rima khalafஇரண்டாம் உலகப் போரின் சிதிலங்களின் மீதுதான் ஐக்கிய நாடுகள் சபை  முளைத்தெழுந்தது. 1945, ஆக்டோபர், 24 இல் ஐ.நா உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்ட போது, அதன் நோக்கங்களாக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நாடுகள் இடையில் நட்பு ரீதியான உறவை அபிவிருத்தி செய்தல், சர்வதேச ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் உரிமைகளுக்கான மதிப்பை மேம்படுத்தல் என அப்போது ஐ.நாவின் நோக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

 

ஐ.நா உருவாக்கப்பட்டு எழுபத்திரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று ஐ.நா. அமெரிக்க, இஸ்ரேலிய அடாவடித்தனங்களை எதிர்கொள்ளும் திராணி இல்லாத நிலையில் முடமாகிக் கிடக்கிறது. மனிதம் செத்துப்போயிருக்கிறது. ஐ.நா உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவு செய்கின்ற திராணி இல்லாத நிலையில், ஐ.நா செயலிழந்து நிற்கிறது.

மட்டுமல்லாமல், ஐ.நா என்பது இஸ்ரேலிய, அமெரிக்க யுத்த முஸ்தீபுகளை நியாயப்படுத்துவதற்கும், அவற்றை சட்ட ரீதியானதாக உலக அரங்கில் காட்டிக் கொளதற்கும் மலிவான கருவியாக மாற்றம் பெற்றிருக்கிறது. அரபு, முஸ்லிம் நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் இந்த யுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில், முஸ்லிம் நாடுகளைக் கொலைக்களங்களாக மாற்றம் செய்திருக்கின்றன.

நான் இவ்விதம் சொல்லும் போது, என்னை சிலர் அன்னார்ந்து பார்க்க முடியும். சிலர் தம் புருவங்களை நெரிக்கவும் கூடும். ஆனால், கசப்பாக இருந்தாலும், உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியிருக்கிறது. என்னுடைய இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான், கடந்த வாரம் ஐ.நாவின் மேற்காசிய கமிஷனின் தலைவி ரீமா கலபின் பதவி விலகல் அமைந்திருக்கிறது.  

ஐ.நாவின் இந்த அமைப்பு வெளியிட்டிருந்த, இஸ்ரேலை இனவாத அரசு என வாதிடும் அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அவர் மீது இஸ்ரேலினால் வழங்கப்பட்டு வந்த அழுத்தத்தின் காரணாமகவே ரீமா கலபின் இந்தப் பதவி விலகல் இடம்பெறுகிறது.

இது பற்றிக் குறிப்பிடும் ரீமா கலப்  ஐ.நா செயலாளர் நாயகம், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அழுத்தங்கள் காரணமாக இந்த அறிக்கையை மீளப் பெறுமாறு எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். எனவே, நான் ஐ.நாவில் இருந்து இடைவிலகுகின்ற என்னுடைய பதவி விலகலை அவரிடம் கையளித்தேன்…”.

இந்தப் பதவி விலகலை நன்றியுணர்வுடன் நோக்குகின்றனர் பலஸ்தீனியர்கள். தன் வாழ்வின் அடிப்படை கொள்கைகளை சமரசம் செய்து கொள்வதை விட கௌரவத்துடன் பதவி விலகுவது எவ்வளவோ சிறந்தது என்பது அவர்களுடைய அபிப்பிராயம்.obama netanya

இஸ்ரேல் பற்றிய உண்மையான மற்றும் சட்ட ரீதியான கண்டறிதல்களை ஒடுக்குவதற்கு வழங்கப்பட்டு வருகின்ற அழுத்தம் எத்தகையதாக இருக்கின்றது என்பதை ரீமா கலபின் இந்தப் பதவி விலகல் சொல்கிறது. மனித உரிமைகள் பற்றி அலட்டிக் கொள்கின்ற  ஏனைய ஐ.நா அதிகாரிகளுக்கும் இது அச்சத்தை ஏற்படுத்தும் படியான நிகழ்வுதான்.

இஸ்ரேலிற்குப் பாதகமான இருக்கிறது என்பதற்தாகவும், இஸ்ரேலிய யுத்தக் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவும் புறந்தள்ளப்படுகின்ற முதலாவது ஐ.நா அறிக்கை இதுதானா?

