இலங்கையால் என்றாவது ஒருநாள் ஒரு ஜெஸிண்டா ஆர்டனை உருவாக்க முடியுமா?

உலக அரங்கில் நியுஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டன் ஒரு பிரகாசமான உதாரணத்தை வெளிப்படுத்திய தலைவியாகவும் இன நல்லுறுவுக்கான ஒரு முன் உதாரணத் தலைவியாகவும் திகழ்கிறார். சுக்தி மிக்க நாடுகள் வெறுப்புணர்வை தூண்டவும், நாடுகளை ஆக்கிரமித்து துவம்சம் செய்யவும், நாடுகளின் செல்வங்களை சூறையாடவும் மில்லியன் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கவும் அரசியல் கலாசார வேறுபாடுகளைப் பாவித்து வரகின்ற வேளையில் அவற்றிலி இருந்து முற்றிலும் விலகி நிற்கும் தனித்தவம் மிக்க தலைவியாக நியுஸிலாந்து பிரதமரை அவதானிக்க முடிகின்றது.

நியுஸிலாந்தின் கிறிஸ்சேர்ச் பகுதியிலும் அதனை அண்டிய பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல்களில் 49 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் 38 வயதான தனித்துவம் மிக்க லிபரல்வாத பிரதமர் ஜெஸிண்டா ஆர்டன் அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் கணடிப்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். சம்பவத்தை அடுத்து வந்த முதலாவது வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது ஆயிரக்கணக்கான மக்களோடு இணைந்து கொண்டார். ஆதன் பிறகு உயிர் இழந்தவர்களின் ஜனாஸா நல்லடக்கத்திலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்வுகளின் போது முஸ்லிம்களை கௌரவிக்கும் வகையில் பிரதமரும், நியுஸிலாந்து பொலிஸ் பிரிவின் பெண்களும், அந்த நிகழ்வில் தமது ஊடக கடமைகளை நிறைவேற்ற வந்திருந்த பெண் ஊடகவியலாளர்களும் ஏனைய முஸ்லிம் அல்லாத பொது மக்கள் பலரும் கூட சம்பிரதாயபூர்வமாக முஸ்லிம் பெண்கள் அணிவது போல் தலைக்கு முக்காடு இட்டவர்களாக இவற்றில் பங்கேற்றமை இங்கு விஷேட அம்சமாகும்.

ஏல்லா மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக ஜெஸிண்டா ஆர்டன் நடந்து கொண்டார். முத்திய கிழக்கு நாடுகளில் மேலைத்தேச எஜமானர்களால் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள கொடுங்கொல் ஆட்சிமுறையை ஒரு சமயக் கிரியையாக நடத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களை விட மிகச் சிறந்த முறையில் அவர் நடந்து கொண்டார். ஆந்த ஆட்சியாளர்களொ தமது மேலைத்தேச எஜமானர்களிடம் வாங்கிய பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்து தமது சொந்த மக்களை பால் வித்தியாமின்றி வயது வித்தியாசம் இன்றி கொன்று குவித்து வரகின்றனர். இந்தக் கொடூரங்களில் இருந்து அந்த நாடுகளின் புத்திஜீவி சமூகம் கூட தப்பிக்க முடியவில்லை.

இந்தப் படுகொலைகளுக்குப் பிந்திய நியுஸிலாந்து தலைவியின் செயற்பாடுகள் பலஇன, பலசமய, பலமொழி மற்றும் பல கலாசாரங்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது. இந்த பன்முகத் தன்மையை எவ்வாறு கௌரவிகப்பது, எவ்வாறு பாதுகாப்பது ஒரு நாட்டுக்குள் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை எவ்வாறு உறுதி செய்வது இக்கட்டான இருள் சூழ்ந்த ஒரு கால கட்டத்தில் ஒரு தேசம் என்ற வகையில் எவ்வாறு ஐக்கியப்பட்டு இருப்பது என்பன போன்ற பல பாடங்களை நியுஸிலாந்து தலைவியின் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.

