உருவாகிய பேராதிக்கவாதத்தின் இயக்க வெளிப்பாடுகளே பொதுபலசேனை, ஜாதிகஹெலஉறுமய, மொஹொசன் பலகய,ராவணபலய,சிங்ஹ லே போன்ற கட்சிகளும் அமுக்கக் குழுக்களுமாகும். இவ்வியக்கங்களின் சிறுபான்மையினருக்கெதிரான அடாவடித்தனங்களைப் பூரணமாகப் பட்டியலிட்டால் இக்கட்டுரைமிகவும் நீண்டுவிடும்.ஊதாரணத்துக்காக ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டலாம். 2014இலிருந்து இற்றைவரை முஸ்லிம்களுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்கள் ,தமிழ் மக்களின் புனிதமதவழிபாட்டுத் தலங்கள் சிலவற்றைவிகாரைகளாக மாற்றியமை, தமிழரும் முஸ்லிம்களும் திரண்டுவாழும் பிரதேசங்களுக்குள் பலாத்காரமாகபௌத்தர்களைக் குடியேற்றியமை,அங்கே தெருவோரங்களில் பௌத்தரின் சிலைகளை இரவோடிரவாக நிறுவியமை ஆகியநடவடிக்கைகள் இப்பேராதிக்கத்தின் அழிக்கமுடியாத முத்திரைகள். நீராவியடிப் பிள்ளையார் திடலில் எழுந்ததகனத்தீ இவ்வாதிக்கவாதிகளின் இறுதிக் காட்சி. சட்டமும் ஒழுங்கும் அரசியற் தலையீட்டினால் செயலிழந்துகாணப்படும் சூழலில் இவ்வாறானசெயல்கள் இன்னும்தொடரும்எனவும் எதிர்பார்க்கலாம்.

இப்பேராதிக்கவாதிகளின் சிறைக்குட் சிக்கியிருப்பவர்களே பெரும்பாலான பௌத்த சிங்களஅரசியல் தலைவர்கள். இதனாலேதான் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கும் அடிபணியாதுசட்டத்தைத் தங்களின் கைகளிலெடுத்துக் கொண்டுஆடித்திரிகின்ற இக்கும்பலைத் தட்டிக்கேட்கும் துணிவையும்கூட இவ்வரசியல்வாதிகள் இழந்துநிற்கின்றனர். ஏனெனில் இவ்வாதிக்கவாதிகள் பௌத்தசங்கத்தினரின் துணையுடன் பௌத்தமக்களின் வாக்குவங்கியைத் தமதுகைகளுக்குள் வைத்திருக்கின்றனரெனஅரசியல்வாதிகள் நம்புகின்றனர். எனவேஅவர்களைப் பகைத்துக்கொள்வதுதமதுஅரசியல் அபிலாஷைகளுக்குஆபத்தானதெனக் கருதுகின்றனர்.

பௌத்த பேராதிக்கவாதத்தை பல்லின மக்கள் வாழும் இலங்கைக்குப் பொருந்தாதெனத் துணிந்து கூறியஅமைச்சர் மங்கள சமரவீரவைபௌத்தபீடம் எவ்வாறு மதப் பிரதிஷ்டம் செய்ததென்பது யாவரும் அறிந்ததே. இதையறிந்து தானோஎன்னவோ ஏனைய பௌத்தஅரசியல் தலைவர்கள் மௌனியாகிநிற்கின்றனர்.

அதுமட்டுமல்லாது,நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்போமெனவாக்குறுதியளித்துஆட்சிக்குவந்தவர்கள் அதனைஒழிப்பதற்குத் தயங்குவதும் இந்தப்பயத்தினாலேயே. ஜனாதிபதிஒரு ஹிட்லராகமாறினும் பரவாயில்லை,பௌத்தபேராதிக்கத்தைஅவர் சாத்தியமாக்கவேண்டுமெனஒரு மூத்தபௌத்ததுறவிகடந்தவருடம் பகிரங்கமாகக் கூறியதும்,நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையைஒழித்தால் அதுநாட்டின் அமைதியைக் குலைக்குமெனநாடாளுமன்றப் பிரதிநிதிரத்ததேரர் எச்சரித்ததும் இந்த ஜனாதிபதியாட்சிமுறைஎன்றுமேஒழிக்கப்படமாட்டாதுஎன்பதைத் தெளிவுபடுத்துகிறதல்லவா?

