BJP VHP leadersஇந்தியாவின் குஜராத் மாநிலம் ஒரு காலத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நல்லிணக்கத்தோடு வாழ்ந்த ஒரு பிரதேசம். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒரு இடம். குஜராத்தில் ஆரம்ப காலத்திலேயே வந்து குடியேறிய முதலாவது வர்த்தக சமூகம் முஸ்லிம்கள் தான். தமக்கென ஒரு குஜராத்தி தனித்துவத்தை ஏற்படுத்தி செழிப்போடு வாழ்ந்த சமூகம். துரதிஷ்டவசமாக அவர்களின் இந்த வெற்றி தான் அவர்களை காலத்துக்கு காலம் இந்து இனவாத சக்திகள் குறிவைக்கவும் காரணமாயிற்று.

சிலரால் இனப் படுகொலை என வாணிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் 2002 பெப்ரவரி 27இல் இடம்பெற்றன. இந்து தீவிரவாத அமைப்பான ஏர்P ஐ சேர்ந்த ஒரு குழுவினர் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கோத்ரா நகருக்கு அருகில் வைத்து அந்த ரயிலில் தீ பற்றிக் கொண்டதால் அவர்களுள் 59 பேர் மரணம் அடைந்தனர்.

இந்த அசம்பாவித சம்பத்தோடு முஸ்லிம்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது பிற்காலத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டது. ஆனால் இந்தச் சம்பவத்துக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இரவோடு இரவாக அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டன. இன நல்லுறவுக்காக முழு நாளும் பாடுபட்டு வரும் பேராசிரியர் ராம் புன்யானி இது பற்றிக் குறிப்பிடுகையில்

எந்தவிதமான உதவிகளும் இன்றி இருந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுமாறு தலித் இனத்தவர்களும் ஆதி வாசிகளும் ஒன்று திரட்டப்பட்டனர். முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக பூதாகரமாகச் சித்தரிக்கும் பிரசாரங்களோடு இந்த தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டன. இதற்கு பின்னணியில் அரச இயந்திரமும் இனவாத சக்திகளும் பக்கபலமாய் நின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு இதற்கு முழுமையாக துணை நின்றது. இந்தப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தனது அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அமைதியாக இருக்குமாறு குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சா நரேந்திர மோடி உத்தரவிட்டார். இந்த வன்முறைகளுள் பெணகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறிப்பிடத்தக்க பயங்கரம் நிறைந்தவை. குறிப்பாக அவர்களின் இனவிருத்தி உறுப்புக்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அஹமதாபாத்தின் மத்திய பகுதியில்  விஎச்பி தலைவர்கள் இந்தத் தாக்குதல்களை முடுக்கி விட்டனர். கத்திகள், கோடறிகள், வாள்கள், இரும்பு மற்றும் மரப் பொல்லுகள், அமிலங்கள், வாயு சிலிண்டர்கள் என எல்லாவிதமான நாசகார பொருள்களும் பயன்படுத்தப்பட்டன. நகரங்களிலும் கிராமங்களிலும் முஸ்லிம்களை கொலை செய்வதற்காக எல்லா விதமான கருவிகளும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டன. சில இடங்களில் அவர்கள் முஸ்லிம்களை ஒரே இடத்தில் திரட்டி மின்சாரத்தை பாய்ச்சியதாகவும் கொடூரமான தகவல்கள் உள்ளன. gujarat2பல நகர்ப்புறங்களில் வீடுகளையும் கடைகளையும் பள்ளிகளையும் தர்காக்களையும் தகர்க்க வெடிமருந்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மனிதர்களால் சிதைக்க முடியாத கட்டிட வடிவங்களை சிதைக்க தேவையான அளவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

நடந்தது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான சண்டை அல்ல. முழு இரச இயந்திரத்தின் உதவியோடு பெரும்பான்மை சமூகத்தால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு தாக்குதல்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் உம்ஷே சந்திரா பெனர்ஜி தலைமையிலான விசாரணை குழு முஸ்லிம்கள் குறிப்பிட்ட ரயில் வண்டி மீது பெற்றோல் குண்டு வீசியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட ஏற்கனவே தூபமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அஹமதாப் மற்றும் ஏனைய முக்கிய இடங்களில் இருந்து முஸ்லிம்களை விரட்டி அடிப்பதற்கான ஒரு நாசகாரத் திட்டத்தை பிஜேபி மாநில அரசு கொண்டிருந்தது என்பதற்கான தெளிவான சான்றுகளை காணக்கூடியதாக இருந்தது என்று சில இந்துக்களே தனிப்பட்ட முறையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

