sabra shatilaஷப்றா, ஷடில்லா படுகொலைகளின் நினைவு கூறல்

1982 செப்டம்பரில் மத்திய கிழக்கில் யூத பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகளான இஸ்ரேலின் அன்றைய பிரதமர் மெனாச்சம் பெகின் பாதுகாப்பு அமைச்சர் ஏரியல் ஷரோன் ஆகியோர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தை துவம்சம் செய்வதற்காக லெபனானுக்குள் ஊடுறுவினர்.

இது சம்பந்தமாக பிரபல வரலாற்றியலாளரும் ஊடகவியலாளருமான பீட்டர் மென்ஸ்பீல்ட் குறிப்பிடுகையில் பாரிய அளவிலான விமானத் தாக்குதலின் பின் இஸ்ரேல் முழு அளவிலான தரை வழி ஆக்கிரமிப்பை லெபனானுக்குள் மேற்கொண்டது.

இந்த ஆக்கிரமிப்பின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டு ஒட்டு மொத்த சனத்தொகையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த ஆக்கிரமிப்புக்கு பக்க பலமாக நின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் தமக்கிருந்த வல்லரசு அந்தஸ்த்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் வாய்களுக்கு விலங்கிடப்பட்டது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது ஆகாயம் தரை கடல் என எல்லா வழிகள் ஊடாகவும் குண்டு மழை பொழியப்பட்டது. இந்த மாபெரும் அழிவை உலகம் தொலைக்காட்சிகள் வழியாக வேடிக்கை பார்த்து வியந்து நின்றது என மொரீன் அப்துல்லாஹ் என்ற பத்தி எழுத்தாளர் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் முக்கிய ஊடகவியலாளர் றெபர்ட் பிஸ்க் இந்த தாக்குதல் சநம்பந்தமான தகவல்களைச் சேகரித்தார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய Pவைல வாந யேவழைn ‘பாவப்பட்ட தேசம’; என்ற நூலில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள் முஸ்லிம்களே என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக முஸ்லிம்களின் மயான பூமிகள் நிறம்பி வழிந்தன. சுமார் 30 அடி அகல ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டு கொத்து கொத்தாக மக்கள் புதைக்கப்பட்டனர். மேல் மட்ட உத்தரவுகளின் படி இவ்வாறு செய்யப்பட்டன. சிதைவடைந்த உடல்கள் பல மனதைப் பிழிவதாய் அமைந்திருந்தன. அந்தப் பிரதேசத்தில் சுமார் 100 பாகை அளவில் வெப்பம் காணப்பட்ட நிலையிலும் அதையும் மீறி மனித உடல்களின் துர்நாற்றமே மூக்கைத் துளைத்தது. அன்பு, ஆதரவு, அழகு, கண்ணியம், சுகாதாரம், பராமரிப்பு, தூய்மை, சுற்றாடல் என மனித வாழ்வின் அணைத்து அடிப்படை அம்சங்களும் அங்கே சிதைவடைந்து காணாமல் போயிருந்தன என்று அவர் நிலைமையை வர்ணித்துள்ளார்.

செஞ்சிலுவை சங்க அறிக்கையின் படி தாக்குதலின் இரண்டாவது வார இறுதியில் 14 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 20 ஆயிரம் பேர் மோசமான காயங்களுக்கு ஆளானர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் மிகவும் பயங்கரமான கொடூரம் இழைக்கப்பட்டது மேற்கு பெய்ரூட் பிரதேசத்தில். இங்கு சுமார் 2461 முஸ்லிம்கள் இஸ்ரேல் படைகளால் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இது தவிர இன்னும் பல கிராமங்களிலும் லிடானி நதிக்கரை பிரதேசத்திலும் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பெய்ரூட் நகருக்குள் முற்றுகை இடப்பட்டிருந்த பலஸ்தீன விடுதலை இயக்கம் முற்றாக சரணடைய வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து இஸ்ரேல் அதன் காட்டு தர்பாரை நீடித்தது. சர்வதேச சட்டங்களை துச்சமென மதித்து இஸ்ரேலிய அரக்கர்கள் தமது வெறியாட்டத்தை தொடர்ந்தனர். அமெரிக்காவால் தனக்கு வழங்கப்பட்ட நாசகார கொத்தணி குண்டுகளையும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலில் தாராளமாகப் பயன்படுத்தியது. மேற்கு பெய்ரூட்டில் இந்த கொத்தணி குண்டுகள் விளைவித்த நாசத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பொது மக்கள் பலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து பெருமளவில் வெளியேறினர்.shabra 3