1948 சுதந்திரத்தக்குப் பின் இலங்கையில் ஒரு ஜெஸிண்டா ஆர்டன் உருவாக்கப்படடுள்ளாரா? அல்லது உருவாகி உள்ளாரா? ஏன்பதுதான் வியப்புக்குரிய கேள்வி. ஆவ்வாறு நடந்திருந்தால் இன்று இந்த நாடு பொருளாதார சுபிட்சம் மிக்க ஒரு நாடாக இருந்திருக்கும். ஏல்லா வகையிலும் இது ஒரு சொர்க்கபுரியாகத் திகழ்ந்திருக்கும். முக்கள் சமாதானமாகவும், நல்லிணக்கத்தோடும் சுபிடசத்தோடும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் நாங்களோ கடந்த பல தசாப்தங்களாக இனப்பாகுபாடு காட்டும் அரசியல் வாதிகளையும் நாட்டை சூறையாடும் அரசில் தலைவர்களையும் அவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கும், வெளிநாட்டு கடன் சுமைக்குள்ளும் தள்ளிவிடும் தலைவர்களைத் தான் உருவாக்கி இருக்கின்றோம்.

அளுத்கமை, அம்பாறை, திகனை அக்குறணை அகிய இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்ற போது நமது அரசியல்வாதிகள் மிகவும் சூட்சுமமாகப் பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து மிக நீண்ட தூரம் பாதுகாப்பாக விலகி நின்றனர். சுpல தீவிரவாத சக்திகளையும் இனவாத ஊடகங்களையும் தான் அவர்கள் பாதுகாத்து நின்றனர். அளுத்கமை, பேருவளை, வெலிப்பனை ஆகிய இடங்களில் இனவாத தீயை மூட்டி விட்டு களிர்காய்ந்த எவருமே இதுவரை எந்த ஒரு அரசின் கீழுமு; சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த சம்பவங்களில் மூன்று மரணங்கள் இடம்பெற்றன. இதுவரை அது சம்பந்தமாக எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தர்கா டவுண் பகுதியில் ஒரு பௌத்த பிக்குவையும் அவரது சாரதியையும் தாக்கினார்கள் என்று குற்றம் சாட்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் சகோதரர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஐந்து வருடங்களாக இந்த வழக்கு விசாரணை களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மதகுருவும் அவரது சாரதியும் வழங்கிய வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களில் பரஸ்பரம் பல முரண்பாடுகள் இருந்ததை அவதானித்து கடந்த மாதம் இந்த மூவரையும் நிரபராதிகள் எனக் கூறி விடுதலை செய்துள்ளார்.

இலங்கையில் மாறி மாறி பதவியில் இருந்த அரசுகள் அவற்றின் இனவாதத் தலைவர்களின் செயற்பாடுகளால் தாங்கள் நடத்துபவர்கள் பக்கம் தான் இருப்போமே தவிர பாதிக்கப்பட்ட மக்களுடன் அல்ல என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளனர். இது தான் நியுஸிலாந்து பிரதமருக்கும் எமது இனவாத அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான மிகப் பெரிய, வித்தியாசமாகவும் இருக்கின்றது.

ஓன்பது மாத குழந்தைக்குத் தாயான உலகின் இன்றைய பிரதமர்களில் வயதில் மிகவும் இளைவரான நியுஸிலாந்து பிரதமர் தனது குழந்தையை அமைதியாக வீட்டில் தூங்க வைத்தவிட்டு தனது தேசத்தின் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவு மக்களின் தாயாக களத்தில் நின்றார். சகல நியுஸிலாந்து மக்களின்தும் சார்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது அன்பையும், கருணையையும் அனுதாபத்தையும் அவர் சொறிந்தார்.

அவர் முஸ்லிம்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்தும் வகையில் கறுப்பு நிற முக்காடு அணிந்த போது ஏனைய நியுஸிலாந்து பெண்கள் தாமாகவே முன்வந்து அவர்களும் கறுப்பு முக்காடு அணிந்தனர். ஒரு தேசத்தின் தலைமை உயர் பண்புகளை வெளிப்படுத்தினால் அதைப் பின்பற்ற அந்த தேசத்தின் மக்களும் தயாராக இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான உதாரணமாக அமைந்தது.

