Egypt sisiஇஸ்லாமிய இயக்கத்தையும் ஜனநாயகத்தையும் நசுக்குவதற்காக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றால் ஏற்படுத்தப்பட்ட இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் தான் இந்த நிலை

லத்தீப் பாரூக்

ஐரோப்பா அந்தகார இருளில் முழ்கியிருந்த போதே மனித வரலாற்றில் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் பூத்துக் குலுங்கிய ஒரு பண்டைய பெருமை மிக்க நாடுதான் எகிப்து.

ஆனால் இன்று அப்துல்லாஹ் சிசி என்ற இராணுவ சர்வாதிகாரியிடம் சிக்கி அந்த நாடு அடக்குமுறைக்கு உள்ளான ஒரு நாடாக அச்சமும் பயங்கரமும் தலைவிரித்தாடும் நாடாக மாறியுள்ளது. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் இஸ்ரேலினதும் சேவகனாக மாறியுள்ள சிசியின் ஞானத் தந்தைகள் சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் குவைத்திலும் உள்ளனர்.

எகிப்தின் இன்றைய மோசமான நிலை பற்றி வர்ணித்துள்ள பத்தி எழுத்தாளரும் ஆய்வாளருமான அம்ர் கலீபா பல அரபுலக இணையங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதியுள்ள கட்டுரையில் ‘சிலவாரங்களுக்கு முன் கெய்ரோ நகர உணவகம் ஒன்றுக்கு அருகில் நின்றிருந்தேன். ஒரு காலத்தில் அது சனக்கூட்டம் மிக்க இடமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போதைய இராணுவ ஜுன்ட்டாவின் கீழ் தொடரான சுற்றிவளைப்புக்கள் இவ்வாறான உணவகங்களில் மேற்கொள்ளப்பட்டதால் இன்று உணவகங்கள் யாவுமே கலையிழந்து விட்டன என்று அருகில் நின்ற என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். ஆட்சியாளர்களை நினைத்து சுதந்திர சிந்தனையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் இரும்புக் கரங்களுக்குள் சிக்குண்டவர்களாகவே மக்கள் காணப்படுகின்றனர். இன்றைய நிலையில் ஒரு அரசியல் கட்டுரை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. சாதாரண ஒரு பேஸ்புக் பதிவோ அல்லது வேறு வகையான சமூக வலைதள பதிவுகளோ அல்லது குறிப்புக்களோ கூட சமட்பந்தப்பட்டவரை சிறையில் கொண்டு சேர்க்கலாம். அந்தளவுக்கு இது அச்சம் நிறைந்த பூமியாகிவிட்டது’.

இன்றைய எகிப்திய மக்களின் அன்றாட வாழ்வில் பிரதான பங்Nகுற்கும் விடயம் அச்சம் தான் என்று அம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிப் பேராசிரியர் விவியன் மெத்தியாஸ் பூன் தெரிவித்துள்ளார். தனிநபர் மற்றும் சமூக ரீதியான அச்சங்கள் பற்றியும் அழுத்தங்கள் பற்றியும் ஆராய்வதில் தேர்ச்சி பெற்றவர் தான் இவர். மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை நெருக்குதலுக்குள் வைத்திருக்க கையாளப்படும் ஒரு முக்கியமான பொறிமுறை மக்களுள் ஒருவருக்கொருவர் உள்ள தொடர்புகளைத் துண்டித்து அவர்களை அச்ச நிலைக்கு கொண்டு வருவதுதான். இது காலாகாலமாக அடக்குமுறையாளர்கள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள கடைப்பிடித்து வருகின்ற ஒரு வழிமுறையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைதான் தற்போது எகிப்திலும் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2013 இராணுவ சதிப் புரட்சிக்குப் பின் அப்துல்லாஹ் சிசியின் ஆட்சி முறையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஆட்சியாளர்களின் வன்முறைகள் அமைந்துவிட்டன. 1952 புரட்சி முதல் சர்வாதிகாரத்தின் பார்வையில் தான் இந்த இராணுமும் இருந்து வந்துள்ளது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற விழிப்பு அல்லது அவர்களை தன்னாட்சி நிலைக்கு கொண்டு செல்வது தங்களது அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்க நிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பது தான் இந்த சர்வாதிகார அடக்குமறையாளர்களின் எண்ணம்.