கடைசியாக பெய்ரூட்டில் இருந்து வெளியேறுவதாக பலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. பின்னர் மேற்கு பெய்ரூட்டுக்கான மின்சாரம் தண்ணீர் என்பனவற்றையும் இஸ்ரேலிய காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர்கள் துண்டித்தனர். இந்தப் பிரதேசத்துக்குள் உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லவும் இஸ்ரேல் படையினர் தடை விதித்தனர். தமது பிள்ளைகளின் பசியைத் தீர்க்க பெண்கள் வெளியே வந்து உணவுப் பொருள்களை எடுத்துச் சென்ற போது அவற்றை தடுத்து இஸ்ரேலிய படைகள் உணவுப் பொருள்களையும் குடிநீர் போத்தல்களையும் சூறையாடின.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி அதன் பயன்களை அமெரிக்காவும் அனுபவித்தது. இதனால் இந்த இரண்டு நாடுகளுமே யுத்தக் குற்றம் புரிந்துள்ளன என ஊடகவியலாளர் ஜிம் முயிர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருந்த அதேவேளை தான் இஸ்ரேலின் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய குழுவினர் பலஸ்தீன அகதிகள் தஞ்சம் புகுந்திருந்த ஷப்ரா மற்றும் ஷடில்லா ஆகிய இரண்டு முகாம்களிலும் இருந்த ஒட்டு மொத்த மக்களினதும் உயிர்களை வேட்டையாடினர். இந்த முகாம்களில் தஞ்சம் புகுந்த பலஸ்தீன மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று அப்போது அங்கிருந்த அமெரிக்கத் தூதுவர் பிலிப் ஹபிப் மற்றும் ஐரோப்பிய தூதுவர்கள் எழுத்து மூலம் வழங்கியிருந்த உத்தரவாதத்தையும் மீறியே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன.

றொபர்ட் பிஸ்க் தனது சகாக்களான அமெரிக்க நிருபர் லோரன் ஜென்கின்ஸ், நோர்வே நிபுணரான டீவியட் ஆகியோருடன் 1982 செப்டம்பர் 18ல் இந்த முகாம்களுக்கு விஜயம் செய்தார். அங்கு தாங்கள் பார்த்தவற்றை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்

“நாம் எல்லோருமே வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டது. எங்கள் சுவாசம் மரண சுவாசமாக மாறியது. மனித எச்சங்களில் இருந்து வெளியாகிய நெடி வயிற்றைப் புரட்டியது. கால்கள் அகல விரிக்கப்பட்ட நிலையில் கீழ் ஆடைகள் இடுப்பு வரை உயர்த்தப்பட்டு மரணம் அடைந்த நிலையில் பல பெண்கள் காணப்பட்டனர். கழுத்தில் தொண்டைக் குழி அறுக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் காணப்பட்டனர். சுவறோடு சாய்க்கப்பட்ட நிலையில் தலையின் பின்புறமாக சுடப்பட்டு மரணம் அடைந்த நிலையில் வரிசையாக இளைஞர்களும் ஏனைய வயது ஆண்களும் காணப்பட்டனர். சுமார் 24 மணிநேரத்துக்கு முன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு அழுகிய நிலையில் காணப்பட்டன. ஆமெரிக்க இராணுவம் பாவிக்கும் டின் வகை உணவுகளின் காலியான பகுதிகளும், இஸ்ரேல் இராணுவம் பாவிக்கும் மருந்துப் பொருள்களும் வெற்று விஸ்கி போத்தல்களும் அங்கு நியை அளவில் சிதறுண்டு காணப்பட்டன. ஷடில்லா முகாமின் சேற்றுப் பகுதி நுழைவாயில் ஊடாக நாம் சென்ற போது அந்த முகாம் கட்டிடம் டைனமைட் பாவிக்கப்பட்டு தரை மட்டமாக்கப் பட்டிருந்ததையும் எம்மால் உணர முடிந்தது.

