saudi armsபழங்குடி ஆட்சியாளர்களின் ஒழுக்கவியல் வங்குரோத்து நிலையை புலப்படுத்துகின்றது

லத்தீப் பாரூக்

சவூதி அரேபியாவின் முடிக்குரிய வாரிசாக அண்மையில் அறிவிக்கப்பட்ட இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பெண்கள் அரைகுறை பிகினி ஆடைகளுடன் சூரியக் குளியல் எடுக்க வழிவகுக்கும் வகையில் ஆடம்பர ஹோட்டல் தொகுதி ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கான டொலர் செலவில் இந்தத் திட்டம் அறிமுகமாகவுள்ளது. செங்கடலை அண்டிய 125 மைல் கரையோர பரப்பில் அமையவுள்ள இந்த ஹோட்டல் இதுவரை யாரும் கைவைக்காத இயற்கை கடல்வளம் மிக்க தீவுப் பகுதியாகும்.

A.R.M. Munsoorதமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்தவர் இன்று எம்மோடு இல்லை.

லத்தீப் பாரூக்

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்த கண்ணியவான் அரசியல்வாதியான அப்துல் றசாக் மன்சூரை நாம் இன்று இழந்துவிட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்கும் இந்த நாட்டுக்கும் அர்ப்பணத்தோடு பணியாற்றிய அவர் 25ம் திகதி ஜுலை 2017ல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையைச் சேர்ந்த அவரின் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான கல்முனையில் இடம்பெற்றது.

221- லதீப் பாரூக்

பலஸ்தீனர்களை கொன்றும் இன்னும் பலரை அயல்நாடுகளின் அகதி முகாம்களுக்கு அடித்து விரட்டியும் முஸ்லிம் மத்திய கிழக்கின் மையத்தில் மேற்கினால் நாட்டப்பட்ட இனவாத இஸ்ரேலுக்கு இந்தியாவின் இந்துத்துவா பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

1930, 40 களில் பிரித்தானிய காலனித்துவவாதிகளும் ஸியோனிஸ யூதர்களும் நாடற்ற யூதர்களுக்கென நாடொன்றை உருவாக்க முயற்சித்த வேளையில், அதனை எதிர்த்த இந்தியாவின் சிற்பி மகாத்மா காந்தி, எப்படி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கும் பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கும் சொந்தமோ அதேபோல பலஸ்தீனும் பலஸ்தீனர்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினார்.

Maithripala2உள்நாட்டுக்கு உண்மைகளை மட்டுமே ஊடகங்கள் சொல்லுகின்றன

- லத்தீப் பாரூக்

அரசாங்கத்தை விமர்சிப்பதாக ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஊடகவிலாளர்கள் அனுபவித்த துன்பங்களை மறந்து விட்டனர் என்று அண்மையில் குறிப்பிட்டுள்ளார். ஊடகத்துக்கு சுதந்திரம் வழங்கியது தனது அரசு தான் என்றும் தனது ஆட்சியில் தான் ஊடகங்கள் விடுவிக்கப்பட்டு தற்போதைய சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

saleem marsoofசுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி இருந்தேன். ஆனால் எதிர்ப்பார்த்தபடியே சமூகம் அதில் வித்தியாசமான கருத்துக்களையே கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் கொழும்பு டெலிகிராப்பில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல என்ற ரீதியிலும் பருவம் அடைவதற்கு முன்பே திருமணத்தை அனுமதிக்கலாம்