2012ல் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் மொஹமட் முர்ஷி ஆட்சியில் இருந்த போது அந்த ஆட்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் வீதிகளில் இறங்கி 18 நாற்கள் பேராடிய போது அந்தக் காலப்பகுதிக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் அநேகமானவர்கள் எகிப்தின் சவச்சாலைகளில் காணப்பட்டனர். துப்பாக்கிச் சூடு, சித்திரவதை அடையாளங்கள், மற்றும் கொடூரமான தாக்குதல் அடையாளங்கள் இவர்களில் காணப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கை அன்றைய ஜனாதிபதியின் கரங்களுக்கும் கிட்டியது.

aleppo kids

இராணுவத்தின் இந்தக் கொடூரங்கள் வெளிவருவதை தடுக்க தான் முர்ஷியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இராணுவத்துக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு குரலுக்கும் எதிராக ஆயிரம் குரல்களை மௌனமாக்குவதுதான் அவர்களின் திட்டம். இதில் முஸ்லிம் சகோதரத்துவ இயத்தினர் மட்டும் அல்ல ஏனைய எல்லா பிரிவினர்களும் குறிவைக்கப்பட்டனர்.

சிசியின் தலைமையின் கீழான எகிப்தில் சித்திரவதை ஒரு தொற்று நோய் ஆகிவிட்டது என மனித உரிமை கண்கானிப்பகம் மிகச் சரியாக நிலைமையை வர்ணித்துள்ளது. பொலிஸாருக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் தேவையான போதெல்லாம் சித்திரவதையை செய்ய தாராள அனுமதி கொடுத்துள்ளார் சிசி. அவர்கள் யாரை வதைக்க வேண்டும் என நினைக்கின்றார்களோ அவர்களை விரும்பிய போதெல்லாம் விரும்பிய முறைகளில் வதைத்துக் கொள்ள பச்சை சமிக்ஞை வழங்கப்பட்டுள்ளது.

எகிப்தின் இன்றைய சித்திரவதை முறைகள் கூட மிகவும் கொடியவையாக அமைந்துள்ளன. முனித உரிமை கண்கானிப்பகத்தின் ஒரு அறிக்கையின் படி ‘சித்திரவதையின் ஆரம்ப கட்டமாகவே அங்கு மின்சாரம் பாய்ச்சும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. கைது செய்யப்படுகின்றவர்கள் சித்திரவதை கூடங்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு கண்கள் கட்டப்பட்டு, நிர்வானமாக்கப்பட்டு கைவிலங்கு இடப்பட்ட நிலையில் காதுப் பகுதி தலைப்பகுதி மற்றும் உணர்வுகளைத் தூண்டக் கூடிய பகுதிகளில் மின்சாரம் பாய்ச்சப்படுகின்றது’ என ஆரமப் நிலை சித்திரவதை வர்ணிக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு அல்லது கைது செய்யப்பட்டவருக்கு மட்டும் சித்திரவதை செய்து அச்சத்தை அவருக்குள் ஏற்படுத்துவது மட்டும் அல்ல. அவரை அச்சம் ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையாக மற்றவர்கள் மத்தியில் நடமாட விடுவது தான் இதன் பிரதான இலக்கு. அந்த அச்சம் அவரின் நண்பர்கள், குடும்பத்தவர்கள் மற்றும் அவர் சார்ந்த அனைவர் மத்தியிலும் பரவ வேண்டும் என்பது தான் முக்கிய குறிக்கோள்.

அரச பயங்கரவாதத்தின் மத்திய நிலை விருந்தாக பெண்கள் கற்பழிக்கப்படுவது அமைந்துள்ளது. பாலியல் ரீதியான ஒழுக்க நிலையின் உச்சத்தில் இருக்கின்ற ஒரு சமூக கட்டமைப்புக்குள் இது நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாக உள்ளது. இந்தப் பாலியல் கொடூரம் இருசாரார் மீதும் பிரயோகிக்கப்படுகின்றது. ஓரினச் சேர்க்கையை முழுமையாகத் தவிர்க்கும் ஒரு சமூக அமைப்புக்குள் ஆண்களை ஆண்களே பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சம்பந்தப்பட்டவர் தனது இறுதி மூச்சு வரை வாய்திறக்காமல் மௌனித்தே சாக வேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வாறுதான் எகிப்தின்; இன்றைய ஆட்சியில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தப்பட்டு அது பரவ விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ஒரு அசிங்கமான தாக்கமாகப் பரவி தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. எகிப்திய அரசின் இன்றைய முக்கிய கைங்கரியம் இதுவாகத் தான் இருக்கின்றது. ஆனால் பேராசிரியர் மத்தியாஸ் பூன் தெரிவித்துள்ள கருத்தின் படி இந்த அடக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற தங்களது மனஉறுதியில் சிலர் இன்னமும் திடமாகவே உள்ளனர் என்கிறார்.

