modi panneer1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் வழமையான அதன் ஊழல்களுக்கு அப்பால் தமிழ்நாடு மாநிலம் இன நல்லுறவுக்கும், அரசியல் ஸ்திரப்பாட்டுக்கும், பொருளாதார சுபிட்சத்துக்கும் ஒரு நல்ல உதாரணமான மாநிலமாகவே திகழ்ந்தது. ராஷ்டிரிய சுயம்சேவா சங் அல்லது ஆர்எஸ்எஸ் எனப்படும் வன்முறை போக்கு கொண்ட இந்துத்துவ அரசியல் சக்தியினதும் அதன் இணை அணிகளான பிஜேபி, விஎச்பி, ஷிவ் சேனா என்பனவற்றின் செயல்களால் பெரும்பாலான வட இந்திய மாநிலங்கள் சிதறுண்டு போன நிலையில் தமிழ் நாடு மட்டும் தலை நிமிர்ந்தே காணப்பட்டது.

தமிழ்நாடு மக்கள் பொருளாதார சமூக முன்னேற்றங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். இதன் விளைவாக இன்று அவர்கள் ஸ்திரத்தன்மையை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணத்தை அடுத்து தமிழ்நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னால் மறை கரங்களின் திட்டமிட்ட செயற்பாடுகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நெருக்கடிகளின் பி;ன்னால் ஏனைய வட பிராந்திய மாநிலங்களைப் போல் சிறுபான்மை இனத்தவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இனவாதமும் வன்முறை தாக்குதலும் தமிழ்நாட்டிலும் ஏற்படக் கூடிய சாயல்கள் தென்படுவதே இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் அடைந்து பல வாரங்களின் பின் அவரது கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) சிதைவுற்று பிளவு பட்டுக் காணப்படுகின்றது. தற்போது அஇஅதிமுக வை கடத்தி வைத்துள்ள ஜெயலலிதாவின் ஆயாவாக இருந்து அவரது பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமான சசிகலா நடராஜனுக்கும் பதில் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியே இந்நிலையை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பன்னீர் செல்வத்தை பலவந்தப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

எதிர்பாராத இந்த அரசியல் நெருக்கடியானது பிளவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடிய ஆர்எஸ்எஸ் - பிஜேபி சக்திகளுக்கே உதவியாக இருக்கும். தலித் இனத்தவர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளையும் வெறுப்புணர்வையும் தூண்டுபவர்கள் இவர்களே. வட மாநிலங்களில் செய்தது போல் அமைதியாகவும் சமய ரீதியான நல்லிணக்கத்தோடும் வாழும் மக்களை துண்டாடுவதற்கும் தமது நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதற்கும் அவர்கள் இத்தகைய நிலைமையைப் பயன்படுத்தக் கூடும்.ops sasikalaops

தமிழ்நாட்டில் தற்போது தொடங்கியிருக்கும் அரசியல் நெருக்கடிகளின் பின்னால் இருந்து அவற்றுக்கு தூபமிடுபவர்கள் இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி குழுக்களே என்று சில தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய கணவர் நடராஜனோடு இணைந்து ஒரு நிதி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ள சசிகலாவும் அவரின் ஊழல் உறவினர்களும் ‘மன்னார்குடி மாபியாக்கள்’ என வர்ணிக்கப்படுபவர்கள். சொத்துக்களை குவித்த அவர்கள் அதற்கு அடுத்தபடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியமைக்கவும் திட்டங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் அவரின் ஆட்சி கனவுகள் ஆர்எஸ்எஸ் பிஜேபியால் கலைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவினதும் அவரின் குடும்பத்தினதும் நீண்டநாள் ஆட்சிக் கனவு ஆர்எஸ்எஸ் - பிஜேபி குழுவால் ஆறு மணித்தியாலங்களில் எவ்வாறு கலைக்கப்பட்டது என்பது பற்றி பத்தி எழுத்தாளர் நவீன் போஹ்ரா 2016 டிசம்பர் 8ல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் 2016 டிசம்பர் 5ல் அறிவிக்கப்பட்டது. 5.12.2016 என்ற தினம் முடிவடைவதற்குள் சசிகலாவும் அவரின் மன்னார்குடி மாபியாக்களும் மத்திய அரசாங்கத்தோடு அரசியல் விளையாட்டு விளையாட நினைத்தால ஒரு மாநிலத்தின் ஜனநாயகத்தோடு விளையாட நினைத்தால்; பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரின் ஆர்எஸ்எஸ்-பிஜேபி பங்காளிகளும் என்ன செயவார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

