israel aqsaஅரபு கொடுங்கோல் ஆட்சியாளர்களும் உலக முஸ்லிம்களும் வேடிக்கை பார்க்கும் நிலை

முஸ்லிம்களின் மூன்றாவது பனிதப் பிரமேதசமான மஸ்ஜிதுல் அக்ஸாவில் சியோனிஸ யூத குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் வன்முறைகளைத் தூண்டி வருகின்ற நிலையில் அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் எந்த வித்தியாசமும் இன்றி வேடிக்கை பார்க்கும் நிலையானது அவர்கள் இஸ்லாத்தை கைவிட்டு விட்டு நீண்ட தூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதையே புலப்படுத்துகின்றது. அமெரிக்க இஸ்ரேல் எஜமானர்களுக்காகவும் தமது சொந்த அரசியல் இருப்புக்காகவும் பலஸ்தீனர்களின் உரிமைகள், ஜெரூஸலத்தின் முக்கியத்துவம், மஸ்ஜிதுல்அக்ஸா, இஸ்லாம் என எல்லாவற்றையும் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

 

2017 ஜுலை 14 வெள்ளிக்கிழமை அன்று இரண்டு தினங்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸாவை இஸ்ரேல் மூடியது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெரூஸலத்தில் புனிதப் பள்ளிவாசலின் நுழைவாயில் பகுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றை காரணம் காட்டி பள்ளிவாசல் மூடப்பட்டது. பல தசாப்தங்களுக்குப் பின் அல்அக்ஸா பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்தப்படுவது முதல் தடவையாக தடைபட்டது. ஜெரூஸலத்தின் முப்தி ஷேக் முஹம்மத் ஹ{சேன் இஸ்ரேல் படைகளால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் தடையை மீறி பள்ளிவாசல் பகுதிக்குள் பிரவேசித்து திறந்த வெளியில் ஜும்ஆ தொழுகையை நடத்த முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஹரம் அல் ஷரிப் என அழைக்கப்படும் விசாலமானதோர் வளாகத்தின் ஒரு பகுதியே அல் அக்ஸா பள்ளிவலாசல். உலக முஸ்லிமகளால் புனிதமானது எனக் கருதப்படும் பல இடங்களை உள்ளடக்கியதே இந்த பிரதேசம். உலகில் கட்டப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல் எனவும் அல் அக்ஸா நம்ப்பபடுகின்றது. முதலாவது பள்ளிவாசல் மக்காவில் உள்ள அல்ஹரம் பள்ளிவாசலாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக பயணத்தின் போது மக்காவில் இருந்து இங்கு அழைத்து வரப்பட்டு; இங்கிருந்து தான் விண்ணுலகத்துக்கு உயர்த்தப்பட்டார்கள் என்று புனித குர்ஆன் குறிப்பிடுகின்றது. கிறிஸ்தவ மக்களுக்கும் இது பல்வேறு விதத்தில் முக்கியமான பிரதேசமாகும். 1967 யுத்தத்தில் இஸ்ரேல் படைகள் பலஸ்தீனத்தின் அல்குத்ஸ் நகரை (கிழக்கு ஜெரூஸலம்) கைப்பற்றிய பின் இது பற்றி புதுப்புது கதைகளும் வியாக்கியானங்களும் வெளிவரத் தொடங்கின.

ஜுலை 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் அல்அக்ஸாவை முற்றுகையிட்டனர். முக்ராபி நுழைவாயில் ஊடாக அவர்கள் பிரவேசித்தனர். ஆயுதம் தரித்த இஸ்ரேல் பொலிஸார் அவர்களுக்கு துணையாக நின்றனர். கடுமையான சோதனைகளுக்கு உற்பட்டால் மட்டுமே பலஸ்தீனர்கள் உள்ளே செல்லலாம் என்று அறிவித்தனர். பள்ளிவாசலுக்கான ஏனைய நுழைவாயில்கள் பலவும் மூடப்பட்டன. ஒவ்வொரு நுழைவாயிலிலும் உலோக பாதுகாப்பு கண்டுபிடிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட பின் செவ்வாய்க்கிழமை அன்று சில கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பாதுகாப்பு நுழைவாயில்களைக் கடந்து பள்ளிக்குள் பிரNசிக்க முஸ்லிம்கள் மறுத்து வருகின்றனர்.palestine torture3