இவ்வாறுதடைகளின்றிஆடசியாளர்களின் பாராமுகத்தடனும் பாதுகாப்புத் துறையினரின் பாதுகாப்புடனும் வளர்ந்துவரும் பௌத்த பேராதிக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் சிறுபான்மைமதத்தினர் மூவரும் இணைந்துசெயற்படல் வேண்டும். பௌத்தம், சைவம், கிறித்துவம், இஸ்லாம் என்ற நான்கு மதங்களும் ஒரு குடும்பத்தின் சகோதரர்கள் போன்று அண்மைக்காலம் வரை இயங்கி வந்த நாடே இலங்கை. இந்தக் குடும்பத்தின் மூத்தசகோதரன் பௌத்தம் என்பதைமற்ற மூவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் குடும்பச் சொத்தெல்லாம் எனக்கேஎன்று மூத்தோன் கோருவதுமுறையா? அதுபிழையென்பதை மூத்தோனுக்குஉணர்த்தவேண்டுமெனின் இளையவர்கள் மூவரும் இணையவேண்டும்.

இந்தக் கோணத்திலிருந்துநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றசம்பவத்தைநோக்குகையில்,அங்குநடந்தஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்கநீதிசமாதானக்குழுபங்குகொண்டமைவரவேற்கத் தக்கது. அதேவேளை முஸ்லிம் சமூகம் ஒதுங்கிநின்றமைவேதனைக்குரியது. அவர்களின் அரசியல் தலைவர்களோ மதத்தலைவர்களோ அச்சம்வத்தையிட்டு ஒருகண்டன வார்த்ததையையேனும் இதுவரைவெளியிடாததுஇந்துக்களின் நெருப்பில் அரசியல் இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்திலாஎனஎண்ணத் தோன்றுகின்றது.சிறுபான்மை இனங்களை இணையவிடாதுபிரிக்கவேண்டும் என்பதும் இவ்வாதிக்கவாதிகளின் இன்னொருதந்திரம். ஆனால் இன்றுஒருகோயிலின் வளாகத்தில் சிதையைஎரித்தவர்கள்நாளைஒருபள்ளிவாயிலின் முற்றத்தில் எரிக்கமாட்டார்கள் என்பதற்குஎன்னஉறுதி?அண்மைக்காலத்தில் சிலபள்ளிவாசல்களுக்குள் பன்றித் தலைகளைவீசியவர்கள் அங்கேஒருசிலையையும் இரவோடிரவாகநிறுவினால் முஸ்லிம்களால் என்னசெய்யமுடியும்? இது பௌத்தமதத்துக்கும் மற்றமதங்களுக்குமிடையிலானபோராட்டமல்ல. மாறாக,பௌத்தபேராதிக்கவாதிகளின் வேதனையூட்டும் செயற்பாடுகளுக்கெதிரான போராட்டம். இதில் நியாயமுண்டுஎன்பதைலட்சோபலட்சம் சாதாரணபௌத்தமக்களும் அறிவுஜீவிகளும் உணர்வர். அவர்களின் ஆதரவுநிச்சயம் கிடைக்கும் சிறுபான்மை இனங்கள் யாவும் ஒன்றுபட்டால்.
அறவழிப்பட்ட பௌத்தத்தை இனங்கண்டு அரசியல் பௌத்தத்தை ஒதுக்கித் தள்ளிய வல்பொல ராகுல தேரர், மதுலுவவே சோபித தேரர் போன்ற பௌத்த அறிஞர்களை ஈன்ற நாடு இலங்கை. அவ்வாறான அறிவுடை தேரர்கள் இன்றும் உளர். ஆனால் அந்தஞானிகளின் கருணை இசையை பேராதிக்கவாதிகளின் வெறுப்புக் குரலொலிகள் அமுக்கிவிடுகின்றன. இதுதான் இலங்கையின் இன்றைய பரிதாபநிலை.