அதே தினம் மாலை 5.05மணிக்கு அஇஅதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கட்சித் தலைவியாக சசிகலாவை தெரிவு செய்யவும் சசிகலாவின் மிக நெருங்கிய குடும்ப நண்பரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும் சசிகலாவின் 17 ஆதரவாளர்களை அமைச்சர்களாகவும் தெரிவு செய்ய பன்னீர் செல்வம் இன்றியே கூட்டம் கூடினர்.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத வகையில் அவர்கள் அனைவரும் அச்சரியப்படத்தக்க வகையில் பிற்பகல் 5.45 அளவில் அவர்களுக்கு புதுடில்லியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தக் கூட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு சசிகலாவுக்கு அந்த தொலைபேசி அழைப்பு மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி மிகவும் கீழ்பணிவாக அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டார்.

மீண்டும் சுமார் 19 நிமிடங்கள் கழித்து 6.04 அளவில்; மோடி அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் மற்றும் சட்டத்தரணியும் தமிழ்நாடு பிஜேபி மகளிர் தலைவியுமாக இருக்கும் ஒரு பெண் ஆகியோர் அப்பலோ மருத்துவ மணைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சசிகலாவுடனும் அவரின் மாபியா குழுவுடனும் ஒரு கூட்ட்த்தை நடத்தினர்.

மாலை 6:57 க்கு மத்திய அமைச்சர் அப்பலோ மருத்துவ மனையில் இருந்து வெளியே வந்தார். ஆட்சி அமைக்கவும் மற்றும் சட்ட விரோதமாக அதிகாரத்தை கைப்பற்றவும் முனைந்தால் சசிகலாவுக்கு மத்திய அரசால் என்ன செய்ய முடியும் என அவர் அப்போது விளக்கியிருந்தார்.

இரவு 7.10 மணிக்கு சசிகலாவும் அவரது கும்பலும் அப்பலோ மருத்துவ மனையின் இரண்டாவது மாடியில் 207 இலக்க அறையில் ஒன்று கூடினர். அங்கு இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின் சசிகலா கூட்டம் தமது திட்டத்தை கைவிட தீhமானித்தனர்.

இரவு 11.10க்கு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது தடவையாக தமது கூட்டத்தை கூட்டினர். இந்தக் கூட்டத்தில் பன்னீர் செல்வமும் பங்கேற்றார். அங்கு பன்னீர் செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இது பெரும்பாலும் பிரதமர் மோடியின் தெரிவாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இரவு 11.30 (05.12.16) ஜெயலலிதா மரணம் அடைந்தார் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 25 நிமிடங்களுக்கு முன்பே டில்லியில் பிஜேபி அரசால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நள்ளிரவு 12.50க்கு பன்னீர் செல்வம் தமிழ்நாடு ஆளுனரை சந்தித்து புதிய முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த அதே அமைச்சர்கள் புதிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

அதேநாள் பிஜேபி அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னைக்கு வருகை தந்தார். சாதாரணமாக ஜெயலலிதாவை பற்றி விசாரிக்க வந்திருந்தால் அவர் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவர் சென்றதோ ஆளுனர் மாளிகைக்கு. பின்னர் ஆஸ்பத்திரி சென்று ஜெயலலிதாவின் மரண அறிவிப்பு வெளிவரும் வரைக்கும் அங்கே இருந்தார்.

பிறகு தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

2016 செப்டம்பர் 23ல் காய்ச்சல் காரணமாக ஜெயலலிதா அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் சசிகலாதான் ஜெயலலிதாவை கொலை செய்தார் என்ற சந்தேகமும் தொடர்ந்து இருந்து வந்தது. அந்தக் கதை இப்படி செல்கிறது:

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான போயஸ் கார்டன் மற்றும் அப்பலோ ஆஸ்பத்திரி பாதுகாப்பு கெமரா காட்சிகள் அனைத்தும் மாயமாகியுள்ளன. சகல தடயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. அன்று முதல் ஜெயலலிதா முழு உலகில் இருந்தும் தனிமை படுத்தப்பட்ட ஒரு நபராக யாருமே பார்க்க அனுமதிக்கப்படாத ஒரு நிலையில் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சசிகலாதான்.