முஸ்லிம் சமூகத்தை நெரடியாகச் சந்தித்து அவர் அவர்களோடு இரண்டறக் கலந்தார். புhதிக்கப்பட்ட மக்கள் மீது தனது அரசு பிரதான கவனம் செலுத்தி அவர்களின் எதிர்கால பாதுகாப்பு உற்பட ஏனைய எல்லா விடயங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி அவர்களை ஆசுவாசப்படுத்தினார். முதற் கட்டமாக இறந்தவர்களின் ஸனாஜா நல்லடக்கங்களை உரிய முறையில் துரிதமாக மேற்கொள்ள வெர் முன்னின்று வழகாட்டினார். இதனிடையே அந்த நாட்டு மக்கள் தமது பங்களிப்புக்;கு சம்பவம் நடந்த அந்நூர் மஸ’ஜிதுக்கு அருகில் உள்ள பூங்காவில் தமது சமய கலாசார முறைப’;படி மலர் வளையங்களை சாத்தியும் பூங்கொத்துக்களை வைத்தும் கண்ணீh விட்டு கதறி அஞ்சலிகளை செலுதத்த தொடங்கிவிட்டனர்.

கிறிஸ்சேர்ச் மக்களின் பாதகாப்பு அதிலும் குறிப்பாக அங்கு வாழும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்தியதாகவே சம்பவத்தின பின்; உலகுக்கு அவர் விடுத்த முதலாவது செய்மி அமைந்திருந்தது.

நியுஸலாந்தின் வரலாற்றில் அது என்னவோ கறுப்பு தினம் தான். ஆனால் அன்றைய தினத்தில் தனது செயற்பாடுகளாலும் கருத்தக்களாலும் நியுஸிலாந்து பிரதமர் ஒரு நட்சத்திரமாக மிளிர்ந்தார் என்று ஒரு ஊடகவியலாளர் வர்ணித்துள்ளார்.

அதன் பிறகு அவர் மீண்டும் குறுப்பு நிற ஆ டையில் தோன்றி பாராளுடமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள், அஸ்ஸலாமு அலைக்கும் என முஸ்லிம்கள் கூறும் மகமன் கூறி அவர் தனது உரையை தொடங்கிய விதம், பாராளுமன்றத்தில் அன்று இடம்பெற்ற செயற்பாடுகள் என அவரை மனிதாபிமானத்தின் உச்சத்துக்கு கொனடு சென்றன.

இந்தத் தாக்குதலை நடத்திய நபர் சட்டத்தை முழ அளவில் சந்திக்க வேண்டியிருக்கும். ஆந்த விடயத்தில் தனது அதிகாரத்தை முழுமையாகப் பிரயோகிக்கப் போவதாகவும் அவர் உறுதி அளித்தார். அது மட்டுமன்றி அந்த நபரின் பெயரைக் கூட ஒரு போதும் தனது வாயால் தான் உச்சரிக்கப் போவதில்லை என்றும் அவர் தனக்குத் தானே உறுதி பூண்டுள்ளார். ஆன்றைய பாராளுமன்ற உரையை முடிக்கும் போது ‘அடுத்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்காக மீண்டும் ஒன்று கூடுவர். நியுஸிலாந்து மக்களாகிய நாமும் அவர்களுடன் அவர்களின் துயரங்களிலும் ஆதங்கங்களிலும் பங்கேற்போம்’ என்று கூறி முடித்தார். இந்தச் சம்பவத்தின் பின் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அவர் கறுப்பு நிற முக்காடு அணிந்திருந்தமை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

நியுஸிலாந்து மக்கள் முஸ்லிம்கள் மீதான தமது ஒருமைப்பாடு அன்பு கருணை என்பனவற்றை தமது சமய மற்றும் கலாசார முறைப்படி வெளிப்படுத்தி வருகின்றனர்.