உண்மையில், ஐ.நா வில் கொண்டு வரப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிற்கு எதிரான தீர்மானங்கள் தூசு பிடித்துப் போய்க் கிடக்கின்றன. எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆனால், அரபு முஸ்லிம் நாடுகளின் மீது தடைகளை அறிவிக்கும் விடயத்தில் அமெரிக்கா கூடுதல் அவசரம் காட்டுகின்றது. இத்தகைய தடைகள் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பிரச்சினைகளையும் சோதனைகளையும் இந்நாடுகளில் உண்டு பண்ணியுள்ளன. அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர், இத்தகைய தடைகள் காரணமாக ஐந்து இலட்சம் ஈராக்கிய குழந்தைகள் கொல்லப்பட்டிருந்ததைக் கூட நியாயப்படுத்தி இருந்தார்.

2008 / 2009 காலப்பகுதியில் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது நடந்த யுத்த அபராதங்கள் பற்றிய தன் சொந்த அறிக்கையையே ஐ.நாவினால் நடைமுறைப்படுத்த இயலாத அளவு அது கையாலாகாத நிலையில் இருந்தது.

இஸ்ரேல் மற்றும் பலம் வாய்ந்த யூத லொபிகள் பற்றிப் பேசுவதற்கு எல்லோருமே அஞ்சுகிறார்கள். இதன் காரணமாகத்தான், இந்த அறிக்கைகளையெல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ள வேண்டாம் என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனைக் கோரி இருந்தார்.

2008, டிசம்பர் 27 முதல் 2009 ஜனவரி 18 வரை இஸ்ரேல் காஸாவில் ஈடுப்பட்ட யுத்த அபராதங்களைப் பற்றிய இரண்டு அறிக்கைகளைத் தயாரித்தது.

முதலாவது அறிக்கை ஐ.நா மனித உரிமை கமிஷனின் பிரதானி நாவின் பிள்ளை தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை.

இரண்டாவது, தென் ஆபிரிக்காவின் பிரபல நீதிபதி ரிசர்ட் கோர்ல்ட் ஸ்டோர்ன் தலைமையிலான குழு சம்ர்ப்பித்த அறிக்கை.

நாவின் பிள்ளை மிக சீரியஸான தொணியில் இஸ்ரேல் ஈடுபட்ட உரிமை மீறல்கள் தொடர்பில், அது அனுபவித்து வரும் முழுமையான தண்டனை விலக்கு குறித்து விமர்சித்தார். தாக்குதல்கள் அரங்கேறுவதற்கு முன்பும், அதன் பிறகும் தொடர்ந்து வருகின்ற காஸா மக்களை பாதித்து வரும் முற்றுகைக்கு மேலதிகமாக  இஸ்ரேலின் காஸா மீதான ஆக்கிரமிப்பில், இஸ்ரேலிய படைகள் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறினர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன…..”

palunstatusஇந்த அறிகையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த ஐ.நா அறிக்கை வெளிவந்தது. அதில் இஸ்ரேல் யுத்த அபராதத்தில் ஈடுபட்டதாகவும், பெரும்பாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அது இழைத்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த குழுவின் தலைவராக செயற்பட்டவர் நீதிபதி ரிசர்ட் கோர்ல்ட்ஸ்டோன். இவர் தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா என்பவற்றிற்கான சர்வதேச யுத்த அபராத நீதிமன்றத்தில் ஐ.நா சார்பாக வக்கீலாக வாதிட்டவர்.

கோர்ல்ட்ஸ்டோன் அறிக்கை என்று பரவலாக அழைக்கப்பட்ட இந்த அறிக்கை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக வீடுகள், தொழிற்சாலைகள், கிணறுகள், பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய பொதுக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டன என்பதை கண்டறிந்தது.

சிதிலமடைந்த தம் முன்னாள் வீடுகள் அருகிலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. தொடரும் ஆக்கிரமிப்புக் காரணமாக, வான் தாக்குதல்கள் நிறைவுக்கு வந்தாலும் மீள் கட்டுமாணம் சாத்தியமற்றதாக இருந்தது. இந்த இராணுவ முன்னெடுப்பில் மாத்திரம் காஸாவில் ஆயிரத்து நானூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த கண்டறிதல்களை இலேசாகப் புறந்தள்ளி விடுவது இலகுவானதல்ல. மிகக் கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட, முழுமையானதொரு அறிக்கை இது. கள விஜயங்கள், பகிரங்க வாக்குமூலங்கள், கிட்டத்தட்ட இருநூறு பேரிடம் இருந்து பெறப்பட்ட தனித்தனியான நேர்காணல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், சட்டலைட் படங்கள், மற்றும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஏனைய அறிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு என பல்வேறு விடயங்களை மையப்படுத்தி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது.

