சுதந்திர தினம் : இந்த நாட்டின் செயற்திறன்களை மதிப்பீடு செய்யும் நாளாகவும் அமைய வேண்டும்

இலங்கையின் 71வது சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளின் பிடியில் இருந்து நாடு விடுபட்ட தினம் உண்மையிலேயே மகிழ்ச்சியுடன் நினைவு கூறப்பட வேண்டிய தினம் தான். ஏவ்வாறாயினும் தற்போது நிலவும் சூழலில் இந்த நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான அதன் செயற் திறன்களையும் ஏனைய விடயங்களையும் கூட மதிப்பீடு செய்து ஆராய வேண்டிய ஒரு தினமாகவே இது அமைந்துள்ளது. சுதந்திரம் கிடைக்கும் போது நாம் எங்கு இருந்தோம். இந்த நாடு இருந்த நிலை என்ன? இன்று நாம் எங்கு உள்ளோம் இந்த நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது இன்றைய குழப்பங்களுக்கு காரணம் என்ன? அதற்கு என்ன செய்யலாம்?. என்பனவற்றை சீர்தூக்கிப் பார்க்க இது அவசியமானதாகும்.

எமது சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலப்பகுதியில் வளர்ந்து வரும் ஆசிய ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கையைப் பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு இந்த தேசம் இருந்தது. இலவசக் கல்வி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள், மூன்றாம் உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிடுகையில் ஆகக் கூடுதலான எழுத்தறிவு வீதம் என்பன இந்த நாட்டின் சிறப்புக்களாக இருந்தன. அதுபோலவே சுகாதார சேவையும். அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து பலர் சிகிச்சைக்காக இலங்கை வந்தனர். தேவையான அளவு வெளிநாட்டு ஒதுக்கு எம்மிடம் இருந்தது. இன நல்லுறவு அமைதி என்பனவும் தாராளமாவே இருந்தன.

எந்த விதமான அச்சமும் தயக்கமும் இன்றி வடக்கில் இருந்து தெற்கிற்கும் கிழக்கில் இருந்து மேற்கிற்கும் நடந்து சென்று வரக் கூடிய காலம் அது.

இலங்கை பல இனங்களைக் கொண்ட பல சமயங்களைக் கொண்ட பல மொழிகளைப் பேசுகின்ற பல கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒரு நாடு. இந்த உன்னதமான கலவை பௌத்தம், இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் என எல்லா சமயங்களும் இங்கு காணப்பட்டதால் ஏற்பட்ட ஒரு செழுமையாகும்.

ஓவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தோடு கலந்து நல்லுறவோடு வாழ்ந்தனர். ஓவ்வொருவரும் அவரவருக்குரிய சமயங்களையும் கலாசாரத்தையும் வாழ்வியலையும் எவ்வித இடையூறும் இன்றி பின்பற்றினர். அவர்களுடைய எதிர்காலம் தவிர்க்க முடியாத விதத்தில் ஒருவரோடு ஒருவர் பிணைந்து பொதுவானதாகவும் காணப்பட்டது.

இந்த பல்லினத் தன்மை நாட்டின் இயற்கை எழிலோடு இணைந்து இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இந்த நாட்டுக்கு இயல்பாகவே மெருகூட்டுவதாக அமைந்தது. இதனால் கிழக்கின் சுவிட்ஸர்லாந்தாக மலருவதற்கான எல்லா வசதிகளும் வளங்களும் இலங்கைக்கு உள்ளதாகவும் சிலர் வர்ணித்தனர்.

உலகின் கவனத்தை இன்று ஈர்த்து வருகின்ற துபாய் அன்று நாம் கேள்வி கூட படாத ஒரு தேசம். ‘இலங்கை ஏனைய நாடுகள் உதாரணமாகக் கொள்ள வேண்டிய ஒரு நாடாக உள்ளது’ என்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யு கூறினார்.