மார்ச் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான அழைப்பு (அதான் ஒலி) ஒரு தேசிய விடயமாகக் கருதப்பட்டு நாடு முழுவதும் நேரடியாக ஒலி ஒளிபரப்பச் செய்யப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து நாடு முழவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மூலம் ஸ்தம்பித நிலைக்கு வந்தது. ஆல்நூர் மஸ்ஜிதுக்கு மன்னால் தழிரண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு தலைமை தாங்கி பிரதமர் ஆர்டன் நினைவு கூறல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அன்றும் அதான் ஒலி தேசிய ரீதியில் ஒலித்தது. சும்பவத்தில் உயிர் தப்பிய அல்நூர் மஸ்ஜித் இமாம் கமால் பவ்டா தொழுகைக்குத் தலைமை தாங்கினார். தொழுகை மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பின் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த வாரம் 50 உயிர்களைப் பலி எடுத்து 42 பேரை காயப்படுத்திய கொடூரம் இங்கு அரங்கேறியது. ஊலகையெ அதழிர வைத்த அந்தச் சம்பவத்தை நாம் அன்று நெரடியாக கண்டோம். ஆனால் இன்று உலகையே சிந்திக்க வைக்கும் அன்பையும் கருணையையுமட் ஆறுதலையும் நாம் காணுகின்றோம் என்று அவர் கூறினார்.

கோடூரத்தைக் கொண்டு எம்மை பயங்கரவாதிகள் சிதைக்க நினைத்தனர். ஆனால் நியுஸிலாந்தை சிதைக்க முடியாது என்பதை அவர்கள் இப்போது புரிந்திருக்க வேண்டும். வேள்ளை மேலாதிக்கவாத கருத்தியல் தீமையானது. அது உலகளாவிய ரீதியில் மனித குலத்தக்கு அச்சுறுத்தலானது என்று பள்ளிவாசல் இமாம் கூறினார்.

முஸ்லிம்கள் மீது பாரபட்சம் அற்ற விதத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களை மனிதாபிமானம் அற்றவர்களாகக் காட்டும் வகையிலுமான ஒரு தீய நோக்கம் கொண்ட பிரசாரம் தான் இஸ்லாமோபோபியா என்று விள்ளமளித்த அவர் உலகத் தலைவர்கள் வெறுப்புணாவு பேச்சுக்களுக்கு எதிராகவும் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்’படுத்தவதை தவிர்க்கவும் கூட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சும்பவத்தில் காயம் அடைந்தவர்களோடு செர்த்து இன்னும் பல்வேறு இடங்களில் இருந்து வந்வர்களுமாக நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்றனர்.

நியுஸிலாந்து பிரதமர் தெரிவித்த கருத்தக்களை மீள் உறுதி செய்வது போல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தனது நாட்டு பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் நியுஸிலாந்து சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘.ந்த வெறுப்புணர்வை எதிர்த்து நாம் போராட வேண்டும். ஏல்லோரும் ஒன்றிணைந்து பொராட வேண்டும். நுpச்சயம் நாம் அதைச் செய்வோம்’ என்று கூறினார். கனடாவின் ஆழ்ந்த அனுதாபமும் ஆதரவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு என்று கூறிய அவர் நியுஸிலாந்து பிரதமரின் கருணை மிக்க தலைமைத்துவத்தையும் பாராட்டினார்.

சபாநாயகர் அவர்களே கடந்த காலங்களில் உலகம் முழவதும் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துச் செல்வதை நாம் காணுகின்றோம். எனவே முஸ்லிம் குடும்பங்கள் கனடா அமெரிக்கா மற்றும் எமது நேச நாடுகள் போன்ற ஜனநாயக நாடுகளை நோக்கி ஓட்டம் பிடிததுள்ளனர். தமது புதிய இல்லங்கள் தமக்கு பாதகாப்பு அளிக்க வேண்டும் என அவர்கள் நம்பிக்கையோடு பிராத்திக்கின்றனர். சுமயங்களை அடிப்படையாக வைத்து நாம் குறி வைக்கப்பட மாட்டோம் என்று அவர்கள் பிள்ளைகள் நம்பும் இடத்தை அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஆனால் வன்முறைகளைக் கண்ட ஓட ஆரம்பித்த குடும்பங்கள் துரதிஷ்டவசமாக அவர்கள் புதிதாகக் கரைசேர்ந்த இடத்தில் புதவகையான வன்முறைக்கு மகம் கொடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படகின்றனர். குடியேற்றவாசிகளுக்கான வெறுப்புணாவு. வேள்ளை தேசியவாதம், நவ நாஸி பயங்கரவாதம் போன்ற வடிவங்களில் அவர்கள் அதை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறான குழுக்கள் கனடாவிலும் செயற்படுகின்றன. ஆனால் இந்த தேசமோ எமது முன்னொர்களால் சிறுபான்மையினரை அதிகளவில் பாதுகாத்த ஒரு தேசம். எமது பல்லினப் பண்பை பிரபலப்படுத்தி அதுவே எமது பாரிய பலம் என்று நிரூபித்த தேசம்.

