A.R.M. Munsoorதமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்தவர் இன்று எம்மோடு இல்லை.

லத்தீப் பாரூக்

தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்த கண்ணியவான் அரசியல்வாதியான அப்துல் றசாக் மன்சூரை நாம் இன்று இழந்துவிட்டோம். தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்கும் இந்த நாட்டுக்கும் அர்ப்பணத்தோடு பணியாற்றிய அவர் 25ம் திகதி ஜுலை 2017ல் எம்மை விட்டுப் பிரிந்தார். சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையைச் சேர்ந்த அவரின் நல்லடக்கம் அவரது சொந்த ஊரான கல்முனையில் இடம்பெற்றது.

மன்சூர் பற்றிஅவரின் அன்றைய வகுப்பறைத் தோழி திருமதி.ராஜேஸ் கந்தையா மன்சூரை கௌரவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு நினைவு மலரில் இப்படிக் கூறுகின்றார்.

“நான் அவரைஒருஅன்புக்குரியநண்பனாகஉரிமைகோரும் அதேவேளைமட்டக்களப்புமாவட்டமக்கள் மன்சூரைதமதுசொந்தமண்ணின் மைந்தனாகஉரிமைகோருகின்றனர். அவரைநான் அவரின் முதற்பெயர்கொண்டேஅழைக்கலாம். பாடசாலைவாழ்வில் இருந்துபிரியும் வரைநாம் ஒன்றாகவேபடித்தோம். ஆனால் அந்தநற்பின் பிணைப்பு இன்றுவரைநீடிக்கின்றது. உயர்பாடசாலையிலாயினும் சரிஅல்லதுசட்டக் கல்லூரியிலாயினும் சரிஒருமாணவனாக இருந்தகாலத்தில் கூட மன்சூர் விடாமுயற்சிஉடையவராகவும் உயர் இலக்குகளைஅடையும் ஆற்றல் கொண்டவராகவுமேகாணப்பட்டார். மக்கள் நலன் அவர்மனதில் எப்போதும் காணப்பட்டது. ஏழைகளின் உயர்ச்சிக்காகஅவர்அயராதுஉழைத்தார். அவர் இதைபுகழுக்காகசெய்யவில்லை. மாறாகசமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்குஉதவவேண்டும் என்றஉயரியநோக்குடன் அர்ப்பணத்தோடுஅதில் ஈடுபட்டார்.

அதிக இலாபம் ஈட்டித் தரும் வகையில் அவர்சட்டத்துறையில் பிரவேசித்திருக்கலாம். ஆனால் அதைசெய்யாமல் அவர்அரசியலில் ஈடுபட்டார். இந்தமுடிவிலும் கூட நாட்டுக்கும் தனதுதொகுதிமக்களுக்கும் சேவையாற்றவேண்டும் என்றஅவரின் எண்ணத்தையேநாம் உணரமுடிகின்றது. அவர்ஐ.தே.கஅரசில் வர்த்தகவாணிபதுறைஅமைச்சராகவெளிநாடுகளுடன் சாத்தியமானஉறவுகளை ஸ்தாபித்தார். குவைத் மற்றும் பஹ்ரேன் நாடுகளுக்கான தூதுவராகஅவர்சர்வதேசப் பங்காளிகளுடன் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் ஸ்தாபித்தார்.

மன்சூர் முழு அளவிலான ஒரு கனவான். அவர்நினைத்திருந்தால் ஒருசட்டத்தரணியாக,பாராளுமன்றஉறுப்பினராக,அமைச்சராக,சமூகசேவகராகபணத்தைசம்பாதித்திருக்கலாம். ஆனால் அவரின் கரங்கள் சுத்தமானவை,அவரின் சாதாரணவாழ்க்கைசெல்வத்தைவேண்டிநிற்கவில்லை. அவர்குறைந்தளவுவசதிகளோடுஎளிமையாகவாழ்ந்தார். ஆனால் அவரி;ன் உள்ளம் எப்போதுமேபெரியதாக இருந்தது. அதுதான் அவரைஎல்லோரும் விரும்பும் ஒருநபராகவும் மாற்றியது. அவரின் எளிமையும் பண்பும் அவர்பழகியமக்களைக் கவர்ந்தது. அவரதுமக்களுக்குதொடர்ந்துசேவைபுரியஅவருக்குஎல்லாம் வல்ல இறைவன் உடல் மற்றும் உளரீதியானஆரோக்கியத்தைஅளிக்கபிரார்த்திக்கின்றேன்”என்றுதிருமதி.ராஜேஸ் தெரிவித்துள்ளார்.

