sultan abdul hamidகடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவின் நஜத் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து றியாத்தை கைப்பற்றிய அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூதுடன் பிரிட்டிஷ் காலணித்துவ சக்திகள் 1916இல் ஒரு நற்புறவு உடன்படிக்கையை செய்து கொண்டனர்.

அது துருக்கிப் பேரரசை (Ottaman Empire) வீழ்த்தி கிலாபத் ஆட்சி முறையை ஒழித்து இஸ்லாத்தையும் முஸ்லிம் உலகையும் பலவீனப்படுத்த யூதர்களோடு இணைந்து பிரிட்டிஷ் அரசு திட்டம் தீட்டி வந்த வேளை.

மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஓரு ராஜ்ஜியம் தான் துருக்கிப் பேரரசு. அன்று அது வீழ்ச்சியில் இருந்த காலகட்டம். முதலாவது உலகப் போரின் போது துருக்கிப் பேரரசு மக்கா மற்றும் ஜெத்தா நகரங்களை இழந்து கடைசியில் 1919இல் மதீனாவையும் இழந்தது.

துருக்கிப் பேரரசு ஆட்சியாளர்களால் மக்காவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜோர்தான் மன்னரின் பூட்டனாரான ஷரீப் ஹுஸேன் 1924 மார்ச் 3இல் கிலாபத் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு நான்கு தினங்களின் பின் தன்னை மக்காவின் ஆட்சியாளராக 1924 மார்ச் 7ல் பிரகடனம் செய்தார். இந்த கிலாபத் ஆட்சி முறை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் பிரகடனம் செய்தார்.

இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும் யூதர்களையும் ஆத்திரம் அடைய வைத்தது. அவர்கள் ஒட்டு மொத்தமாக கிலாபத் ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்துல் அஸீஸ் பின் அப்துல் சவூத்தை தெரிவு செய்து அவருக்கு ஐந்து மில்லியன் ஸ்ட்ரேலிங் பவுண் பணத்தையும் ஆயுதங்களையும் வழங்கினர். நிராயுதபாணியாக இருந்த ஷரீப் ஹுசைன் மீது தாக்குதல் நடத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன் படி அப்துல் அஸீஸ் ஹுசைன் மீது தாக்குதல் நடத்தி அவரை வீழ்த்தினார். பிரிட்டிஷாருடனும் சியோனிஸ்ட்டுகளுடனும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கிலாபத் ஆட்சி முறை வீழ்த்தப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையும் மீண்டும் கிலாபத் ஆட்சிமுறை ஏற்பட தான் இடமளிக்கப் போவதில்லை என்று அவர் தனது எஜமானர்களுக்கு உத்தரவாதமும் அளித்தார்.

இவ்வாறுதான் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ஒன்று கூடும் ஒரு அமைப்பு முறையாக இருந்த கிலாபத் ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அது ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டது 1924 மார்ச் 3இல். தனது அடிமையான அப்துல் அஸீஸை ஆட்சியில் அமரச் செய்ததன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மற்றும் யூதக் கட்டுப்பாடுகள் மேலோங்கத் தொடங்கின. பிரிட்டிஷ் மற்றும் சியோனிஸ சக்திகளால் இவ்வாறு மாற்றி எழுதப்பட்ட மத்திய கிழக்கின் விதிதான் இன்றும் தொடருகின்றது.SLICE PALESTINE

அதனை அடுத்து வந்த ஆண்டுகளில் சவூதி பிரிட்டிஷ் உறவுகள் மிகச் செழிப்பாக வளர்ந்தோங்கின. அமெரிக்காவுடனான சவூத் குடும்பத்தின் உறவுகள் 1930 இன் முற்பகுதியில் துளிர் விடத் தொடங்கின. தனது நாட்டில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட அமெரிக்க கம்பனி ஒன்றைத் தெரிவு செய்ததன் மூலம் இந்த உறவுகள்  தொடங்கின.

இது பலஸ்தீனர்களின் பூமியில் யூதர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி. 1943இல் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இப்னு சவூதுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார். பலஸ்தீன பூமியில் அவர் உருவாக்கத் திட்டமிட்டுள்ள யூத ராஜ்ஜியத்துக்கு ஏனைய அரபு தலைவர்களின் ஆதரவை பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அப்துல் அஸீஸுக்கு வழங்கப்பட்ட இலஞ்சம் தான் இது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இப்னு சவூதை சந்தித்தார். இந்தச் சந்திப்பு 1945 பெப்ரவரி 14இல் சுயஸ் கால்வாயில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் குயின்ஸி யுத்தக் கப்பலில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு நடந்து இரண்டு மாதங்களில் ரூஸ்வெல்ட் மரணம் அடைந்தார். அதன் பிறகு ஜனாதிபதி ஹரி எஸ் ட்ரூமன் மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாக இப்னு சவூத் யூத ராஜ்ஜிய திட்டத்தை ஆதரித்தார். அதற்கு பதிலாக அவரது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான முழு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கியது.