சமய ரீதியான, இன ரீதியான குலங்கள் ரீதியான, மொழிகள் ரீதியான, கலாசார ரீதியான பல்லினத் தன்மை என்பது இந்த நாட்டுக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த ஆசீர்வாதமாகும். சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என எல்லா பிரிவினரும் நல்லிணக்கத்தோடும் சமாதானத்தோடுமே வாழ விரும்பினர். எதிர்காலத்தை நோக்கிய அவர்களின் வாழ்வு முறையும் அவ்வாறே அமைந்தது. ஆனால் சில தூர நோக்கற்ற ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான அரசியல் கட்சிகளினதும்; குறுகிய இனவாத பார்வை கொண்ட அரசியல்வாதிகளால் அது வெறும் கனவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் இன்று வரை இவ்விரு கட்சிகளும் தான் நாட்டை மாறிமாறி ஆட்சி செய்துள்ளன. தங்களது அரசியல் இருப்புக்காக அவர்கள் சமூகங்களைக் கூறு போட்டனர். இன்றைய மோசமான குழப்ப நிலைகளையும் அவர்களே உருவாக்கினர்.

இந்த ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி சிந்தித்து, சகல சமூகங்களையும் ஒரே தேசமாக நோக்கி வழிநடத்தக் கூடிய, சகல மக்களதும் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கக் கூடிய தூரநோக்கு மிக்க தலைமைத்துவம் ஒன்று இந்த நாட்டுக்கு கிடைக்கவில்லை.

சுதந்திரத்தக்குப் பிந்திய இலங்கையில் பெரும்பாலும் எல்லா பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களும் பெரும்பான்மை சமூகத்தின் நலன்களில் அக்கறை கொண்டே சிந்தித்தனர். சிறுபான்மையினரை பலிகொடுத்து பெரும்பான்மை நலன்களைப் பேணவே அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக அவர்கள் தமது சொந்த நலன்ளை முன்னிலைப் படுத்தினர். அவர்கள் ஒவ்வொருவரினதும் உடனடி இலக்கு அடுத்து வரும் பொதுத் தேர்தலாகத் தான் இருந்தது. அடுத்த தலைமுறையின் நலன்களைப் பற்றியோ அல்லது நாட்டின் பொதுவான நலன்களைப் பற்றியோ அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்காக அவர்கள் பிரிவினையின் விதைகளை சமூகத்துக்குள் தூவினர். பொரும்பான்மை சமூகத்துக்குள் இருந்து தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தலைவரை இந்த நாடு உருவாக்கி இருந்தால் உண்மையிலேயே இன்று மூன்றாம் உலக நாடுகள் இலங்கையை பொறாமையுடன் நோக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

தமிழர்கள் மற்ற சமூகங்களோடு இணைந்து சமத்துவமான உரிமைகளுடன் வாழ விரும்பினர். ஆனால் இனவாத அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை தனிமை படுத்தினர். திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியரசு அரசியல் யாப்பு பௌத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் முன்னுரிமை அளித்தது. இதனால் தமிழ் கட்சிகள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒன்றிணைந்தனர். பின்னர் ஜே.ஆர் ஜயவர்தனவின் நாசம் விளைவிக்கும் அரசியல் யாப்பு இந்த நாட்டை சக்திமிக்க சர்வாதிகாரத்துக்குள் தள்ளியது. அது ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் சர்வாதிகாரம் ஆனது. ஜேஆரின் இந்த தற்பெருமை வியாதியின் தாக்கத்தை இன்றும் இந்த நாடு அனுபவிக்கின்றது.

தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் 83 வன்முறைகள் வரை நீடித்தது. இதன் விளைவாக தனிநாடு கோரி தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது. இதனால் இந்த நாடு கொலை களமாக மாறியது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட அதேவேளை முழு நாடும் அதனால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பாதக நிலையை தமக்கு சாதமாக்கிக் கொண்டு அரசியல் வாதிகள் ஆயுதக் கொள்வனவு உற்பட ஏனைய தரகுகள் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்க தொடங்கினர்.

2009ல் இந்தக் கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. முப்பது வருடங்கள் நீடித்த அந்தக் கொடிய யுத்தத்தின் பாதிப்புக்கள் மற்றும் அழிவுகளில் இருந்து அரசியல்வாதிகள் பாடம் படிப்பர் என்று மக்கள் எதிர்ப்பார்த்தனர். சமூகங்களை ஒன்றிணைத்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இந்த நாட்டை மீண்டும் ஒரு முன்னேற்றப் பாதையில் இடடுச் செல்ல அது ஒரு அரிய வாயப்பாக இருந்தது.