babri lk advaniஜெயலலிதா ஒரு மாநில முதலமைச்சர். அவர் ஒரு பிரதம இலிகிதர் அல்ல. அந்த வகையில் மக்களுக்கு தமது முதலமைச்சரின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்ளும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உத்தியோகப்பூர்வமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இந்த விடயத்தில் ஒட்டு மொத்த மௌனம் காத்தன. மத்திய அரசின் இந்த மௌனத்தை சசிகலா தனக்கு சார்பாக மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்த மௌனத்தைப் பயன்படுத்தி தனது மன்னார் குடி மாபியாக்களோடு சேர்ந்து கொடூரமான தனது சதித்திட்டத்தை சத்தமின்றி அரங்கேற்றினார். முழு நாட்டையும் சிசகலா பணயக்கைதி ஆக்கினார். ஜெயலலிதா பற்றி யாரும் எதுவும் தெரிந்து கொள்ள விடாமல் அவர் தடுத்தார். இதனால் ஜெயலலிதாவின் நிலை பற்றி வதந்திகளும் அனுமானங்களுமே தொடர்ந்தன. சசிகலா என்ற ஒரு பெண்ணின் முன்னால் ஒட்டு மொத்த தமிழ் நாடும் ஏன் முழு இந்தியாவும் ஆற்றல் இழந்து நினறது.

சில நாற்களுக்குப் பின் பிரிட்டனில் இருந்து ஒரு விஷேட வைத்திய நிபுணர் அழைத்து வரப்பட்டார். ஜெயலலிதா இருதய நோயால் அவஸ்த்தைப்படுகின்றார் என உலகுக்கு காட்டுவதற்காக அந்த இருதய சிகிச்சை நிபுணர் அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் சடலத்தை எம்பாம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. இது தொடர்பான படங்களும் இப்போது பரவலாக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின் அவருக்கு மரீனா கடற்கரையில் இறுதிச் சடங்குகள் நடத்திய அதே இந்து பூசகர் செப்டம்பர் 23ம் திகதியும் யாருக்கும் தெரியாமல் அப்பலோ மருத்துவ மனையின் பின் கதவு வழியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். பெரும்பாலும் ஜெயலலிதாவின் இறுதிக் கிரியைக்காகவே இவர் அழைத்து வரப்பட்டிருக்கலாம்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சுமார் இரண்டரை மாதங்கள் கழிந்த நிலையில் தான் அவர் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 2016 டிசம்பர் 5 இரவு 11:35 அளவில் அப்பலோ மருத்துவ மனை உத்தியோகப்பூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்தது. மரீனா கடற்கரையில் எம்ஜிஆர் இன் சமாதிக்கு அருகில் அவரது நல்லடக்கமும் இடம்பெற்றது.

செப்டம்பர் 23ல் ஜெயலலிதா அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதே மரணம் அடைந்துவிட்டார் என்று அந்த மருத்துவ மனையைச் சேர்ந்த டொக்டர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.

அதேவேளை சசிகலாவின் முதலமைச்சர் கனவும் அவருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய நான்கு வருட சிறைத் தண்டையால் முற்றாக சிதைந்துப் போய் விட்டது. 60 கோடிக்கு மேல் சொத்துக்களை குவித்துள்ளதாக இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமான நிலையிலேயே இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. இந்த சொத்துக் குவிப்பு சதி மோசடியில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமே மத்திய நிலையமாகச் செயல்பட்டுள்ளதென்பதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தமிழ் நாடு தான் என்பதை இன்றைய குழப்ப நிலையைத் தூண்டிவிட்டவர்கள் யாராக இருப்பினும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஈ.வே.ராமசுவாமி, பெரியார், அண்ணாதுரை போன்ற தீர்க்கதரிசனம் மிக்க தலைவர்கள் இட்ட உறுதியான அடித்தளத்துக்காக தமிழ் நாட்டு மக்கள் மறைந்த தமது தலைவர்களுக்கு இன்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர். தமிழ்நாடு இன்று அதிகளவான எழுத்தறிவு உள்ளவர்களைக் கொண்ட ஒரு மாநிலமாக உள்ளது. தமது மொழி கலாசாரம் என்பனவற்றை நன்கு பரிந்து அதில் ஈடுபாடு கொண்ட மக்களாகவும் அவர்கள் உள்ளனர். தமிழ் சினிமா மூலமாகவும் பலர் இதற்கான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அண்மையில் மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

அந்த வகையில் இன்றைய நெருக்கடிகளைத் தூண்டிவிட்டவர்கள் அதற்கான விலையையும் காலப் போக்கில் செலுத்த வேண்டியிருக்கும்