ஜனாதிபதி ட்ரூமனும் மன்னர் இப்னு சவூதும் 1947இல் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டனர். சவூதி ஆட்சியை அமெரிக்கா காப்பாற்றும் என்ற உத்தரவாதம் இந்த உடன்படிக்கை மூலம் வழங்கப்பட்டது. இவ்வாறுதான் சவூதி ராஜ்ஜியத்தின் வரலாறு தொடங்கியது. சவூதி தனது சொந்த சுதந்திரத்தை இழந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் நிலை இவ்வாறு தான் உருவானது அல்லது உருவாக்கப்பட்டது.

அன்று முதல் சவூதி அரசு தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள அமெரிக்காவிடம் தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. அன்று முதல் அது தனது வஹ்ஹாபி கொள்கையை பரப்புவதற்காக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேதங்களை விளைவித்துள்ளது. இதுவரை இஸ்லாமிய வரலாற்றுப் பெருமை மிக்க 300க்கும் மேற்பட்ட இடங்களும் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சவூதி பழங்குடி குடும்பத்தின் இந்த ஆட்சியானது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானது. அது மட்டுமன்றி இந்த வஹ்ஹாபிஸ கொள்கையை பரப்புவதற்காக உலகம் முழுவதும் முஸ்லிம்களை கூறு போட்டு வைத்துள்ளது. கழுத்தை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட இஸ்லாத்துக்கு விரோதமான தண்டனை முறைகளை அரங்கேற்றி உண்மையான இஸ்லாத்தை திரிபு படுத்தி காட்டியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள யுத்தங்களுக்கும் சவூதி அரேபியா நிதி உதவிகளை வழங்குகின்றது. அதன் மூலம் முஸ்லிம் நாடுகளில் இடம்பெறுகின்ற அழிவுகளுக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் சவூதி காரணமாக அமைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக சவூதி அரேபியா யெமனுக்குள் ஊடுறுவி இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்துள்ளது.

Cairo conflictசவூதி அரேபியா இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இதை வெளிப்படையாக வெளியே சொல்வதன் மூலம் முஸ்லிம்களிடமிருந்து உலகளாவிய ரீதியில் பாதகமான விளைவுகள் வெடிக்கும் என்பதால் இந்த உறவு அறிவிக்கப்படாத கள்ள உறவாகவே உள்ளது. சில அறிக்கைகளின் படி கடந்த காலங்களில் ஹஜ் கடமையின் போது சவூதியின் பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜெரூஸலத்தில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் பணிப்பாளர் ஷேக் இக்ரிமா இதை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். சவூதி விமான சேவை இஸ்ரேலுக்கான தினசரி விமான சேவையொன்றையும் தொடங்கியுள்ளது. ஜெரூஸலத்தில் சவூதி அரேபியா ராஜதந்திர நிலையங்களைக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதோர் சூழ்நிலையில் தான் கடந்த வாரம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கிலாபத் ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 93வது வருடத்தை நினைவு கூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வுகளின் போது மீண்டும் கிலாபத் ஆட்சி முறை வரவேண்டியதன் அவசியம் நினைவு கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஹிஸ்புத் தஹ்ரீர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில்:

முதலாவது கிலாபத் ஆட்சி முறை ஏழாம் நூற்றாண்டில் மதீனாவில் முஹம்மத் (ஸல்) அவர்களாலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அது வித்தியாசமான நிறம் குலம் கோத்திரங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து சமூக பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது.

இதன் விளைவாக பல தேசங்களும் மக்களும் இதை தழுவிக் கொண்டனர். இந்த ஆட்சி முறை உச்சத்தில் இருந்த போது மொரோக்கோவிலும்; மேற்கே ஸ்பெயின் முதல் கிழக்கே பிலிப்பைன்ஸ் வரை அதன் ஆதிக்கம் வியாபித்து காணப்பட்டது. இன்னொரு புறத்தில் வடக்கே குரஸான் முதல் தெற்கே கொங்கோ காடுகள் வரைக்கும் அதன் ஆட்சி எல்லை நீடித்தது.

உலக வல்லரசாக இந்த கிலாபத் திகழ்ந்தது. மேற்குலக காலணித்துவ சக்திகள் இந்த விரிவாக்கத்தை கண்டு அஞ்சி அதற்கு எதிரான சதிகளை உருவாக்கின. கிலாபத் ஆட்சியின் வீழ்ச்சி உலகளாவிய முஸ்லிம்களின் கூட்டுத் தலைமையின் இழப்பு என்பன காரணமாக கடந்த தசாப்தங்களில் முஸ்லிம் உலகம் எதிர் கொண்ட எத்தனையோ சவால்களுக்கு இன்னமும் பதில் கூற முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