ஜெரூஸலம் விவகாரம் பற்றி நிபுணர் ஜமால் அம்ரோ இது பற்றி விளக்குகையில் அல் அக்ஸா வளாகத்துக்குள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை முழுமையாகப் பிரயோகிக்கும் வகையில் எந்தப் பகுதியால் பலஸ்தீனர்கள் பிரவேசித்தாலும் அவர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் இந்த உலோக கண்டு பிடிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாகும். முஸ்லிம்கள் மீது தேவையில்லாத நெருக்குதல்கள் பிரயோகிக்கப்படும் அதேவேளை எங்கெங்கோ இருந்து கொண்டு வரப்பட்டுள்ள காடையர்களும் கள்வர்களும் யூதக் குடியேற்றவாசிகளும் பலஸ்தீனர்களின் பூமியை தொடர்ந்து அபகரிக்கும் நிலைமை நீடிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் இராணுவத்தினதும் பொலிஸினதும் பூரண பாதுகாப்போடு இவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் படைகள் என தங்களை அழைத்துக் கொள்ளும் யூதக் காடையர்களுக்கு எதிரான பலஸ்தீன மக்களின் போராட்டம் நீண்ட நாற்களாக முடிவின்றி தொடருகின்றது. உலகம் முழவதும் உள்ள 105 கோடி முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்ற கேள்வியும் அதனோடு சேர்ந்து தொடருகின்றது.

இஸ்ரேலின் மிகப் பிந்திய இந்த ஆத்திரமூட்டல் செயற்பாடுகள் பற்றி பலஸ்தீன பத்தி எழுத்தாளர் றம்ஸி பரோட் குறிப்பிடுகையில் அல்அக்ஸா வளாகத்துக்குள் இவ்வாறான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும். 1967 முதல் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஆயுதங்களைப் பாவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்தப் புனிதப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதிகளில் நூற்றுக் கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸறேலின் இறையாண்மை ஆதிக்கத்தின் கீழ் அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்ந்து இழுத்து மூடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹ{ கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியின் கீழ் வலுவூட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹ{ கிழக்கு ஜெரூஸலத்தை தனதாக்கும் அவரின் கனவு நனவாகி வருவதாகவே உணரத் தொடங்கியுள்ளார். எவ்வாறாயினும் அவரின் கனவு நனவாவதற்கு அவர் அதிக விலையை செலுத்த வேண்டியிருக்கும். இந்த தாக்குதல் தினத்தன்று மேற்குக் கரையின் பல பகுதிகளில் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை ஒன்றும் உயிர் நீத்துள்ளது. மேற்கு கரையில் இருந்து சிகிச்சைக்காக வெளியேற காத்திருந்த நிலையில் நோய் வாய்ப்பட்டிருந்த அந்த குழந்தை சிகிச்சை பெற வழியின்றி மரணித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் எதுவுமே இந்த விடயங்களை கண்டு கொள்ளவும் இல்லை. இவை எந்த ஊடகங்களிலும் பதிவாகவும் இல்லை.

pal womanடிரம்ப்பும் நெட்டன்யாஹ{வும் இணைந்து பலஸ்தீனர்களை தற்போது ஒரு முனைக்குள் தள்ளி வருகின்றனர். மேலும் வன்முறைகள் வெடிக்கலாம் என றம்ஸி பரோட் எச்சரித்துள்ளார். ஊடகங்களுக்கு தெரியாமல் அன்றாடம் பலஸ்தீனர்கள் மரணம் அடைகின்றனர். அவர்கள் தற்போது விரக்தி மற்றும் கோபம் என்பனவற்றின்; உச்ச நிலையில் உள்ளனர். காட்டுமிராண்டிகளின் கால்களுக்குள் அவர்களின் புனிதப் பிரதேசம் கட்டப்பட்டு வருகின்றது. சர்வதேச மௌனத்தின் மத்தியிலும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவுக்கு மத்தியிலும் இவை அரங்கேறி வருகின்றன.