எகிப்தின் இன்றைய நிலையில் டுவிட்டர் வலைதளம் மட்டுமே சுதந்திரமாகக் கருத்துக்களை முன்வைக்கும் வசதி கொண்ட ஒரே மேடையாக உள்ளது. அதில் எகிப்திய புத்திஜீவி ஒருவர் தெரிவித்துள்ள கருத்தில் ‘எகிப்தில் இன்று பாவனையில் உள்ள மிகவும் அசிங்கமான ஒரு சொல் அச்சம். இதுதான் எல்லா தீய நிலைகளுக்கும் மூல காரணமாகவும் சந்தோஷத்துக்கு மிகவும் ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரத்துக்கு மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் திரை போடப்பட்டுள்ள நிலையில் சிலர் அதையும் மீறி துணிச்சலாக செயற்படுகின்றனர். உலகமும் அவர்களது முயற்சிகளை வரவேற்கின்றது. கெய்ரோவின் மனித உரிமைகள் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் மொஹமட் சாறீ மார்டின்எனால் விருது வென்றவர். அவர் இத்தகைய முயற்சிகளுக்கான ஒரு வாழும் உதாரணமாக எகிப்தில் இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஏவ்வாறாயினும் தற்போதைய சூழ்நிலைகளில் தனிப்பட்ட முறையில் ஒரு விருதை ஏற்றுக் கொள்வது கூட மிகவும் துணிச்சலானதும் ஆபத்தானதும் ஆகும்

மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ள துணிச்சலான பணிகளுக்கு அப்பால் தனது பரிசை தக்க வைத்துக் கொள்ள அவரால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அந்தப் பரிசை பெறுவதற்கான அவரது பயணத்துக்கு எகிப்திய அரசு தடை விதித்தது. இவ்வாறான குரல்களை நசுக்குவதற்கு தேவையான எல்லா காரியங்களிலும் அது ஈடுபட்டது. மொஹமட் சாறீக்கு சொந்த நாட்டுக்குள்ளேயே வேண்டப்படாத நபர் என்ற பட்டம் சூட்டப்பட்டு பிரகடனம் செய்யப்பட்டது. சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அல்நதீம் மருத்துவ சிகிச்சை நிலையம் அரசாங்கத்தால்; இழுத்து மூடப்பட்டது. ஆனால் இந்த அச்ச நிலையில் இருந்து வெளியேற முயன்றவர்களுக்கு உண்மை மட்டுமே இலக்காக இருந்தது. இந்த விருதானது கடந்த ஆறு வருட காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட, மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சகல எகிப்திய பிரஜைகளுக்கும் உரியதாகவே அமைந்தது. கொடுங்கோன்மைக்கும் ஊழலுக்கும் எதிராக அமைதி வழியில் எழுந்து நின்றமைக்காக அந்த மக்களுக்கு கிடைத்த பரிசாகவே இது அமைகின்றது என்று பரிசை வென்ற சாறீ தெரிவித்தள்ளார்.

alpepp 3

45 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்வாக நகருக்கான தனது பாரிய திட்டத்தின் முதலாவது கட்டத்தை அறிமுகம் செய்து வைத்த எகிப்திய ஜனாதிபதி சிசி மக்களின் வாய்களை மூடுமாறு கூறுவதற்கு தனக்கு கிடைத்த இன்னொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை. ‘நான் விமர்சனங்களால் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் அவை நன்கு விஷயம் அறிந்த அறிவுபூர்வமான மக்கள் மத்தியில் இருந்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் இந்த அறிவுபூர்வமான மக்கள் யார் என்பதை அவர் மட்டுமே அறிவார்.