முஸ்லிம்களின் நிலங்களில் தம்மை தாமே அடையாளப்படுத்திக் கொள்வதற்காக மேலைத்தேச காலணித்துவ வாதிகளால் உருவாக்கப்பட்ட செயற்கை தேசங்கள் இப்போது அவை உருவாக்கப்பட்ட மணலிலேயே உருகிக் கொண்டு இருக்கின்றன. முஸ்லிம்களை கிலாபத் முறையில் இருந்து தூரப்படுத்துவதற்கான திட்டங்களையும் மீறி முஸ்லிம்கள் அந்த விடயத்தை மேலும் மேலும் நெருங்கிக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் மேலைத்தேச சக்திகள் முஸ்லிம் பூமிகளில் கொழுந்து விட்டு எறியும் மாற்றத்துக்கான நெருப்பை அடக்கி அணைக்கஇ மக்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கி அடக்க, சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியாளர்களை தொடர்ந்து பதவிகளில் அமர்த்தியும் வருகின்றனர்.

மேலைத்தேச கலாசாரத்தின் மோசமான விளைவுகள் ஆட்சி முறைகள் என்பனவற்றால் பாதிக்கப்படும் நிலைக்கு முஸ்லிம் உலகம் வந்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இந்த நிலை காணப்படுகின்றது. உலகளாவிய செல்வத்தின் சமனற்ற

caliphate 93

 நிலை, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சினைகள்இ அரசியல் பற்றாக்குறைஇ வறுமைஇ சமூக மட்ட கொந்தளிப்புக்கள் என்பன முஸ்லிம் உலகில் பரவலாகக் காணப்பட்டாலும் அது முஸ்லிம் நாடுகளுக்கு மட்டுமே உரித்தான ஒரு விடயமும் அல்ல முழு உலகமும் ஒரு மாற்று நாகரிகத்தின் தேவையை எதிர்நோக்கியுள்ளது என்பதையே இந்த நிலைமைகள் புலப்படுத்தகின்றன. முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள அகதிகள் பிரச்சினைஇ சிரியாவில் இடம்பெறும் படுகொலைகள்இ முஸ்லிம்கள் மீதான துஷ்பிரயோகங்கள், ஆட்சியாளர்கள் குவித்து வைத்துள்ள செல்வம்,  சர்வாதிகார ஆட்சியாளர்கள், ஊழல் மிக்க அரச குடும்பங்கள் என்பன முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய சவால்களுள் சிலவாகக் காணப்படுகின்றன.

மதச்சார்பற்ற ஜனநாயகம் என்ற போர்வையிலான ஆட்சி முறை உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் தான் இவ்வாண்டு கிலாபத் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட 93வது வருடம் நினைவு கூறப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்களின் வாழ்வு முறையை மாற்றும் முயற்சியில் மேற்குலகம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ள பின்னணியில் இந்த நினைவு கூறல் இடம்பெற்றுள்ளது. உலக முஸ்லிம்கள் இஸ்லாத்தின பக்கம் திரும்புவதற்கான உண்மையான மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இது இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் வீழ்ச்சியோடு உலக ஒழுங்கு முறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. உலக ஒழுங்கு முறை சீரழிந்து போன ஒரு பின்னணியில் பூகோள அரசியலின் உண்மை நிலையில் கிலாபத் ஆட்சி முறை தற்போது நிலவும் ஆட்சி ஒழுங்கு முறைகளுக்கு ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. முன்னொருபோதும் இல்லாத வகையில் மாற்று கலாசாரம் ஒன்றின் உதயத்துக்கான தருணம் ஒன்றையும் இது ஏற்படுத்தி உள்ளது.

ஒரு மாற்று கலாசாரமாக கிலாபத் ஆட்சி முறையானது மனிதனுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான உறவு முறையில் ஒரு சீரான நிலையை ஏற்படுத்தும். முன்னேற்றத்துக்கு தடையாக புலமைச் சொத்து உரிமையை கூட்டுத்தாபனங்கள் பயன்படுத்தும் நிலையில் இது மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் தமது அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையை இழக்கும் நிலையில் கிலாபத் முறையில் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லாத உறுதியான அடித்தளம் மற்றும் புதிய மாற்றங்களுடன் கூடிய புதிய அரசியல் செயற்பாடுகள் அறிமுகமாகும் நிலை உருவாகும். இந்த கிலாபத் ஆட்சிமுறையானது உண்மையான ஒரு நாகரிகமாக உருவாகும். இங்கு மக்கள் கொடுமைஇ அடக்குமுறை என்பனவற்றைக் கண்டு அஞ்சாமல் இந்த ஆட்சியை நோக்கி படை எடுக்கும் நிலை உருவாகும்.

இந்த கிலாபத் ஆட்சிமுறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு தகவல்கள் மற்றும் அறிவூட்டல்கள் இதன் வாயிலாக பகிரப்படுகின்றன. இன்றைய முதலாளித்துவத்துக்கு ஒரு மாற்று கலாசாரமாக இதை அறிமுகம் செய்யும் வகையில் இந்தப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.