isis usaகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு என்பது அமெரிக்க, இஸ்ரேலிய உருவாக்கம் என்றும், அது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை தீய சக்தியாகக் காட்டுவதற்கும், மத்திய கிழக்கை அழித்தொழிப்பதற்கும் உரிய சதித்திட்டங்களுள் ஒன்று என்றும் என் ஆக்கம் ஒன்றில் தெளிவுபடுத்தியிருந்தேன். மேற்கு ஊடகங்களால் மூளை சலவை செய்யப்பட்ட பலர் அதனை நம்பியியிருக்க மாட்டார்கள்.

 

தற்போது உயர்மட்ட அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும், வேறு அதிகாரிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் உருவாக்கம் என்ற கபட நாடகத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பங்கு பற்றிப் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இஸ்ரேல் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸஸுடன் போராடும் பொழுது, காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வீரர்கள் இஸ்ரேலிய மருத்துவ மனைகளில் சிகிச்சையளிக்கப்படுகின்றனர். ஆனால், இந்தப் பொய்களை திறமையாக உலகம் நம்பும் படி செய்வதில் மேற்கூடகங்கள் வெற்றி பெற்றன. காலத்தின் தேவை கருதி அந்த ஆக்கத்தில் சொல்லிருந்த விடயங்களை மீண்டும் இங்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்.    

ஐ.எஸ்.ஐ.எஸ் இன் உருவாக்கத்தை முஸ்லிம்கள் உலகளவில் கண்டிக்கின்றனர். அது ஏற்கனவே யுத்தங்களால் துவண்டு போயுள்ள மத்திய கிழக்கை மேலும் சிறு சிறு தேசங்களாகத் துண்டாடுகின்ற இஸ்ரேலிய, அமெரிக்க, ஐரோப்பிய யூனிய திட்டத்திற்கு சகாயம் வழங்குவதாகவே அமைந்திருக்கிறது.   

மிகச் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற, நிதி வழங்கப்படும், ஆயுத கருவிகளைக் கொண்ட இந்த ரவுடிக் கும்பல் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களுக்கு பயிற்சி வழங்குபவர்கள் யார்? நிதி வழங்குபவர்கள் யார்? இத்தகைய முழு அளவிலான இராணுவம் ஒன்றுடனும், அதி நவீன யுத்த தளபாடங்கள், கருவிகள் என்பவற்றுடனும் ஐக்கிய இராச்சியத்தை விட பெரியதொரு நிலப்பகுதியை வடக்கு ஈராக்கிலும், வட சிரியாவிலும் இவர்கள் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பாலைவனங்கள் தாண்டி இவர்கள்  எப்படி வந்து சேர்ந்தார்கள்?isis israel

ஒரு அறிக்கையின் படி, ஜோர்தானில் வைத்து இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொஸாட் மூலம் இவர்கள் பயிற்சி வழங்கப்படுகின்றனர். அமெரிக்கா ஆயுதங்களை வழங்குகிறது. சவூதி இவர்களுக்கு நிதி உதவி செய்கிறது. 

இந்த உருவாக்கம் ஷியா - சுன்னி முரண்பாட்டை மேலும் கூர்மையாக்குவதற்குரியதொரு கைங்கர்யமும் கூட. நீண்ட காலம் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்த இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான நீடித்த முரண்பாட்டை உருவாக்குவதற்குரிய அடிக்கட்ட வேலைகளை செய்வதாக முன்னாள் ஈராக் பிரதமர் நூரி மாலிகி காலத்தில் இடம்பெற்ற மாற்றாந்தாய்த்தனமான செயற்பாடுகள் அமைந்தன.

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது ஒரு பலமான எந்திரம். ஐஸிஸ் தம் தேவைக்கான நிதியை பல்வேறு வழிகளில் திரட்டுகிறது. பலவந்தமாக தன் வயப்படுத்தல், கடத்தல் மூலம் கிடைக்கின்ற கப்பம், வங்கிகள், நகைகளைக் கொள்ளையிடல், மக்களிடன் வரி (?) அறவிடல் எனப் பல வழிமுறைகள்.

இவற்றுள் சட்ட விரோதமாக இடம்பெறுகின்ற கனிய எண்ணெய் வணிகமே முதலிடம் பெறுகின்றது. வடக்கு சிரியாவிலும், வட ஈராக்கிலும் பல எண்ணெய் வயல்களையும், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஐஸிஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவற்றில் இருந்து மசகு எண்ணெயை ஐ.ஸிஸ் குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலம், நாளொன்றுக்கு சுமாராக இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை சம்பாதிக்கிறது. இதற்குரிய கட்டணத்தை பணமாகவும், பண்டமாற்றுப் பொருட்களாகவும் பெற்றுக்கொள்கின்றது. ஆனால், இந்த மசகு எண்ணெயை சிக்கலான விநியோக வலையமைப்பில் இருக்கும் நடுவர்களிடம் இருந்து வாங்குபவர்கள் யார் என்பது இதுவரை தெரியாது.