முப்பது வருட அழிவுகளாலும் மரணங்களாலும் ஏற்பட்ட வலிகள் காரணமாக இது இலகுவில் சாத்தியமாகும் ஒரு விடயமாகவும் இருக்கவில்லை. தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் இருந்து சில சாதகமான நிலைமைகளை எதிர்ப்பார்த்தனர். அது உண்மையில் நல்லிணக்கத்துக்கு வழியமைத்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இனவாதமும் குற்றமும், மோசடியும் சட்டஒழுங்கின்மையும் தான் மீண்டும் நாட்டில் தலைதூக்கியது. தமிழர்களை இவ்வாறு மோசமான நிலைக்கு கொண்டு வந்த இனவாத அரசியல்வாதிகள் தமது அடுத்த இலக்கை முஸ்லிம்களை நோக்கி திருப்பினர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட இனவாத சக்திகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. முஸ்லிம்களை அச்சுறுத்தி நசுக்கும் பணிகள் தொடர்ந்தன.

எல்டிடிஈ வெற்றியால் போதை ஏறிய அரசாங்கத்தின் அதிகார பீடம் வித்தியாசமானதோர் பயங்கரவாதத்தை முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டது. இனவாத காடையர்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. வீடுகளும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. எந்தவிதமான நியாயமான காரணங்களும் இன்றி இவை மேற்கொள்ளப்பட்டன. முதலில் தமிழர்களை ஒரு வழி பண்ணுவோம் அதற்குப் பின் முஸ்லிம்களைப் பார்த்துக் கொள்வோம் என்று முன்னர் அடிக்கடி கூறப்பட்டதற்கு இசைவாக இவை இடம்பெற்றன.

இந்த மடத்தனமான காரியங்களின் நடுவே முஸ்லிம்களுக்கு எதிராக ‘கிறீஸ் யகாக்களும்’ கட்டவிழ்த்து விடப்பட்டன. புனித றமழான் மாதத்தில் இரவு நேரங்களில் ஆண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்லும் வேளையில் வீடுகளில் உள்ள பெண்களை இழக்கு வைத்து இவை கட்டவிழத்து விடப்பட்டன. அளுத்கமை, பேருவளை, தர்காநகர் ஆகிய இடங்களில் முஸ்லிம்களின் வாழ்விடக் கட்டிடங்களும் வர்த்தகக் கட்டிடங்களும் தீக்கு இறையாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. குற்றங்கள், ஊழல், வெள்ளைவேன் கடத்தல், சட்டம் ஒழுங்கின்மை என்பன காரணமாக ஒட்டு மொத்த அச்சமான சூழ்நிலை நிலவியது.

இவ்வாறான ஒரு மந்தகார சூழலில் தான் மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்து வெளியேறினார். ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்த அவர் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தப் போவதாக நாட்டு மக்களுக்கு உறுதி அளித்து ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்தார். இதுவரை இழைக்கப்பட்ட குற்றங்களோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் அவர் நாட்டு மக்களுக்கு உறதி அளித்தார்.

ராஜபக்ஷவின் பிடியில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பதற்காக மக்கள் மைத்திரிபால சிறிசேனவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இவர்கள் இருவரும் இன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து அப்பட்டமாக விலகிச் சென்றுள்ளனர். குற்றம் இழைத்த எவரும் இதுவரை சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. மக்களுக்கு என்ன செய்வது யாரிடம் முறையிடுவது என்பதும் தெரியவில்லை.

இந்த நிலைமைகளின் நடுவே பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் உச்ச கட்டத்துக்கு வந்தன. இது மக்களின் நம்பிக்கையில் பலத்த இடியாக விழுந்தது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி அரசியல்சாசன குழப்பம் என அடுத்தடுத்து மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் நிகழ்வுகள் அரங்கேறின.

