aleppo11

- லத்தீப் பாரூக்

2016 டிசம்பர் 12 திங்கள் கிழமை முதல் சிரியாவில் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனச் சுத்திகரிப்பு படுகொலைகள் இடம்பெற்றுவருகின்றன. சிரியாவின் வரலாற்றுப் புகழ் மிக்க அலெப்போ பிராந்தியத்தில் தான் இந்தப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தநாட்டின் ஜனாதிபதியான யுத்தக் குற்றவாளியான அலவிய்யா ஷீஆ பிரிவைச் சேர்ந்த பஷர் அல் அஸாத் தான் இந்த ஈனத்தனமான குற்றங்களைப் புரிந்துவருகின்றார்.

babri masjid1- லதீப் பாரூக்

பார்பரி மஸ்ஜித் மீதான தமது உரிமை கோரளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ள இந்திய முஸ்லிம்கள் சமயத்தின் பெயரால் குறுகிய நோக்கங்களுக்காக இந்த விடயத்தை இனவாத அடிப்படையில் தூண்டும் சக்திகளை தடுக்கும் வகையில் இந்த விடயத்தில் விரைவான தீர்ப்பொன்றை வழங்குமாறும் இந்திய உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளனர்.

ranil maithriதவிர்க்க முடியாத வகையில் மூன்றாவது சக்தியின் தேவையும் உணரப்பட்டுள்ளது

- லத்தீப் பாரூக்

கடந்த ஆட்சியில் குற்றச் செயல்களிலும் ஊழல், மோசடி, வீண் விரயம் என்பனவற்றிலும் ஈடுபட்டு நாட்டின் செல்வத்தை பாரிய அளவில் சூறையாடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என்று நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியை இன்று வரை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டது. இது நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

gnasara thugr- லத்தீப் பாரூக்

இனவாத கூலிப்படைகள் மீது மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கப் படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம் மக்களின் இரத்தத்தை சுவைக்கவும் சதையைப் புசிக்கவும் வெறி கொண்டு அலையும் இந்தக் கூலிப்படைகள் இன்னொரு ஜுலை 83ஐ உருவாக்க முனைகின்றனர். இத்தகைய இனவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படும் என்று இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இனியாவது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

UNESCO 300இலங்கை முஸ்லிம்களுக்கும் உலக முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம்

- லத்தீப் பாரூக்

ஒரு காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் உரிமைக்காக சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்த குரல் இலங்கையின் குரல். ஆனால் இஸரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஜெரூஸலம் நகரில் அல் குத்ஸ் வளாகத்துக்குள் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவின் ஹரம் அல் ஷரப் பகுதியில் இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் 2016 அக்டோபர் 13ல் யுனெஸ்கோ அமர்வில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது இலங்கையின் குரல் மௌனித்துப் போய்விட்டது.