ஐஸிஸ் கட்டுப்பாட்டு சிரியா- ஈராக் பிரதேசத்தில் இருந்து, இந்த மசகு எண்ணெய் துருக்கி மற்றும் ஜோர்தான் பிரதேசத்திற்கு செல்கிறது என்பது உண்மை.  

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை அடக்குவது விடயத்தில் ஒபாமா நிர்வாகம் சீரியஸாக இருந்திருந்தால், இந்த எண்ணெய்ப் பணம் எப்படி வருகிறது, எங்கே சேமித்து வைக்கப்படுகிறது என்பதைக் கண்டு பிடிப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த முயற்சியிலும் அது ஈடுபடவில்லை.

ஈராக்கிய படைகளால் ஐ.எஸ். பிரதேசத்தில் அதிகளவிலான அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் பிற தளபாடங்கள் என்பன கைவிடப்பட்டன.

பத்தி எழுத்தாளர் சன்னி ஹுண்டாவின் கருத்தில், அண்மைக் கால முஸ்லிம் உலக வரலாற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சினை, 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகான முக்கிய விஷயமாக உள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழாத நாடுகளில் கூட இது பெரும் தலையிடுகளைக் கொடுத்துள்ளது. மத்திய கிழக்கை மேலும் பல துண்டுகளாகத் துண்டாடி, பல தலைமுறைகளுக்கு அமைதியின்மையை தொடரச் செய்கின்ற அளவுக்கு இது பிரச்சினையானது.

isis israel treatஇஸ்லாமோபோபியாவை மேற்குலகில் மேலும் பரவலடையச் செய்வதிலும் ஐஸிஸ் ஒரு பெரும் பகடைக் காயாக உள்ளது. அண்மையில், சார்ளி ஹெப்டொ என்ற பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட்தன் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொஸாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்குலகு முஸ்லிம்கள் மீதும் தன் கைவரிசையை காட்டுவதற்கு இஸ்ரேல் முயற்சி செய்கிறது.

மற்றொரு அறிக்கையின் படி, அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளின் விமானங்கள் ஐஸிஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஆயுதங்களையும், வேறு பண்டங்களையும் வீசின.

ஈராக்கின் சிரேஷ்ட சட்ட இயற்றுனர் ஒருவர் 16.02.2015 அன்று வழங்கிய தகவலொன்றின் படி, ஐஸிஸ் கட்டுப்பாட்டுப் பிராந்தியமான அன்பார் மாகாணத்திற்கு ஆயுதங்களை ஏந்தி சென்ற நிலையில், இரண்டு பிரிட்டிஷ் விமானங்களை ஈராக்கிய படைகள் சுட்டி வீழ்த்தின. இவ்விதம் ஆயுதங்களை ஏந்திய வண்ணம் அன்பார் பிராந்தியத்தில் எண்ணற்ற விமானங்கள் பரப்பதாக தினமும் பக்தாத் அரசாங்கத்திற்கு செய்திகள் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அன்பார் என்பது ஷியாக்களின் புனித நகரான கர்பளா மற்றும் தலைநகர் பக்தாத் ஆகியவற்றிற்கு அருகில் இருகின்ற மாகாணம். ஐஸிஸ் பிரச்சினை முடிவுக்கு வருவதை அமெரிக்க விரும்பவில்லை என்றும், அன்பார் மாகாணத்தை பிரச்சினைக்குரிய மாகாணமாக வைக்கவே அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தொடர்ந்தும் குற்றம் சாட்டுகிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் மொஸாட்டினால் உருவாக்கப்பட்டு , பயிற்சி வழங்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றினால் ஆயுதம் வழங்கப்படுவது. சவூதி அரேபியாவினால் நிதி வழங்கப்படுவது…." என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்று ஒரு அறிக்கை சொல்கிறது.

பத்தி எழுத்தாளராகிய மைகல் சொஸ்ஸோடோஸ்கி, சோவியத்தின் வீழ்ச்ச்சியின் முன்னரும், பனிப் போர் காலத்திலும் முஜாஹிதீன்களை பயிற்றுவித்தலில் அமெரிக்கா புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏ முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறார். பாகிஸ்த்தான் இராணுவ புலனாய்வு அமைப்பு இந்த இரண்டு தரப்பிற்கும் மத்தியில் இடைத்தரகராக செயற்பட்டிருக்கிறது. அதற்காக போராளிகளுக்குரிய போராட்ட முறை இஸ்லாத்துடன் இரண்டறக் கலந்து உருவாக்கப்பட்டது.

க்ளிண்டன் மற்றும் புஷ் நிர்வாகத்தில், அல்-காய்தா உட்பட இராணுவ அமைப்புக்கள் பலவற்றை உருவாக்குவதற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா கொண்டிருந்தது.  