இவ்வாறு அறிவுபூர்வமற்ற மக்கள் என ஆட்சியாளர்கள் கருதுகின்றவர்களுக்கு பலவந்தமாக காணாமல் போதல், சிறையில் அடைத்தல், சித்திரவதை கூடங்களில் அடைத்தல், சித்திரவதை செய்து மரணிக்கச் செய்தல் என பல தெரிவுகள் உள்ளன. தன்னை எதிர்ப்பவர்கள் அரசை அவமதித்த குற்றத்துக்கு ஆளாவார்கள் என்பது தேசத்தை ஆட்சி செய்பவரின் நீதியாக இருக்கின்ற நிலையில் அச்ச நிலையே அங்கு மேலோங்கி இருக்கும். அச்சம் ஒரு தேசத்தையே முடமாக்கிவிடும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மேற்பார்வையின் கீழ் 61 வருடங்களுக்குப் பிறகு எகிப்தில் முதல் தடவையாக நடத்தப்பட்ட சுதந்திரமான நியாயமான தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் வெற்றி பெற்று மொஹமட் முர்ஷி நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஏகிப்திய வரலாறறில் ஜனநாயக ரீதியாக தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் அவர்தான். அரபு நாடு ஒன்றின் தலைமையைப் பொறுப்பேற்ற முதலாவது இஸ்லாமிய தலைவரும் அவர்தான். மொர்ஷி எகிப்தின் ஐந்தாவது ஜனாதிபதி. இராணுவ பின்னணி அற்ற முதலாவது தலைவர். அவர் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் எகிப்திய வரலாறறில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. ஹொஸ்னி முபாரக்கின் முப்பது வருட கால கொடுமைகள் மிக்க அடக்குமுறை ஆட்சியின் பின் முதற் தடவையாக எகிப்திய மக்கள் ஜனநாயக் காற்றை சுவாசித்து சுதந்திரமாக அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தேர்தல் வழியமைத்தது.

ஆனால் இந்த ஜனநாயக ஆட்சியை அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த அப்துல்லாஹ் சிசி தூக்கி எறிந்தார். தனக்கு தானே ஜனாதிபதியாக அவர் மகுடம் சூடிக் கொண்டார்.

ஏகிப்தில் இஸ்லாமும் ஜனநாயகமும் மீண்டும் துளிர்விடத் தொடங்கியதைக் கண்டு அச்சம் கொண்ட சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், அபுதாபி, குவைத் என எல்லா சதிகார சக்திகளும் ஒன்றாக கைகோர்த்து துளிர் விட்ட ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தன. இந்தக் கூட்டணிதான் இராணுவ அடக்கு முறையாளனும் தமது கைப் பொம்மையுமான  சதிகார சிசியை ஆட்சியில் அமர்த்தியது. எகிப்தில் துளிர் விடத் தொடங்கிய இஸ்லாமும் ஜனநாயகமும் மத்திய கிழக்கிலோ அல்லது வளைகுடாவிலோ எந்த ஒரு நாட்டிலும் மலர்ந்து விடக் கூடாது என்ற இந்தத் தலைவர்களின் கொடிய எண்ணம் தான் எகிப்தின் இன்றைய நிலைக்கு காரணம். 30 வருடங்களாக இஸ்ரேலின் சேவகனாக இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்ட ஹொஸ்னி முபாரக் போன்ற ஒருவர்தான் எகிப்தின் ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் தேவையாகும்.

மக்களால் உண்மையான ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மொஹமட் முர்ஷி செய்த ஒரே ஒரு தவறு அவர் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் அங்கத்துவராக இருந்தமை தான். இந்த சகோதரத்துவ இயக்கம் தான் எகிப்தில் இஸ்லாமிய வாழ்வு முறையை அறிமுகம் செய்ய பாடுபட்டு வரும் ஒரு இயக்கமாகும். ஏகிப்திய மக்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. அதனால் தான் 61 வீதமான மக்கள் மொர்ஷிக்கு வாக்களித்தனர்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மற்றும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இஸ்லாம் மட்டுமே அவர்களின் ஒரே எதிரியாகப் பார்க்கப்படுகின்றது. தங்களுக்கு சவால் விடுக்கக் கூடிய பலம் மிக்க ஒரு சக்தியாக அவர்கள் இஸ்லாத்தை கருதுகின்றார்கள். எனவே தங்களது நாடுகளிலும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களிலும் இஸ்லாமிய உணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கி விடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள். எகிப்தில் துளிர் விட்ட இஸ்லாத்தை முளையிலேயே வேறோடு கிள்ளி எறிய அவர்கள் கூட்டாக  திட்டமிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மொர்ஷியின் ஆட்சியயை கவிழ்க்க காரணம் இதுதான்.

எகிப்தின் ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவ சர்வாதிகாரி மொஹமட் முர்ஷி செய்த முதலாவது காரியம் இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரஸ{க்கு நன்றி கூறியமைதான். காரணம் யூதர்களுக்கு சேவகம் புரிவதற்காக அவரை எகிப்திய ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர் இஸ்ரேலிய ஜனாதிபதிதான். பண்டைய பாரம்பரியமும் கலாசார பெருமையும் மிக்க எகிப்து என்ற மாபெரும் தேசத்தின் இன்றைய கேவலமான நிலை இதுதான். அந்த நாடு ஊழலும் அடக்குமுறை போக்கும் கொண்ட இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் இன்றைய தயரமான நிலையும் இதுதான்.