பல இடங்களில் பல சம்பவங்களில் காடையர்கள் கும்பல்களுக்கு தொடர்புகள் இருந்ததை பொலிஸாரும் தெளிவாகத் தெறிந்து கொண்டனர். விசாரணைகளை நடத்திய ஒவ்வொரு நீதிபதிகளும் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து கேள்விகளை எழுப்பி இருந்தனர். வன்முறைகளைத் தடுக்க படுகொலைகளைத் தடுக்க ஏன் பெலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதுதான் அவர்களின் பிரதான கேள்வியாக இருந்தது. பதிவு செய்யப்பட்டிருந்த 45000 முறைப்பாடுகளில் 75 மட்டுமே மேலதிகமாக விசாரிக்கப்பட்டன. ஏனையவை எல்லாமே சான்றுகள் இல்லை எனக்கூறி குப்பை தொட்டிகளில் போடப்பட்டன.

Gujarat Riots1பாரிய அளவிலான கற்பழிப்பக்களும் கொலைகளும் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. பில்கிஸ் யாகூப் என்பவருடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுள் நால்வர் சிறுவர்கள். ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் மற்றும் அவரின் குடும்பத்தவர்கள் மார்ச் மாதம் முதலாம் திகதி அவர்களது கிரமமான றன்திக்பூரில் வைத்து தாக்கப்பட்டனர். அவர்கள் கிராமம் கிரமமாக பாதுகாப்பு தேடி ஓடினர். அவ்வாறு ஓடும் வழியில் அவரது சகோதரி ஒரு பெண் குழந்தையை பிரசவித்தார். மலைப்பாங்கான பிரதேசத்தில் காடுகளையும் மேடுகளையும் கடந்து உயிரைக் காப்பாற்ற மூன்று நாற்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த போது சப்பாவாத் கிராமத்தில் இவர்கள் மடக்கப்பட்டு அதில் இருந்த எட்டு பெண்கள் றன்திக்பூர் தலைவர்களால் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டனர். அதன் பிறகு அந்தக் குடும்பத்தில் இருந்த 14 பேரும் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டு கூட்டமாக எரிக்கப்பட்டனர். குழந்தைகள் மற்றும் ஏற்கனவே காயம் அடைந்திருந்த பெண்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. மூன்று நபர்களால் தொடர்ந்து கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் குற்றுயிராகக் கிடந்தார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதி அந்தக் கூட்டம் அங்கிருந்து சென்று விட்டது. பில்கிஸ் மட்டும் தான் இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர்.

குற்றுயிராக முழு நிர்வாணமாக நடு வீதியில் விடப்பட்ட அவரை அங்கு வந்த ஒரு ஆதிவாசி பெண் அழைத்துச் சென்று தனது ஆடையைக் கொடுத்து அவரின் மானத்தை மறைத்தார். அங்கிருந்து லிம்கேதா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்த மூர்க்கத்தனத்தைப் புரிந்தவர்கள் யார் என்பதை பெயர் விவரங்களோடு அவர் தெரிவித்தும் பொலிஸார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 12 பேர் பற்றிய விவரங்களை அவர் பொலிஸாருக்கு வழங்கினார். அவர்களை கைது செய்யுமாறு அவர் பொலிஸாரிடம் மன்றாடினார். ஆனால் அவர்களை கைது செய்தால் அது உனது உயிருக்கு தான் ஆபத்தாக இருக்கும் என்று கூறி பொலிஸார் நழுவி விட்டனர்.