கோசோவோ - பொஸ்னியா பிரச்சினை காலத்தில் ஒஸாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்பிருந்தமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் ஜேம்ஸ் ஃபோலீ, ஸ்டீவன் சொட்லொப் ஆகியோர் ஐஸிஸால் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டதாக  வெளிவந்த வீடியோ தொடர்பில் அல்-ஜஸீரா அரபு சேவை பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது. இது நம்பகத் தகுந்ததாக இல்லை என்றும், வெறும் நடிப்பே என்றும், சிரிய மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அது சந்தேகம் வெளியிடுகிறது.

செப்டமப்ர் 11 தாக்குதலின் பதிமூன்றாவது ஆண்டு நிறைவை 2014, செப்டம்பரில் கொண்டாடிய சில மாதங்களில் ~புதிய அல்-கைதா|வாகிய ஐஸிஸைக் குறித்த பீதியை அமெரிக்க பொதுத்தளத்தில் உருவாக்குவதற்கு இது பயன்பட்டது. இதன் மூலம் உள்நாட்டில் சட்ட திட்டங்களை இருக்கி பொலிஸ் நிர்வாகம் ஒன்றை நடாத்தவும், வெளிநாடுகளில் இராணுவம் முன்னெடுப்புக்களை முடுக்கி விடவும் உதவியது. இந்த விடயங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுகளில் நடந்தன.

பிரபல இந்திய பத்தி எழுத்தாளர் ராம் புன்யானி இப்படி சொல்கிறார்:

ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முறை. உள்நாட்டவர்களின் கட்டுப்பட்டில் விட்ட விட முடியாத அளவுக்கு எண்ணெய் என்பது மிகப் பெறுமதியான ஒரு பண்டம்" என தன் ஐ.எஸ்.ஐ.எஸ், எண்ணெய் அரசியல், மற்றும் இஸ்லாம் குறித்த பீதியின் உச்ச நிலை என்ற ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் பற்றிய பிழையான பதிவொன்றை வழங்கி, மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களைக் கொண்டு, அமெரிக்கா மூலமே அல்-காஇதா உருவாக்கப்பட்டது என்பது மிக வெளிப்படையானது. தெளிவாக சொல்வதானால், ஆப்கானில் சோவியத் யூனியனுடன் போரிடுவதற்காக அன்று அல்-கைதா அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, ஆயுதம் வழங்கப்பட்ட ஒரு அமைப்பு.

இந்த அமைப்புடன் போராடுவதாக சொல்லிக் கொண்டு செப்டம்பர் 11 இற்குப் பிறகு அமெரிக்கா இஸ்லியாமிய பயங்கரவாதிகளை அழித்தல் என்ற போர்வையில் களம் இறங்கியது. முஸ்லிம் உலகத்தை முன்னெப்போது இல்லாத பயங்கரம் கொண்டதாக மாற்றியமைத்தது.

பயங்கரவாதம் என்ற சொல்லாடலே செப்டம்பர் 11 இற்குப் பின்னர் முழுமையாக முஸ்லிம்களைக் குறிப்பதாக மாற்றி அமைத்தது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை இஸ்லாம் மார்க்கத்துடன் இணைத்துப் பேசுவது போல், ஊடகங்கள் ஏனையவர்களை அவர்களின் மார்க்கத்துடன் இணைத்துப் பேசுவதில்லை. காந்தியை கொலை செய்தவர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்கள், தாய்லாந்திலும், மியன்மாரிலும், இலங்கையிலும் முஸ்லிம் விரோத வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படுகின்ற புத்த பிக்குகள் யாரும் தங்கள் மதத்தின் பெயரால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுவதில்லை.

தனது பிரித்தாளும் தந்திரங்களின் மூலம் இன மற்றும் மத வேற்றுமைகள் அடிப்படையில் மத்திய கிழக்கில் பல சிறிய நாடுகளை உருவாக்குவதையே அமெரிக்கா தன் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதே போன்று தன் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவே அல்-கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புக்களையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.

கடைசியாக, இது தொடர்பில் அமெரிக்க பத்திரிகையாளர் ஸ்டீபன் லெண்ட்மான் அவர்களுடைய ஒரு கருத்துடன் நிறைவு செய்வோம். நிரந்தர யுத்தம் என்பது அமெரிக்க உத்தியோகபூர்வக் கொள்கை. யுத்த வீரர்களாகிய ஜனாதிபதிகள் வரிசையில் ஒபாமா இறுதியானவர். அவர் நேரடி மற்றும் மறமுக யுத்தங்கள் பலவற்றை தொடுத்தார். இதனை தன் பதவிக் காலம் முழுவதும் அவர் செய்திருக்கிறார். மனதளவில் கூடுதல் மரணங்களையும், அழிவுகளையும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்க கலாசாரம் வன்முறையானது. எப்போதும் அது இப்படித்தான் இருந்திருக்கிறது. சமாதானத்தின் பெயரால் அது யுத்தங்களைப் புகழ் பாடுகின்றது. இதுவரைக்கும் அதிக கொலைகளைப் புரிந்த நாடாக மேற்கு நாடுகள் மத்தியில் அமெரிக்காவே திகழ்கிறது