அங்கேயும் வரிசையாக சடலங்கள் காணப்பட்டன. ஆண்கள் ஒருவரோடு ஒருவர் சோத்து கை மற்றும் கால்கள் பிணைத்து கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர். எல்லோருமே மிகக் கிட்டிய தூரத்தில் இருந்து சுடப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டன. துப்பாக்கி ரவைகள் காதுகள் வழியாகச் சென்று மூளையை பதம் பார்த்திருந்தன. சிலரது தொண்டைகள் வழியாகவும் துப்பாக்கி ரவைகள் சீறிப்பாய்ந்திருந்தன. சிலரது காற்சட்டைகள் கழற்றப்பட்டு ஆண் உறுப்புக்களும் பதம் பார்க்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் எல்லோரினதும் கண்கள் மட்டும் அகலத் தி;றந்திருந்தன. 12 முதல் 13 வயதான சிறுவர்களின் சடலங்களும் அங்கு காணப்பட்டன. பிரதான வீதிக்கு மறுபுறத்தில் பெண்களினதும் சிறுமிகளினதும் சடலங்கள் பெருமளவில் காணப்படடன. அதில் நடுத்தர வயது பெண்களின் சடலங்கள் குவியலாகக் காணப்பட்டன. அந்த பெண் சடலங்களுள் பலவற்றின் ஆடைகள் அலங்கோலமாகக் காணப்பட்டன. சிறுமிகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் பலவும் அவற்றின் நடுவே காணப்பட்டன. மூன்று வயது மட்டுமே மதிக்கத்தக்க சிறுமிகளும் இதில் காணப்பட்டனர். ஆனால் அவர்களின் தலைகள் சிதைவடைந்து மூளைகள் வெளியே சிதறிக் காணப்பட்டன. சில பெண்கள் தமது குழந்தைகளை அரவணைத்த நிலையிலும் இன்னும் சிலர் குழந்தைகளுக்கு பால் ஊட்டிக் கொண்டிருந்த நிலையிலும் கூட தாயும் சேயும் இறந்து இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர். சில பெணகளின வயிறுகள் கிழிக்கப்பட்டு மேலும் கீழுமாக தாருமாறாக வெட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் கர்ப்பிணகளாக இருந்திருக்க வேண்டும்.

shabra 4நாம் இந்தப் பகுதிக்கு செல்ல சற்று முன்னர் சில பெண்களின் கற்பு சூறையாடப்பட்ட கொல்லப்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் சடலங்கள் இருந்ததையும் காண முடிந்தது.

1982 செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் வேளையில் தான் இந்தப் படுகொலைகள் தொடங்கின. ஏரியல் ஷரோனும் அவரது இஸ்ரேலிய படைகளும் அருகில் இருந்த ஒரு அரங்கில் இருந்து இவற்றை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். கொல்லப்பட்ட பலர் அவர்கள் கொல்லப்ட்ட சூடு அடங்குவதற்குள் இரகசியமாகவும் அவசரமாகவும் பாரிய புதை குழிகளில் புதைக்கப்பட்டனர். ஷடில்லா முகாமுக்கும் விமான நிலையத்துக்கும் இடையில் உள்ள கோல்ப் மைதானத்தில் பாரிய குழிகளில் இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்தக் குற்றங்களை மூடி மறைக்கும் வகையில் மிகவும் திட்டமிட்டு கொல்லப்பட்டவர்கள் பலர் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டு புல்டோஸர்களின் உதவியோடு அந்தக் குழிகள் சமப்படுத்தப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட ஏனைய சடலங்கள் தான் பின்னர் பெரும் கவலைக்கும் கண்ணீருக்கும் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டன. இந்தச் சம்பவங்கள் வெளியவரத் தொடங்கியதும் உலக நாடுகள் பல அதிர்ச்சி அடைந்தன. ஹிட்லரினால கொடுமை இழைக்கப்பட்டதாகக் கூறிக் கொள்ளும் யூதர்கள் எப்படி இதயமே இன்றி முஸ்லிம்களை இவ்வாறு கொன்று குவிக்க முடியும் என அந்த நாடுகள் அதிர்ச்சி தெரிவித்தன.