உலகம் முழவதும் உள்ள எமது பங்காளிகளுக்கு இனவாதத்துக்கும் சகிப்புத்தன்மை அற்ற நிலைக்கும் எதிராகப் போராடுவது ஒரு பெரிய சவாலாகவும் போராட்டமாகவும் மாறி உள்ளது. ஆனால் இனிமேலும் எங்களால் அதை காலம் தாழ்த்த முடியாது. இங்கு நாம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். பக்கங்களை நாம் புரட்டலாம். நூம் சென்று கொண்டிருக்கும் இந்த ஆபத்தான பாதையில் இருந்து நாம் விலகிச் செல்லலாம். முன்மாதிரிகளை உருவாக்குவதற்கு மட்டுமே எமது சமூகங்கள் எமக்குத் தேவை.

சபாநாயகர் அவர்களே இந்த உலகில் கெட்டவர்களை விட நல்லவர்களே அதிகமாக உள்ளனர். ஓளி எப்போதும் இருளை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் நன்மை தீமையை வெல்லும் ஆற்றல் மிக்கது. இந்தக் கொடூரங்களில் இருந்து மீண்டு எழுந்து ஒன்று பட்டு வருகின்ற போது எமது பிரஜைகளிடம் நாம் அதைக் காண முடிகின்றது. புhதகாப்ப இல்லை என்று நினைப்பவாகளுக்கு நாம் நேசக் கரம் நீட்டுவோம். நியுஸிலாந்தில் நாம் அதைப் பார்க்கின்றோம். இது ஒரு மக்கியமான போராட்டம்

எல்லாவிதமான அரசியல் பிரிவுகளையும் சோந்தவர்களுககு நான் அழைப்பு விடுக்கின்றேன். நூம் செவை புரியும் நல்ல மக்களின் உதாரணங்களைப் பின்பற்றுங்கள். சுரியானதை, நல்லதை செய்யுங்கள். இந்த வெறுப்புக்களை எதிர்த்து நாம் போராட வேண்டும். நூம் ஒன்று பட்டால் நிச்சயம் அதை நாம் செய்யலாம் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் மன்செஸ்டர் பகுதியில் வாழும் வைத்தியரும் தாயும் முஸ்லிம்களின் கருத்தக்கள் பற்றி எழுதுபவருமான சீமா இக்பால் அமெரிக்க ஜனாதிபதி போன்ற அரசியல் வாதிகளும் ஊடகங்களும் முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனும் இரத்தக்கரை படிந்தவர்கள் என்று குறிப்பிட்டள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் றொபர்ட் பிஸ்க் இந்தச் சம்பவம் பற்றிய ஊடக நாடகங்கள் வருத்தம் அளிப்பவையாக உள்ளன. நியுஸிலாந்தின் பல ஊடகங்களும் பிரிட்டிஷ் ஊடகங்களும் கொலையாளியால் வெளியிடப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைப் பாவிததுள்ளன. அவருடைய பைத்தியக்காரத் தனமாக பிரகடனத்தையும் வெளியிட்டுள்ளன. தங்களது ஊடகங்களை ஊக்குவிக்க அவை இவ்வாறு செயதுள்ளன. ஆனால் அவை எல்லாமே தோற்றுப் போய் விட்டன.

இவ்வாறான உலகப் பின்னணியில் இன்றை உலகின் தேவை டொகால்ட் டிரம்ப் போன்ற மதவெறியர்கள் அல்ல. ஜெஸிண்டா ஆர்டன் போன்றவர்களே இன்றைய உலகின் தேவை. முதலில் கையாளப்பட வேண்டியவர்கள் ஆயுத மற்றும் வெடி பொருள் உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் அத்தோடு பிரதான ஊடகங்களின் முஸ்லிம் எதிர்ப்பு பங்காளிகள்.

இலங்கை ஒரு ஜெஸிண்டா ஆர்டனை உருவாக்கி இங்கும் பிறண்டன் டெரன்ஸ் போன்றவர்கள் உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? (முற்றும்)