அல் அக்ஸா மீதான இஸ்ரேலின் புதிய வன்முறைகள் பற்றி பலஸ்தீன முக்கியஸ்தர்கள் பலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

பலஸ்தீன காணி கழகத்தின் தலைவரும் ஸ்தாபகருமான ஸல்மர் அபூ சித்தா: அல் அக்ஸா பள்ளிவாசல் மற்றும் அதனோடு அண்டிய புனிதப் பிரதேசம் என்பனவற்றை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்து வரும் அதிக பட்ச முயற்சிகள் பலஸ்தீனர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான இஸ்ரேலின் ஒரு துணிகர முயற்சியின் வெளிப்பாடாகவே தெரிகின்றது. பலஸ்தீனர்கள் மத்தியிலோ அல்லது அரபிகள் மத்தியிலோ அல்லது பொதுவாக முஸ்லிம்கள் மத்தியிலோ பலஸ்தீன விவகாரத்தைக் கையாளவும் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும் ஒரு தலைதை;துவம் இல்லை என்பதையும் இஸ்ரேல் நன்பு புரிந்து வைத்துள்ளது என்பதற்கான ஒரு அடயாளமாகவும் இந்த நிலைமை காணப்படுகின்றது.

இஸ்ரேலின் வெறித்தனமான தீவிரவாதத்தின் வெளிப்பாடு இப்போது நன்றாகப் புலப்படுகின்றது. இது இப்போது உச்ச கட்டத்துக்கு வந்துள்ளது. ஆனால் அதற்கெதிரான அரபு பாதுகாப்பு மிகவும் கீழ் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

1967 ஜுனில் 800 வருடங்கள் பழமையான மொரோக்கோ பிரிவை இஸ்ரேல் தரை மட்டமாக்கிய பின் புனிதப் பிரதேசமும் யூதர்களுக்குத் தேவைப்பட்டது. 1969 ஆகஸ்ட்டில் சலாஹ{த்தீனின் பிரசார மேடை (மிம்பர்) அழிக்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலர் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அல் அக்ஸா பகுதி மீது நேரடி தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது. இஸ்ரேலின் தொடர் வரம்பு மீறலுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

இஸ்ரேலிய வெறித்தனத்தின், இனவாதத்தின், ஆக்கிரமிப்பு விஸ்தீரனத்தின்; உண்மையான முகங்களின் நேரடி விளைவுகள் தான் இவை. குடியேற்றவாசிகளின் ஆட்சிதான் இஸ்ரேலிய அரசின் உண்மையான அடிப்படைக் கட்டமைப்பு. இந்த அரசு தான் இன்று பலஸ்தீனத்தின் எஞ்சியுள்ள எல்லா பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடக்கி ஆள முயலுகின்றது. அகண்ட இஸ்ரேலின் சவாலுக்கு உற்படுத்த முடியாத அரசியல் மற்றும் சமய ரீதியான தலைநகராக ஜெரூஸலத்தை பிரகடனம் செய்வது தான் அவர்களின் வெறித்தனமான இலக்கு.

பலஸதீனத்துக்கு விசுவாசமானதோர் தலைமைத்துவம் இல்லாததோர் இடைவெளியின் நேரடி பெறுபேறுதான் இன்றைய சூழ்நிலை. ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் இஸ்ரேலிய ஆக்கிமிப்புக்கு சேவகம் புரியும் ஒரு வகை தலைமைத்துவம் தான் உருவாக்கப்பட்டது. அரபு அரசாங்கங்கள் சில இஸ்ரேலுக்கு சார்பாக மாறி அரபு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முறை இதன் மூலம் ஒழித்துக் கட்டப்பட்டது. இவற்றின் விளைவாக சுமார் 150 கோடி முஸ்லிம்கள் தமதுaqsa முதலாவது கிப்லாவையும் இழந்து மூன்றாவது புனித பள்ளிவாசலையும் இழந்து அவற்றை காப்பாற்றவும் மீட்கவும் வழியின்றி நிற்கின்றனர். ஆனால் இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நிச்சயம் எதிர்பாராத பக்கத்தில் இருந்து வெடிக்கலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்று அபூ சித்தா குறிப்பிட்டுள்ளார்.