அந்தக் குழுவின் தலைவராக இருந்த கோர்ல்ட்ஸ்டோன் அவர்களும் சாமான்யமானவர் அல்லர். பெரிதும் மதிக்கப்பட்ட, மிக அனுபவம் வாய்ந்த நீதிபதி. ஏற்கனவே குறிப்பிட்டது போல், தென்னாபிரிக்க அரசியலமைப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி. முன்னாள் யூகோஸ்லாவியா ருவாண்டா என்பவற்றுக்கான யுத்த அபராத நீதிமன்றத்தில் ஐ.நா சார்பில் வாதாடியவர்.

தவிரவும், இன ரீதியாக அவர் யூதர். அவருடைய மகள் குறிப்பிடுவது போல், கோர்ல்ட்-ஸ்டோன் ஸியோனிவாதி, இஸ்ரேலை நேசிப்பவர், மற்றும் ஹிப்ரூ பல்கலைக்கழக கவர்னர் போர்டில் அங்கம் வகிப்பவர்”.

ஆனால், அந்த அறிக்கையையும் கூட அமெரிக்க ஒபாமா நிர்வாகம் நிராகரித்து விட்டது. சர்வதேசக் குற்ற நீதிமன்றத்திற்கு அது அனுப்பப்படுவதையும் முற்றாக மறுத்து விட்டது. இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தன் வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் அது தயாராக இருந்தது.

சர்வதேச சமூகம் இஸ்ரேலை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சில எட்டுக்களை எடுத்து முன் வந்த போது, அமெரிக்க கபட நாடகத்தில் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீனிய அரசாங்கமும் வேடமேற்று நடித்து, அதனைக் குழப்பி விட்டமைதான் வேதனையானது.   

இவ்விதம் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் பற்றிய கோர்ல்ட் ஸ்டோர்ன் அறிக்கை தூசு படியும் படியாக தூக்கி எறியப்பட்டது. இப்போது இஸ்ரேலிய யுத்தக் குற்றங்கள் பற்றி யாரும் பேசுவதில்லை.rima unsecgen

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஸியோனிஸ்ட்டுகள் கொண்டிருக்கின்ற செல்வாக்குதான் இவ்விதம் அத்தனை குற்றங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, இஸ்ரேலை சர்வதேச சமூகம் கண்டிக்கவோ, தண்டனை வழங்கவோ ,முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறது.                   

ரிசர்ட் போல்க் ஐ.நாவின் பல்ஸ்தீனுக்கான முன்னாள் உத்தியோகபூர்வ ஆய்வாளர்களுள் ஒருவர். அவருடைய புதிய நூலாகிய பலஸ்தீன்ஸ் ஹொரிஸோன்என்ற புத்தகம் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு பல்கலைக்கழகங்களில் வெளியிட்டு வைக்கப்பட இருந்தன. சர்வதேச சட்டப் பேராசிரியராகிய ரிசர்ட் போல்டும் இதில் உரையாற்றுவதற்கு இருந்தார். ஆனால், அந்த நிகழ்வை குறித்த இரண்டு பல்கலைக்கழகங்களும் ரத்து செய்து விட்டன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக இவற்றுள் ஒரு பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் வெளிப்பட்ட ஒரு ஐ.நா அறிக்கையை வடிவமைப்பதில் ரிசர்ட் போர்ல்டும் பங்கெடுத்திருந்தார். அவ்வறிக்கை இவ்விதம் நிறைவடைகிறது. எதுவித சந்தேகமுமின்றி, பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் ஒரு இனவாத அரசை திணிக்கும் குற்றவாளியாக உள்ளது”.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு என்ற சொல், 1967 இல் இருந்து அதன் கால அளவை பார்க்கும் போது பொருத்தமற்றதாக இருப்பதாகவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் ஓர் இனவாத அரசுஎன அழைக்கப்பட வேண்டும் எனறும் ரிசர்ட் போல்ட் குறிப்பிடுகிறார்.