மெனாச்சம் பெகினின் இந்தக் குற்றங்களால் ஆச்சரியம் அடைந்த இஸ்ரோலியர்களில் ஒரு பிரிவினர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அவர் ராஜினாமாச் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். ஹீப்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஹெப்ராய்கா கலைக் களஞ்சியத்தின் ஆசிரியருமான யஷயாஹ{ லீய்பொட்விஸ், “இந்தக் கொலைகளை நம்தான் புரிந்தோம். எமது படைகளின் கைக்கூலி ஏவல் படையினர் தான் இதற்கு காரணம். ஹிட்லரின் கூலிப்படைகளாக குரோஷியர்களும், உக்ரேனியர்களும், சுலோவாக்கியர்களும் செயற்பட்டதைப் போல் தான் இவர்களும் செயல்பட்டுள்ளனர். இதேபோல் தான் லெபனானில் பலஸ்தீனர்களைக் கொலை செய்ய நாமும் இவர்களை ஏவிவிட்டுள்ளோம் என்று கவலை தெரிவித்தார்.

இஸ்ரேலிய ஊடுறுவலின் விளைவாக 17825 அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மனித குலத்துக்கு எதிராக இந்தளவு மோசமான கொடுமைகளைப் புரிந்தும் கூட ஐக்கிய நாடுகள் சபையாலோ அல்லது வேறு எந்த பொறுப்பு வாய்ந்த அமைப்பாலோ இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்தக் கொடுமைகளின் பிரதான சூத்திரதாரியான மத்திய கிழக்கு பயங்கரவாதத்தின் ஞானத்தந்தை இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் மெனாச்சம் பெகினுக்கு பிற்காலத்தில் சமாதானத்துக்கான நோபள் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது இஸ்ரேல் கொண்டிருந்த இரும்புப் பிடியின் பிரதிபலிப்பாகவும் அதற்கான அடையாளச் சின்னமாகவும் தான் இந்த சமாதான நோபள் பரிசை சோக்க வேண்டியுள்ளது. இன்யை சர்வதேச அரங்கின் வெற்கக் கேடான நிலை இதுதான்.

இஸ்ரேலில் ஆட்சிகளும் பிரதம மந்திரிகளும் மாறலாம். ஆனால் பலஸ்தீனர்கள் தொடர்பான அவர்களின் கொள்கைகளிலும் போக்கிலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இன்று வரை பலஸ்தீனர்களுக்கு எதிராக அவர்கள் அடக்கு முறையைத் தான் கையாண்டு வருகின்றனர். பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணிலேயே உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டவர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தினசரி அவர்கள் கொல்லப்படுகின்றார்கள். சிறைகளில் அடைக்கப்படுகின்றார்கள், சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். எஞ்சியுள்ள அவர்களின் காணிகள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிடப்பட்டு அன்றாடம் பறிக்கப்பபடுகின்றன. அவ்வாறு பறிக்கப்படும் காணிகளில் உள்ள அவர்களின் பரம்பரை வீடுகளும் மற்றும் வளங்களும் நிர்மூலமாக்கப்பட்டு அங்கு திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த அநாகரிகமான பயங்கர கொடூரங்களை அரங்கேற்றி பல தசாப்தங்கள் கழிந்துள்ள நிலையிலும் கூட இஸ்ரேல் இன்னமும் அதே பயங்கரவாத முகச் சாயலுடன் தான் காணப்படுகின்றது. அதன் போக்கில் இன்னமும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் ஏற்படவில்லை. அவர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவும் பிரிட்னும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் எந்தளவு பக்கபலமாக இருந்தார்களோ அதில் இம்மி அளவு கூட இன்னமும் குறையவில்லை. போதாக் குறைக்கு இன்றைய காலகட்டத்தில் மத்திய கிழக்கில் ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டுள்ள கொடுங்கோல் மன்னர்களினதும் ஷேக்குகளினதும் ஆதரவும் கூட இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளது. மத்திய கிழக்கின் இன்றைய வெற்கம் கெட்ட ஆட்சியாளர்கள் மானம், மரியாதை சுய கௌரவம், எல்லாவற்றையும் இழந்து தமது ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக யுத்த வெறி கொண்ட இந்த ஆதிக்க சக்திகளின் பகடைக் காய்களாக மாறிவிட்டனர். இந்த மானம் கெட்ட நிலையின் உச்ச கட்டம் தான் அவர்கள் இன்று ஆளுக்கு ஆள் மாறி மாறி இஸ்ரேலைத் தழுவிக் கொள்ள முந்தியடிப்பது.