ஒரு காலத்தில் கல்விமான்களாலும் கலாசார பாரம்பரியம் மிக்க புத்தி ஜீவிகளாலும் மெருகூட்டப்பட்டு அறிவின் கேந்திர நிலையமாகத் திகழ்ந்த பாராளுமன்றம் இன்று காடையர்களின் கூடாரமாகி வெற்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள் அங்கே பதிவாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்கள் முடிவடைந்துள்ள இன்று, இலங்கை உலக அரங்கில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது. இங்கு அரசியல் குழப்ப நிலை காணப்படுகின்றது. பாரதூரமான பொருளாதாரப் பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. ஊழலும் மோசடியும் மலிந்து காணப்படுகின்றன. சமூகங்கள் பிளவுபட்டு காணப்படுகின்றன. இந்த விரிசல் மேலும் அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது. சிங்கள இனவாத சக்திகளை மகிழ்விப்பதற்காக முஸ்லிம்களின் வாழ்வும் சொத்துக்களும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன. இதனால் பொருளாதாரம் தேசிய சகவாழ்வு சமூக ஒழுங்கு என எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்திலும் கூட ஆகக் கூடிய ஒதுக்கீடு 390.3 பில்லியன் ரூபா பாதுகாப்புத் துறைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார மேம்படுத்தல் முயற்சிகளுக்கான ஒதக்கீடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுதந்திரத்தின் போது எமது பாதுகாப்பு செலவு என்பது முக்கியம் அற்ற ஒன்றாகவே; காணப்பட்டது.

2007ல் நோபள் பரிசு வென்ற இந்திய அறிஞர் அமிர்தயா சென் நாட்டின் பனமுகத்தன்மை என்பது எவ்வளவு சிறப்பானதும் செழுமையானதும் என்பதை இலங்கை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டது என்று மிகச் சரியாவே குறிப்பிட்டிருந்தார். பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து சிங்களவர்களுக்கு பிரத்தியேக அந்தஸ்த்தை வழங்கி சமூகத்தின் ஏனைய பிரிவினர்களை தேசிய அடையாளம் இன்றி ஒரு வகையான தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சிறிசேன தனது சுதந்திர தினச் செய்தியில் தேசிய மறுமலர்ச்சியின் பொதுவான எதிரிகள் வறுமையும் ஊழலும் என்று குறிப்பிட்டார். அவர் நான்கு வருடங்களுக்கு மேலாக பதவியில் இருக்கின்றார். வறுமையையும் ஊழலையும் ஒழிக்க அவர் என்ன செய்தார் என்பதுதான் இப்போதைய கேள்வி. உண்மையில் எதுவுமே செய்யவில்லை. ஊழல் புரிந்தவர்களை சட்டத்தின் முன்னாள் கொண்டு வர எல்லா வாயப்பும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை.

கெடம்பே ரஜபோவனாராமயவின் பிரதம குரு கெப்படியாகொட ஸ்ரீ விமல தேரர் மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவுடன் பேசும் போது நாட்டில் குழப்பமான ஒரு சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலைமைக்கு ஜனாதிபதி மைத்திரியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். அவர் தனது பொறுப்புக்களில் இருந்து விலகிச் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். தேர்தல்கள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றன. குற்றப் பின்னணியும் ஊழலும் மிக்க இதே பேர்வழிகளைத் தான் நாம் மீண்டும் பதவியில் அமர்த்தப் போகின்றோமா என்பது தான் பிரதான கேள்வியாக உள்ளது.

பொதுவான அரசியல் விழுமியங்களை உருவாக்குவது தான் இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இந்தப் பொதுவான விழுமியங்கள் அமைய வேண்டும் என்பதை எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல பத்தி எழுத்தாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இது புதிய அரசியல் யாப்பு ஒன்றின் மூலம் துரிதப்படுத்த வேண்டிய செயற்பாடாகும். எந்தப் பாரபட்சமும் இன்றி அரசியல் ரீதியாக சமத்துவமான பிரஜைகளை அது உருவாக்கும். அந்த மக்கள் ஐக்கியப்பட்ட ஒரு தேசத்துக்குள் அரசியல்சாசன முத்திரை எப்படி இருப்பினும் சரி தமது எதிர்காலத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை இருக்க வேண்டும்.

எல்லா பிரதேச மக்கள் மத்தியிலும் ஒருவகை அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கலாசார நாகரிகம் மிக்க ஒரு சூழலில் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர். அடுத்த தலைமுறையின் எதிர்காலம் என்னவென்பதே இவர்களின் கேள்வி. சிலர் புலம்பெயர வேண்டும் என விரும்புகின்றனர். எவ்வளவு பேருக்குதான் அவ்வாறு புலம் பெயர முடியும்?

சுதந்திர தினத்தில் செயற்பாடுகளின் மதிப்பீடுகளும் செய்யப்பட வேண்டும் என்று கூறுவதன் காரணம் இதுதான். அப்போது தான் நாங்கள் எங்கே இருக்கின்றோம் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும். (முற்றும்)

)