மன்சூர் எப்போதும் இன நல்லிணக்கத்துக்காகபாடுபட்டவர். இன்றுஅவர்தீவிரஅரசியலில் இல்லாவிட்டாலும் கூட அவரின் சிந்தனைகள் இன்றும் மக்கள் மனங்களில் உள்ளன. பலசந்தர்ப்பங்கில் நான் அவருடன் பேசுகின்றபோதுஅவர் கூறும் முக்கியவிடயம்

“கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்துதத்தமதுநலன்களைப் பேணிக் கொண்டு இணக்கமாகவாழவேண்டும். ஏனைய பிரதேசங்களில் ஏனைய சமூகங்களுடன் இணைந்திருப்பதுபோல்தான் இதுவும். முஸ்லிம்களோடு இணைந்துபெரும்பாலானதமிழர்களும் எனக்குவாக்களித்துள்ளதாகவேநான் எண்ணுகின்றேன். அவர்களும் தமதுபிரதிநிதியாகஎன்னைத் தெரிவுசெய்துள்ளனர். இன நல்லிணக்கத்தின் அந்தபொன்னானநாற்களை இன்னமும் நான் எண்ணிப் பார்க்கின்றேன். துரதிஷ்டவசமாககுறுகியநோக்கம் கொண்டசுயநலஅரசியலால் அந்த இன நல்லிணக்கமும் சமாதானமும் அழிக்கப்பட்டது”.

1992 அகஸ்ட் 22ல் கல்முனைக்குடிமக்களால் மன்சூரின் சேவைகளைகௌரவித்துஒருவரவேற்புநிகழ்வு இடம்பெற்றது. அதில் வெளியிடப்பட்டநினைவுமலருக்குகாலஞ்சென்றநீலன் திருச்செல்வம் அனுப்பியிருந்தசெய்தியில் 

“திருச்செல்வம் குடும்பத்துக்குமன்சூர் மிகநெருங்கியநண்பராகத் திகழ்ந்தார். மன்சூர் அவருடன் மிகநெருங்கியநிலையில் பணியாற்றியுள்ளார். ஐம்பதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அவர்ஒருசட்டமாணவராக இருந்தபோதே இந்தநாட்டின் இளைஞர்கள் பற்றியஎண்ணத்தைபாதித்தஅரசியல் போராட்டத்தால் உணாச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். 1958 மொழிப் போராட்டத்தின் போதுகாலிமுகத் திடலில் இடம்பெற்றஒருசத்தியாகிரகத்தின் போதுஒருகும்பலின் தாக்குதலுக்கும் அவர்ஆளானார்”.

எவ்வாறாயினும் அதனைத் தொடர்ந்துவந்தஅரசியல் சந்தர்ப்பவாதம் பலபொய்களைவிற்பனைசெய்துஏமாற்றுவித்தைகளைப் பரப்பிஅரசியல் ரீதியாகமக்களிடம் இருந்துஅவரைஓரம் கட்டியது. பிரிவினைவாதஅரசியலில் சிக்கிமன்சூரைகைவிட்டதுஎவ்வளவுபெரியமடத்தனம் என்பதைபுரிந்துகொள்ளகிழக்குமாகாணமக்களுக்குகிட்டததட்டகால் நூற்றாண்டுகள் சென்றன. இந்தப் பாதிப்பைஈடு செய்யகல்முனைமற்றும் அதனை சூழவுள்ளபிரதேசமக்கள் 2013 அக்டோபர் 19ல் மன்சூருக்குமகத்தானவரவேற்பொன்றைஏற்பாடுசெய்தனர்.

இது தொடர்பானமலருக்குஆக்கங்களைவழங்கியபிரபலங்கள் பலர்மேற்சொன்னதவறுக்காகவருத்தம் தெரிவித்திருந்தனர். அத்தோடுமன்சூரின் சமூகநலன் சார்ந்தசேவைக்காகஅவரைமனப்பூர்வமாகப் பாராட்டியும் இருந்தனர். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் அவரின் சேவை இன்னமும் பசுமையாகஉள்ளதென்றும் அவர்கள் வர்ணித்திருந்தனர்.

மன்சூர் வர்த்தகவாணிபதுறைஅமைச்சராக இருந்தபோதுஅவரைசந்திக்கச் சென்றஒருகோடீஸ்வரவர்த்தகக் குழுவில் ஒருவர்அவருக்கு இலஞ்சம் வழங்கும் வகையில் பேசியபோதுதனதுஆசனத்தில் இருந்துஎழுந்துநின்றமன்சூர் நான் அமைச்சராக இருக்கும் வரையில் இனிநீங்கள் இங்குவரக் கூடாதுஎன்றுசொல்லிஅவரைஅங்கிருந்துவெளியேறும் படி கூறினார்.

ஊழலிலும் இலஞ்சத்திலும் சிக்கித் தவிக்கும் இன்றையஅரசியல் வாதிகளிடமிருந்தும் மிகவும் தூரமானஒருவிடயமாகவே இதைபார்க்கவேண்டியுள்ளது.

அண்மையில் தென் கிழக்குபல்கலைக்கழகம் தனதுபட்டமளிப்புவிழாவின் போதுமன்சூருக்குகௌரவகலாநிதிபட்டம் வழங்கிகௌரவித்துள்ளது. இந்தவிழாவின் போது ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனமன்சூருக்கு இந்தகௌரவகலாநிதிபட்டத்தைவழங்கியிருந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகஅவர்அளப்பரியபங்காற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள இலங்கைசமூகம் கடந்தவருடம் அவரைகௌரவித்தது. அவரின் மகள் மரியம் நலிமுத்தீன் தெற்குஅவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாகபதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் வைபவத்தில் கலந்துகொள்ளசென்றிருந்தபோது இந்தகௌரவிப்புநிகழ்வு இடம்பெற்றது. இன்னாலில்லராஹிவஇன்னா இலைஹி ராஜிஊன். (முற்றும்)