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தேவைப்படுவது முஸ்லிம்களின் வாக்குகள் மட்டும் தான். முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அந்த சமூகத்தின் உணர்வுகளைப் பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் கிடையாது. முஸ்லிம்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறையின்றி இலங்கை ஆட்சியாளர்களும் இஸ்ரேலுடன் நயவஞ்சகமாக உறவாடி வருகின்றனர். தமிழ் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்துப் போராட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன இஸ்ரேலை இங்கு அழைத்து வந்தார். ஆனால் இலங்கை விடயத்தில் இஸ்ரேல் அதன் பாரம்பரியமான துரோகத்தைத் தான் வெளிப்படுத்தியது. ஜே.ஆரின் அரசாங்கத்தோடு உறவாடிக் கொண்டு அரச படைகளுக்கு பயிற்சிகளை வழங்கிக் கொண்டு அதே முகாமின் இன்னொரு புறத்தில் விடுதலைப் புலிகளுக்கும் பயிற்சிகளை வழங்கியது. மிகவும் சூட்சுமமாக ஒரே முகாமுக்குள் இரு பிரிவினருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாமல் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மீண்டும் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புவதாக தன்னை தானே அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்ட யுத்தத்தில் ஈடுபட இஸ்ரேலை அழைத்து வந்தார். இஸ்ரேலியர்களை இலங்கைக்குள் விருந்தாளிகளாக வைத்துக் கொள்ளும் நிலை இன்றைய மைத்திரி – ரணில் அரசிலும் நீடிக்கின்றது. உலகில் மனித குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்துள்ள குற்றங்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் உலகளாவிய நிலைப்பாடுகள் என்பன பற்றி நன்கு அறிந்திருந்தும் தம்மை நம்பி அதிகளவு வாக்குகள அள்ளி வழங்கிய சமூகத்தைப் புறக்கணித்து இஸ்ரேலுடனான கபடத்தனமான உறவுகள் நீடித்து வருகின்றன.

சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்ள இஸ்ரேலால் நிர்மாணிக்கப்பட்டு பேணப்பட்டு வரும் அடையாளச் சின்னமான ஜெர்மனியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவர்களின் ஹொலோகோஸ்ட் நூதனசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யும் அளவுக்கு இந்த உறவுகளின் ஆழம் அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் நிம்மதிக்கு ஆப்பு வைத்து முஸ்லிம் சமூகத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற அவர்களின் உலகளாவிய நிகழ்ச்சி நிiலின் அடிப்படையில் தான் இஸ்ரேலியர்கள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.

இஸ்ரேலியர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் இனவாதம் என்பனவற்றை பிரதிபலிக்கும் வகையில் தான் இன்றைய பெரும்பான்மை இனவாதிகளின் அண்மைக்கால கருத்துக்களும் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. ஒருவேளை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன்றைய இனவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்ரேலின் மறைமுகமான ஆதரவும் இருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது.

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான அதன் குற்றங்கள், அதன் ஆதிக்க வெறியின் கீழ் பலஸ்தீன மக்கள் படுகின்ற அவஸ்த்தைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைமைகளின் உண்மையை மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற தேவை இலங்கையின் பிரதான பிரிவு ஊடகங்களுக்கு கூட கிடையாது. இதனால் மத்திய கிழக்கு அரசியலின் உண்மை நிலை இலங்கை மக்களுக்கு காட்டப்படாமல் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்றது.

ஊழலில் சிக்கித் தவிக்கும் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளும் கூட இதே நிலையில் தான் உள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் இன்றைய நிலையை விட அந்த சமூகத்தின் மீதான அக்கறையை விட தாங்கள் அனுபவிக்கும் சுகபோகம் தான் முக்கியம் என்ற நிலையிலேயே இலங்கையின் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர். சமூக நல்லிணக்கத்துக்கான அறிகுறிகள் நாட்டில் தற்போது தாராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் இஸ்ரேலுக்கு இந்த நாட்டில் இடம் அளித்துள்ளதன் மூலமும், அவர்களின் நிகழ்ச்சி நிரலை சுதந்திரமாக அமுல் செய்ய இங்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதன் மூலமும் அவை அனைத்தும் கேள்விக் குறியாகியுள்ளன. (முற்றும்)