இரத்திரனியல் இன்திபாதாவின் இணை ஸ்தாபகரும், பலஸ்தீனத்தில் நீதிக்கான யுத்தம் என்ற நூலின் ஆசிரியருமான அலி அபு நிமா தனது கருத்தை முன்வைக்கையில் : அல் அக்ஸா மீதான தற்போதைய போராட்டம் இஸ்ரேல் 1967 முதல் தனது வன்முறை குடியேற்ற காலணித்துவத்தை திணிப்பதற்கும் ஜெரூஸலத்தில் இன சுத்திகரிப்பக்கும், மேற்கு கரையில் அது புரியும் அடாவடித்தனத்துக்கும் சமயத்தை ஒரு கேடயமாக பாவித்து வருவதன் தொடர் விளைவாகவே காணப்படுகின்றது.

அல் அக்ஸாவை அழிப்பதற்கு அவர்கள் பாரதூரமான ஒரு முயற்சியை மேற்கொண்டால் அது ஏற்படுத்தப்போகும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியான மோசமான விளைவுகளை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

இஸ்ரேலிய கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு பதில் சொல்லும் விடயத்தில் பிராந்தியத்தின் அரபு ஆட்சியாளர்கள் மத்தியில் எந்த வித்தியாசமும் காணப்படவில்லை. அவர்கள் தமது அமெரிக்க இஸ்ரேல் எஜமானர்களை மகிழ்விப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதும் உள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட கொடுங்கோலுக்கு உள்ளான மக்கள் கோபத்தில் கொந்தளித்துப் போய் உள்ளனர். இந்தக் கோபமும் கொந்தளிப்பும் எப்போது எங்கிருந்து என்ன வடிவத்தில் குமுறி வெடிக்கும் என்பது எவருக்கும் தெரியாது.

எமது நாடான இலங்கையில் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் பலஸ்தீனத்துக்காக குரல் கொடுக்கும் மக்களாகவே இருந்தனர். 1960 மற்றும் 70 களில் அவர்கள் பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் புனிதப் பிரதேசங்களுக்காக குரல் எழுப்புவதிலும் முன்னணியில் இருந்தனர். அல் அக்ஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து தொடரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த விடயத்தில் பெரும் வித்தியாசம் காணப்படுகின்றது.

மத்திய கிழக்கில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்த ஈரானின் மறைந்த ஆன்மிகத் தலைவர் இமாம் குமைனி புனித றமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை பைத்துல் முகத்தஸை மீற்பதற்கான சர்வதேச குத்ஸ் தினமாகப் பிரகடனம் செய்தார். அன்று முதல் உலகம் முழுவதும் இந்தத் தினம் அமைதியாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுக் கூட்டங்கள் விரிவுரைகள் கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணாவு செயற்பாடுகள் என பல நிகழ்வுகள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன.

ஆனால் இலங்கை முஸ்லிம்கள் இந்த நிகழ்வை கூட இன்று மறந்து விட்டனர். அல் அக்ஸா மீதான இஸ்ரேலின் அட்டூழியங்களை இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களின் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் என்பன கூட இன்று மறந்து விட்டன. இந்த விடயம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுவதற்கான ஜும்ஆ பிரசாரங்கள் கூட நடத்தப்படுவதில்லை. நரக வேதனை அதிலிருந்து விடுதலை என்ற ரீதியில்தான் றமழான் மாத கடைசி வெள்ளிக்கிழமை பிரசாரங்களும் வழமையான பாணியில் இடம்பெறுகின்றன. இது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மிகவும் கவலைக்குரிய நிலையாகும். எமது இன்றைய அரசியல் மற்றும் சமய ரீதியான வங்குரோத்து நிலையையே இது பிரதிபலிக்கின்றது. (முற்றும்)