சுதந்திரமான முறையில் விசாரணைகளை மேற்கொண்ட பல அமைப்புக்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை ஊர்ஜிதம் செய்துள்ளன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி பொலிஸாரும் இந்த வன்முறைகளில் பங்கேற்றுள்ளனர். இக்பால் ஆரம்ப பாடசாலையில் உள்ள முகாமில் தங்கியிருந்த மக்சூதா பீபி என்பவர் தனது பிள்ளைகள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேபோல் எஹ்ஸான் ஜாப்ரி என்ற புத்திஜீவியும் கவிஞருமான மிகவும் பிரபலமான ஒருவர் மிக மோசமான முறையில் தாக்கி கொல்லப்பட்டார். மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற நடுநிலை வாதியான இவர் குல்பர்கா சமூக வன்முறைகளிகளின் போது மோசமான முறையில் கொல்லப்பட்டார். ஆர்.எஸ்எஸ் இனவாத கொலையாளிகள் நாயைக் கட்டி இழுத்து வருவது போல் இவரை நடுவீதியால் இழுத்து வந்து கொன்றுள்ளனர். முதலில் கை கால்கள் வெட்டப்பட்டு பின்னர் முழு உடலும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கற்பனை கூட செய்து பாhக்க முடியாத அளவுக்கு கொடூரமான முறையில் இவரின் கொலை இடம்பெற்றுள்ளது.kodnani bajrangi

இதில் மிகவும் கேவலமான விடயம் என்னவென்றால் எஹ்ஸான் ஜாப்ரியின் கொலை நரேந்திர மோடியின் கண்முன்னாலேயே இடம்பெற்றுள்ளது. அவர் நேரடியாக இந்தக் கொலையை கண்கானித்துள்ளார். ‘நரேந்திர மோடி பகிரங்கமாக கொல்லப்பட வேண்டும் என எஹ்ஸானின் மனைவி மக்கள் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை. அதற்காக அவர் அந்தக் குடும்பத்துக்கு நன்றி கூற வேண்டும்’ என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றம் விஷேட விசாரணை குழுவொன்றை நியமித்தது. ஓடே படுகொலைகள் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய நிர்வாக சேவை அதிகாரி சஞ்சீவ் பட் மாநில அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். ‘வெறுப்புணர்வு அரசியலின் ஆய்வு கூடமாக’ மாநில அரசு திகழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே ராகவன் தலைமை தாங்கிய விஷேட விசாரணை குழு பெறுமதிமிக்க பதிவுகளை அழித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரம் மிக்க அரசியல் வாதிகளை குற்றங்களில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கிலேயே இந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திர மோடி ஒரு பொதுவான குற்றவாளி போல் கையாளப்பட வேண்டியவர். அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

2012 பெப்ரவரி 24இல் மனித உரிமை கண்கானிப்பகம் விடுத்த அறிக்கையில் ‘குஜராத்தில் 2002இல் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் இந்தியாவின் சமய சமநிலை தொடர்பான நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை கண்கானிப்பகத்தின் தென் ஆசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்கூலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளையும் பொலிஸாரையும் விசாரிப்பதற்கு பதிலாக குஜராத் அதிகாரிகள் மறுப்பு அறிக்கை விடுவதிலும் நீதிக்கு தடையாக இருப்பதிலுமே ஈடுபட்டுள்ளனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் குஜராத் அரச அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்த வன்முறைகள் பற்றி பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன என்று மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

பிரவீன் சுவாமி என்ற பத்தி எழுத்தாளர் ‘கறுகிய உடல்களோடும் எரிக்கப்பட்ட வீடுகளோடும் குஜராத்தில் ஒரு பாசிஸ திட்டம் அரங்கேறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்துக்களைக் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மரண அணிகள் இதை செய்துள்ளன. முழு அரச அனுசரணையும் இதற்கு பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநில முஸ்லிம்கள் சேறிப்புறங்களுக்கள் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவை செய்யப்பட்டுள்ளன. குஜராத் அரசியல் அரங்கில் இந்து உரிமையாளர்கள் நிலைத்திருக்க வேண்டும் என்பது இதன் பின்னணி நோக்கம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படுகொலைகள் வன்முறைகள் என்பனவற்றின் பிரதான சூத்திரதாரியான அதே நரேந்திர மோடிதான் இன்று இந்தியாவின் கௌரவம் மிக்க பிரதம மந்திரி. மனித உரிமையினதும் சுதந்திரத்தினதும் காப்பாளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் மேற்குலக வாதிகளும் அவர்களோடு சேர்த்து வங்குரோத்து நிலையில் உள்ள வளைகுடா ஷேக்குகளும் கூட இன்று நரோந்திர மோடிக்கு செங்கம்பளம் விரிக்கின்றனர்.

ஒரு வேளை இது தான் புதிய உலக ஒழுங்கு முறையோ?